Published:Updated:

`சிலைகளை வாங்குவதுபோல் சென்ற தனிப்படையினர்!’ - 9 சாமி சிலைகளுடன் சிக்கிய கோயில் குருக்கள்

சிலை திருட்டு
சிலை திருட்டு

9 தெய்வச் சிலைகளைத் திருடி விற்க முயன்ற கோயில் குருக்கள்.

நடராஜர், பஞ்சலோக அம்மன் உட்பட 9 கோயில் சிலைகளைத் திருடி விற்க முயன்ற கோயில் குருக்கள், டிரைவர் என இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருப்பது நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிலைகளை திருடி விற்க முயன்ற கோயில் குருக்கள்
சிலைகளை திருடி விற்க முயன்ற கோயில் குருக்கள்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோயில் சிலைகள் விற்க முயற்சி நடப்பதாகத் தமிழக சிலைதிருட்டு தடுப்புப் பிரிவு சிறப்பு புலனாய்வுக் குழுவுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. அன்பு மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் இந்தச் சிலைகளை வாங்குவதுபோல வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்ற டிரைவரிடம் பேரம் பேசினர். அப்போது அவர் பழைமையான பஞ்சலோக அம்மன் சிலை ரூ.90 லட்சத்துக்கும், நடராஜர் சிலை ரூ.30 லட்சத்துக்கும் விற்பனைக்கு இருப்பதாகக் கூறி அப்பகுதி கோயில்களில் குருக்களாகப் பணியாற்றும் பைரவ சுந்தரம் என்பவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கே பஞ்சலோக சிவகாமசுந்தரி அம்மன் சிலை, நடராஜர் சிலைகள் 2, வள்ளி-தெய்வானையுடன் முருகன் சிலை உட்பட 9 சிலைகள் இருந்ததைக் கைப்பற்றினர். இநக்ச் சிலைகளை 1.2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தனர்.

இதுபற்றி போலீஸார் கூறுகையில், "பஞ்சலோக சிவகாமசுந்தரி அம்மன் சிலை வேதாரண்யம் அருகே தாமரைக்குளம் என்ற கோயிலில் உள்ள சிலையாக இருக்கலாம் எனத் தெரிகிறது. மற்ற சிலைகள் எங்கிருந்து வந்தன. எங்கு திருடப்பட்டன என்பது குறித்து விசாரணை செய்து வருகிறோம்" என்றனர்.

சிலை திருட்டு
சிலை திருட்டு

"சுமார் 7 கோயில்களில் குருக்களாகப் பணியாற்றி வரும் பைரவசுந்தரம் கொஞ்சம் அதிரடி பேர்வழி. பில்லி, சூனியம், ஏவல் மாந்திரீகம் என மக்களை ஏமாற்றி பெரும் பணம் பறிப்பவர் என்றும், அவர் பூஜை செய்யும் கோயில்களில் போலி சிலைகளை வைத்துவிட்டு ஒரிஜினல் சிலைகளைத் திருடியிருக்கலாம் என்கின்றனர்.

பின் செல்ல