Published:Updated:

குடிக்கு அடிமை; குடும்பத் தகராறில் நடந்த கொலைகள்!- தந்தையின் கையால் 3 சிறுமிகளுக்கு நேர்ந்த துயரம்

Representation Image
Representation Image

தெலங்கானாவைச் சேர்ந்த மூன்று சிறுமிகளை தந்தையே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மூன்று குழந்தைகளைக் ஏரியில் வீசி கொடூரமாக கொலை செய்துள்ளார். மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் சையது ஃபயாசூதின் என்ற அந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஃபயாசூதினால் கொல்லப்பட்ட 3 சிறுமிகளும் 10 வயதுக்குட்பட்டவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Representation Image
Representation Image

இதுகுறித்து பேசிய கம்மாரெட்டி காவல்துறையினர், ``தெலங்கானா மாநிலம் கம்மாரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சையது ஃபயாசூதீன். இவருக்கும் நிலோஃபர் என்ற பெண்ணுக்கும் திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான ஃபயாசூதின் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார். தினசரி வேலைக்குச் சென்றாலும் அந்தப்பணத்தை வீட்டுக்குக் கொடுப்பதில்லை. இதனால் குடும்பத்தைக் காப்பாற்றும் பொருட்டு நிஃலோபர் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு துணி தைத்துக்கொடுக்க ஆரம்பித்தார்.

மனைவி வேலை செய்வதால், நாளடைவில் தொடர்ந்து வேலைக்குச் செல்வதை ஃபயாசூதின் விட்டுவிட்டார். அதுமட்டுமின்றி தினசரி மது குடிப்பதற்குப் பணம் கேட்டு மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். வியாழக்கிழமை இரவு கணவன் மனைவி இடையே சண்டை அதிகமானதால் தன் நான்கு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தன் சகோதரன் வீட்டுக்குச் சென்றுவிட்டார் நிஃலோபர்.

Representation Image
Representation Image

இந்த நிலையில், நேற்று காலை தன் மைத்துனரின் வீட்டுக்குச் சென்ற ஃபயாசூதின் தன் மனைவி மற்றும் குழந்தைகளை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். `குடிப்பழக்கத்தை கைவிட்டுவிட்டு ஒழுங்காக வேலைக்குச் சென்றால்தான் உன்னுடன் குடும்பம் நடந்த வருவேன்’ என மனைவி கூறியுள்ளார். உடனே ஃபயாசூதின், `இனிமேல் ஒழுங்காக வேலைக்குச் செல்கிறேன்' எனக் கூறி மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளார். வீட்டுக்குச் சென்றதும், `குழந்தைகளை தர்காவுக்கு அழைத்துச் செல்கிறேன்' எனக் கூறிச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அவர்களின் 5 வயது மகன் அழுதுகொண்டே வந்துள்ளார்.

என்ன நடந்தது என விசாரித்ததில், தர்கா செல்லும் வழியில் நால்வரை அடித்து துன்புறுத்தியாக சிறுவன் கூறியுள்ளார். இதையடுத்து, நிஃலோபர் தன் தம்பி வீட்டுக்குச் சென்று நடந்ததைக் கூறியுள்ளார். நீண்ட நேரமாகியும் குழந்தைகள் திரும்பி வராததால் நிஃலோபர் குழந்தைகளை தேடிச் சென்றுள்ளார். ஏரிக்கரையில் ஃபயாசூதின் மட்டும் அமர்ந்துள்ளார். அவரிடம் குழந்தைகள் குறித்து கேட்டதற்கு எந்தப் பதிலும் கூறவில்லை. இதையடுத்து, அக்கம்பக்கத்தில் தேடியுள்ளளார். கரையில் சிறுமிகளின் செருப்புகள் கிடந்துள்ளன.

Representation Image
Representation Image

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் தகவலைக் கூறினார். கிராம மக்கள் வந்து தேடியபோது ஏரியில் சிறுமிகள் சடலமாகக் கிடந்துள்ளனர். இதையடுத்து, காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அவரின் மனைவி அளித்த புகாரின் பேரில் கொலை வழக்காகப் பதிவுசெய்து ஃபயாசூதினை கைது செய்துள்ளோம். மனைவி மீதான ஆத்திரத்தில் குழந்தைகளைக் கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு