Published:Updated:

தேர்வில் மதிப்பெண் குறைவாகப் போட்டதால் விரக்தி... பெண் ஆசிரியரைக் கொன்றார்களா 16 வயது மாணவர்கள்?

கொலை

அமெரிக்காவில், மதிப்பெண் குறைவாகப் போட்ட காரணத்தால், 16 வயது மாணவர்கள் இரண்டு பேர் பெண் ஆசிரியரைக் கொன்றதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தேர்வில் மதிப்பெண் குறைவாகப் போட்டதால் விரக்தி... பெண் ஆசிரியரைக் கொன்றார்களா 16 வயது மாணவர்கள்?

அமெரிக்காவில், மதிப்பெண் குறைவாகப் போட்ட காரணத்தால், 16 வயது மாணவர்கள் இரண்டு பேர் பெண் ஆசிரியரைக் கொன்றதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கொலை

அமெரிக்காவில், 16 வயது மாணவர்கள் இரண்டு பேர், மார்க் (கிரேடு) குறைவாகப் போட்ட காரணத்துக்காக, பெண் ஆசிரியரைக் கொன்றதாகக் கூறப்படும் சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. நோஹேமா கிராபர் (Nohema Graber) எனும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியை, ஃபேர்ஃபீல்ட் (Fairfield) பகுதியில் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். மேலும், அவரின் உடல் அருகிலுள்ள பூங்காவில், ரயில் பாதையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

கொலை
கொலை

பின்னர் அடுத்த சில மணி நேரத்திலேயே, இந்தச் சம்பவம் தொடர்பாக 16 வயதுடைய இரண்டு மாணவர்களை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். மேலும், போலீஸார் அந்த இரண்டு மாணவர்களை வில்லார்ட் மில்லர் (Willard Miller), ஜெர்மி குடேல் (Jeremy Goodale) எனப் பெயரிட்டிருக்கின்றனர். இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார், ``2021, நவம்பர் 2-ம் தேதி அன்று மில்லர் தன்னுடைய மோசமான மதிப்பெண் குறித்து விவாதிக்க நோஹேமா கிராபரைச் சந்தித்திருக்கிறார். பின்னர் பள்ளி முடிந்ததும் நோஹேமா கிராபர், தான் வழக்கமாகச் செல்லும் பூங்காவுக்கு நடந்து சென்றிருக்கிறார். அடுத்த ஒரு மணி நேரத்திலேயே அவர், ஒரு வேனின் முன்னிருக்கையில் இரண்டு ஆண்களுடன் சென்றதை நேரில் பார்த்தவர்கள் கூறினர்" என்று தெரிவித்தனர்.

நீதிமன்ற விசாரணை
நீதிமன்ற விசாரணை

அதைத் தொடர்ந்து மில்லரிடம் போலீஸார் விசாரித்தபோது, நோஹேமா கிராபர், ஸ்பானிஷ் மொழியைக் கற்பித்தவிதத்தில் விரக்தியடைந்ததாகவும், குறைந்த மதிப்பெண்களைப் பற்றி அவரிடம் பேசியதாகவும் தெரிவித்திருக்கிறார். அதையடுத்து நீதிமன்றத்திலும், குறைந்த மதிப்பெண்ணே இதில் கொலைக்கான நோக்கமாக இருப்பதாக நம்பப்படுகிறது என வழக்கறிஞர்கள் தெரிவித்திருக்கின்றனர். இருப்பினும், சிறுவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் அதை மறுத்திருக்கிறார்கள். எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தரப்பில் இன்னும் எந்தவொரு முடிவும் எடுக்கப்படாமல், விசாரணை தொடர்கிறது. இருப்பினும், குற்றம் நிரூபிக்கப்பட்டால், இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் அவர்களுக்கு பரோல் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.