Published:Updated:

பெற்றோரிடம் தங்கநகை வாங்கிவருமாறு சண்டைபோட்ட கணவன்... செங்கல்லால் அடித்துக் கொன்ற மனைவி!

கணவன் - மனைவி சண்டை ( சித்திரிப்புப் படம் )

தெலங்கானாவில், தங்கநகை தொடர்பாக தம்பதியினரிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில், கணவனை மனைவி செங்கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெலங்கானா மாநிலம், பெத்தப்பள்ளி மாவட்டத்தில் தங்கநகை தொடர்பாகத் தம்பதியினரிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில், கணவனை மனைவி செங்கல்லால் அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், கணவனைக் கொன்ற மனைவி தாமாக போலீஸில் சரணடைந்திருக்கிறார்.

உயிரிழப்பு
உயிரிழப்பு
சித்திரிப்புப் படம்

இது குறித்து ஊடகங்களில் வெளியான தகவலின்படி, சம்பந்தப்பட்ட தம்பதி சுமன், ஸ்பந்தனா எனத் தெரியவந்திருக்கிறது. 5 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்ட இவர்கள் ராமகுண்டம் பகுதியின் என்.டி.பி.சி டவுன்ஷிப்பிலுள்ள பணியாளர் குடியிருப்பில் வசித்துவந்திருக்கின்றனர். கணவன் சுமன் ஆட்டோ டிரைவராகவும், மனைவி ஸ்பந்தனா வீட்டு வேலை செய்தும் குடும்பம் நடத்தி வந்திருக்கின்றனர்.

போலீஸ்
போலீஸ்

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று, சுமன் தன்னுடைய மனைவியிடம், வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் தங்கநகைகளை வாங்கிவருமாறு தகராறு செய்திருக்கிறார். அதைத் தொடர்ந்து இருவருக்குமிடையில் வாக்குவாதம் அதிகரிக்க ஆத்திரமடைந்த மனைவி, கணவனை செங்கல்லைக்கொண்டு தாக்கியிருக்கிறார். இதில் தலையில் பலத்த காயமடைந்த கணவன் உயிரிழந்தார். பின்னர் மனைவி தாமாக முன்வந்து போலீஸில் சரணடைந்திருக்கிறார். போலீஸாரும், அவர் மீது கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.