Published:Updated:

`கள்ளுக் கடை நட்பு... சுற்றுலா.. 17 கொலைகளும் ஒரே டைப்!'- தெலங்கானா சீரியல் கில்லர் சிக்கிய பின்னணி

சீரியல் கில்லர் யெருகலி ஸ்ரீனு
News
சீரியல் கில்லர் யெருகலி ஸ்ரீனு

முதலில் ஸ்ரீனு தான் பேச்சுக் கொடுத்துள்ளார். அப்போது தேவர்கத்ராவைச் சேர்ந்த ஒருவர் தனக்கு 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதைத் திருப்பி தர மறுப்பதாகவும், அதை வாங்கித் தர உதவினால் 4 ஆயிரம் ரூபாய் கமிஷன் தருவதாக அலிவெல்லாமாவிடம் ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளான்.

Published:Updated:

`கள்ளுக் கடை நட்பு... சுற்றுலா.. 17 கொலைகளும் ஒரே டைப்!'- தெலங்கானா சீரியல் கில்லர் சிக்கிய பின்னணி

முதலில் ஸ்ரீனு தான் பேச்சுக் கொடுத்துள்ளார். அப்போது தேவர்கத்ராவைச் சேர்ந்த ஒருவர் தனக்கு 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதைத் திருப்பி தர மறுப்பதாகவும், அதை வாங்கித் தர உதவினால் 4 ஆயிரம் ரூபாய் கமிஷன் தருவதாக அலிவெல்லாமாவிடம் ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளான்.

சீரியல் கில்லர் யெருகலி ஸ்ரீனு
News
சீரியல் கில்லர் யெருகலி ஸ்ரீனு

டிசம்பர் 17-ம் தேதி மாலை 6 மணியளவில் தெலங்கானாவின் மஹ்புப்நகர் மாவட்டத்தின் டோக்கூர் கிராமத்தில் கால்வாய் அருகே பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக தேவரகத்ரா போலீஸுக்கு தகவல்வந்துள்ளது. இதையடுத்து விசாரணைக்குச் போலீஸார் 45 முதல் 50 வயதுடைய பெண் கழுத்து நெரித்து கொல்லப்பட்ட நிலையில் சடலமாக கிடக்க உடலைக் கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.

ஒரு வாரமாக விசாரணை நடந்துவந்த நிலையில் நேற்று அதே பகுதியைச் சேர்ந்த 42 வயதான யெருகலி ஸ்ரீனுவை கைது செய்தனர். கைதுக்கு பின் மஹ்புப்நகர் போலீஸார் இந்த யெருகலி ஸ்ரீனுவைப் பற்றியும் இந்தக் கொலையைப் பற்றியும் அதிரவைக்கும் தகவல்களை கூறினர்.

Murder
Murder

கொலைச் செய்யப்பட்ட அந்தப் பெண்ணின் பெயர் சிட்டி அலிவெல்லாமா. கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் அவர் எங்கு சென்றார் என்ற விவரங்களை போலீஸார் முதலில் சேகரித்துள்ளனர். அதன்படி 16ம் தேதி திருமால்தேவ் கேட் பகுதியில் உள்ள கள்ளுக்கடை ஒன்றில் அலிவெல்லாமா மது அருந்திய தகவல் கிடைத்துள்ளது.

விசாரணையின் தொடக்கப்புள்ளியாக இந்த தகவல் கிடைக்க இதுதொடர்பாக மேலும் விசாரித்துள்ளனர். அலிவெல்லாமா கள்ளுக்கடையில் மது அருந்தும்போது யெருகலி ஸ்ரீனுவும் அங்கு மது அருந்தியுள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

முதலில் ஸ்ரீனு தான் பேச்சுக் கொடுத்துள்ளார். அப்போது தேவர்கத்ராவைச் சேர்ந்த ஒருவர் தனக்கு 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதைத் திருப்பி தர மறுப்பதாகவும், அதை வாங்கித் தர உதவினால் 4 ஆயிரம் ரூபாய் கமிஷன் தருவதாக அலிவெல்லாமாவிடம் ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளான். முதலில் அவருடன் செல்ல மறுத்த அலிவெல்லாமா பின்பு நம்பி ஸ்ரீனுவுடன் சென்றுள்ளார்.

இரண்டு கள்ளுப் பாட்டில்களையும், மது பாட்டில்களையும் வாங்கிக்கொண்டு தேவர்கத்ராவுக்கு கிளம்பியுள்ளனர். தேவர்கத்ராவுக்கு செல்லும் வழியிலேயே இரண்டு இடங்களில் வண்டியை நிறுத்தி கொண்டுவந்த கள்ளையும் மதுவையும் குடித்துள்ளனர்.

சீரியல் கில்லர் யெருகலி ஸ்ரீனு
சீரியல் கில்லர் யெருகலி ஸ்ரீனு

பின்பு டோக்கூர் கிராமத்துக்கு வந்தபோது அங்கேயும் வண்டியை நிறுத்தி மதுவை குதித்துள்ளனர். அப்போது அலிவெல்லாமா அதிகபோதையாக ஸ்ரீனு தான் மறைத்துவைத்திருந்த கத்தியை வைத்து குத்தியும், தலையை தரையில் அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலைச் செய்துள்ளார். பின்பு அலிவெல்லாமா அணிந்திருந்த தங்க நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஸ்ரீனு தப்பியுள்ளார்.

கள்ளுக்கடையில் மது அருந்திய பின் அலிவெல்லாமா கொலை செய்யப்பட்டது தெரிந்ததும் போலீஸார் ஸ்ரீனுவை தேடியுள்ளனர். காரணம் ஸ்ரீனுவுக்கு இதுதான் பணி என்றும், அவர் ஒரு சீரியல் கில்லர் என்றும் கூறி அதிரவைக்கின்றனர் மஹ்புப்நகர் போலீஸார்.

இதுதொடர்பாக பேசியுள்ள மஹ்புப்நகர் டிஎஸ்பி ராஜேஸ்வரி, ``யெருகலி ஸ்ரீனு மஹ்புப்நகரைச் சேர்ந்தவர். எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருக்கும் இவர் 17 கொலைகளை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறார். 2007ம் ஆண்டு தனது தம்பியை கொலைச் செய்த குற்றத்தில் ஆயுள்தண்டனைப் பெற்று சிறையில் அடைக்கப்பட்டார் என்றாலும் இரண்டே ஆண்டுகளில் சிறையில் இருந்து தப்பியுள்ளார்.

பின்னர் ஒரு சில நாட்களில் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2013ல் நன்னடத்தை விதியின் கீழ் விரைவாக விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியேவந்த பிறகும் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடத் தொடங்கினார்.

சீரியல் கில்லர் யெருகலி ஸ்ரீனு
சீரியல் கில்லர் யெருகலி ஸ்ரீனு

கள்ளுக்கடைக்கு வரும் பெண்கள்தான் அவரின் டார்கெட். அவர்களிடம் நைஸாக பேச்சுக் கொடுத்து பழக்கப்படுத்திக் கொண்டு பின்னர் அவர்களை சுற்றுலா அழைத்துச் சென்று மதுபோதையில் அவர்களை கொலை செய்து பின்னர் நகைகளை பறித்துக்கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவார்.

இதுதான் அவனது ஸ்டைல். இந்தக் கொலையிலும் அவனது ஸ்டைலே அவனைக் காட்டிக்கொடுத்தது. 2014 ஆம் ஆண்டில், ஷாட்நகர், பாலநகர் மற்றும் வாங்கூர் காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பெண்களை ஸ்ரீனுமீது கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில், ஷாம்நகரில் ஒரு பெண்ணையும், கேஷம்பேட்டிலும் ஒரு பெண்ணைக் கொன்றதாக காவல்துறையினர் குற்றம் சாட்டினர், தவிர ஷம்ஷாபாத் கிராம காவல் நிலையத்தின் அதிகார வரம்பில் மூன்று கொலைகளைச் செய்தார்கள். ஒரு கொலைக்காக 2015-ல் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, 2018 வரை சிறையில் இருந்தான். 2018ல் விடுதலையானதிலிருந்து இதே ஸ்டைலில் நான்கு கொலை செய்திருக்கிறான்.

நகைகளை எடுத்த பின்னர் அதை தன் மனைவியிடம் கொடுத்துவந்து விற்பனை செய்து வாழ்ந்துவந்துள்ளான். தனது தம்பி, உறவினர் பெண் உட்பட மொத்தம் எட்டுப் பெண்களுக்கு கொலை செய்துள்ளான். 10 வருடங்களில் 15 கொலைகளைச் செய்துள்ளான்" என்றார்.

டிஎஸ்பி ராஜேஸ்வரி
டிஎஸ்பி ராஜேஸ்வரி

இப்படி மொத்தம் 17 கொலைச் சம்பவங்களில் ஸ்ரீனுவுக்கு தொடர்பு இருக்கிறது என்று போலீஸ் குற்றம் சுமத்தியிருந்தாலும், 11 வழக்குகளில் போதிய சாட்சியங்கள் இல்லாததால் அவனை நீதிமன்றம் விடுவித்துள்ளது. எனினும் ``இதில் மேல்முறையீடு செய்துள்ளோம்.

நிச்சயம் இந்த முறை அவனுக்கு தண்டனை பெற்றுத் தருவோம். பெரும்பாலான குற்றங்களை இந்த முறை விசாரணையில் ஒத்துக்கொண்டுள்ளான்" எனப் போலீஸார் தெரிவித்துள்ளனர். அப்படி ஸ்ரீனு மீதான கொலைக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் இந்தியாவின் மிகப்பெரிய சீரியல் கில்லர் அவன் தான்