Published:Updated:

தெலங்கானா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: ஆளுங்கட்சி கவுன்சிலர் மகன் கைது! - போலீஸ் விசாரணை

பாலியல் வன்கொடுமை ( representational image )

20 வயது பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக, தெலங்கானா மாநில ஆளுங்கட்சியான டி.ஆர்.எஸ் கட்சியின் கவுன்சிலர் மகன் உட்பட 2 பேரை போலீஸ் கைதுசெய்துள்ளது.

தெலங்கானா மாநிலம், சூர்யாபேட் மாவட்டத்தில் 20 வயது இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அம்மாநில ஆளுங்கட்சியான தெலங்கானா ராஷ்ட்டிர சமிதி கட்சியின் கவுன்சிலர் மகன் உட்பட இரண்டு பேரை போலீஸ் கைதுசெய்துள்ளது.

இது குறித்துப் பேசிய தெலங்கானா போலீஸ் அதிகாரி, கோடாட் காவல் நிலையத்துக்குத் தன் தாயுடன் வந்த பாதிக்கப்பட்ட பெண், கடந்த 17-ம் தேதி தன்னைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக, டி.ஆர்.எஸ் கட்சியின் கவுன்சிலர் மகன் ஷேக் கவுஸ், சாய் ராம் ஆகியோர் மீது புகாரளித்தார்.

கைது
கைது

அதனடிப்படையில், சம்பத்தப்பட்ட இருவரையும், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியிருக்கிறோம். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது" எனக் கூறியிருந்தார்.

இதேபோல் கடந்த சில நாள்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில், கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், ஆளுங்கட்சியாக திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் மகன் கைதுசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism