Published:Updated:

உ.பி அதிர்ச்சி: கல்லூரி வளாகத்தில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! - மாணவர்கள் 8 பேர் கைது

பாலியல் வன்கொடுமை (Representational Image)
பாலியல் வன்கொடுமை (Representational Image)

சிறுமியின் அழுகுரலைக் கேட்ட பிறகு அங்கு சென்ற காவல்துறையினர், பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்சியில் 17 வயது சிறுமி கல்லூரி வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவர்கள் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஜான்சியில் ஒரு கல்லூரியில், கடந்த ஞாயிறு அன்று அம்மாநில சிவில் சர்வீஸ் தேர்வு நடந்துகொண்டிருந்தது. அப்போது அங்கு 17 வயது சிறுமி ஒருவர், தன் நண்பரைப் பார்ப்பதற்காக சென்றிருக்கிறார். ஒரேயொரு பாதுகாவலர் மட்டுமே கல்லூரியில் பணியில் இருந்த நிலையில், அவரும் தேர்வு வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
Representational Image

தேர்வு பாதுகாப்புப் பணியில் ஈடுபட வந்திருந்த காவல்துறையினரும், அந்த வேலையில் ஈடுபட்டிருந்தனர். இந்தச் சூழலில் அந்தச் சிறுமி, அவரின் நண்பர் ஆகியோரை மிரட்டிய 12 பேர் கொண்ட ஒரு கும்பல், யாருமில்லாத இடத்துக்கு அவர்களை அழைத்துச் சென்றிருக்கிறது. அவர்களில் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சிறுமி, காவல்நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அதை வீடியோவாக எடுத்து, மிரட்டிய அந்தக் கும்பல் தன்னிடமிருந்து ரூபாய் 2,000-த்தைப் பறித்துச் சென்றதாகவும், தனது நண்பரையும் அந்தக் கும்பல் அடித்ததாகவும் சிறுமி, தனது புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஹத்ராஸ்: `4 பேரும் அப்பாவிகள்; ஆணவக்கொலையால்தான் அவர் இறந்தார்’ - சர்ச்சையைக் கிளப்பிய பா.ஜ.க தலைவர்

சிறுமியின் அழுகுரலைக் கேட்ட பிறகு அங்கு சென்ற காவல்துறையினர், பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தச் செயலில் ஈடுபட்ட அனைவரும் அந்தக் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்கள். பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளான ரோஹித் சைனி, பரத் உட்பட எட்டுப் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.
தினேஷ்குமார். பி - ஜான்சி எஸ்.எஸ்.பி

``குற்றம்சாட்டப்பட்டவர்களை மூன்று தனிப்படை அமைத்து தேடிவருகிறோம். போக்சோ உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது’’ என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

`குற்றம்சாட்டப்பட்டவர்களைப் பிடிப்பதற்கு காவல்துறையினருக்கு கல்லூரி சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்’ என்று அந்தக் கல்லூரியின் முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு