Published:Updated:

`படிக்க வைக்கிறோம்; நல்லா பாத்துக்கிறோம்!’ -உறவினர்களால் 9 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

9 வயதுச் சிறுமியைக் கொலை செய்து வீசிய இருவரை மகாராஷ்டிரா போலீஸார் கைது செய்துள்ளனர்.

Representational Image
Representational Image

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரகாஷ் ரத்தோட் - அனிதா தம்பதி. அவுரங்காபாத்தில் உள்ள தனது உறவினரின் 9 வயது மகளைப் படிக்க வைப்பதாகக் கூறி பிரகாஷ், தான் வசிக்கும் தானே பகுதிக்கு அழைத்து வந்துள்ளார். பிரகாஷ் வசதி வாய்ப்புடன் இருப்பதால் ஏழ்மை நிலையில் தவித்த சிறுமியின் குடும்பம் மகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு இவருடன் அனுப்பியுள்ளனர். `குழந்தையின் படிப்புச் செலவை நானே ஏற்கிறேன். குழந்தையை நல்லபடியாகப் பார்த்துக்கொள்கிறேன்' என்று கூறி அழைத்து வந்துள்ளார்.

மாதிரி புகைப்படம்
மாதிரி புகைப்படம்

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறுமியின் குடும்பத்தினர் பிரகாஷைத் தொடர்பு கொண்டு சிறுமியிடம் பேச வேண்டும் எனக் கூறியுள்ளனர். ஆனால், அவரிடமிருந்து சரியான பதில் இல்லை. இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் தாய், கடந்த 4-ம் தேதி அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

புகாரையடுத்து பிரகாஷ் தம்பதியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், அவர்கள் அளித்த பதில் காவல்துறையினருக்குத் திருப்தியளிக்கவில்லை. கடத்தல் வழக்காக இதைப் பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணையில் இறங்கினர். பிரகாஷ் வீடு அமைந்துள்ள பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். பிரகாஷ் தம்பதி நள்ளிரவில் டெம்போ வேனில் டிரம் ஒன்றை ஏற்றிச் செல்வதை போலீஸார் கண்டுபிடித்தனர்.

கைது
கைது
மாதிரி புகைப்படம்

இதுதொடர்பாக போலீஸார் விசாரித்ததில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. சிறுமியைக் கொலை செய்து தூக்கி வீசியதாக பிரகாஷின் மனைவி போலீஸ் விசாரணையில் சொல்லியிருக்கிறார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பிரகாஷ் தலைமறைவாக உள்ளார். இந்தக் கொலைச் சம்பவத்தில் உடந்தையாக இருந்த பிரகாஷின் உறவினர் ஆகாஷ் சவான் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

`தவறான நட்பு; 31 இடங்களில் கத்திக்குத்து!' - தடம் மாறிய கேரளப் பெண் கொடூரக் கொலை

இந்தச் சம்பவம் குறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், ``பிரகாஷ், சிறுமியைப் பள்ளியில் சேர்ப்பதாகக் கூறி அழைத்து வந்துள்ளார். ஆனால், சிறுமியை எந்தப் பள்ளியிலும் சேர்க்கவில்லை. வழக்கு விசாரணையின்போது இந்தத் தகவல் தெரியவந்தது. வீட்டுக்கு அழைத்து வந்த நாளிலிருந்தே சிறுமியைக் கொடுமைப்படுத்தியுள்ளனர். வீட்டு வேலைசெய்ய நிர்பந்தித்துள்ளனர். பணிப்பெண் போன்று நடத்தியுள்ளனர். சிறுமி என்றும் பாராமல் அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளனர். சரியான உணவு கூட வழங்கவில்லை. காரமான மிளகாயைக் கொடுத்து சாப்பிடக் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

Representational Image
Representational Image

சிறுமிக்குப் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருந்துள்ளது. நவம்பர் 7-ம் தேதி தூக்கத்தில் படுக்கையிலே சிறுநீர் கழித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து சிறுமியின் சடலத்தை ஒரு பையில் வைத்து தண்ணீர் நிரப்பும் டிரம்மில் வைத்துள்ளனர். பின்னர், அந்த டிரம் முழுவதும் சிமென்ட்டைக் கொட்டியுள்ளனர். சிறுமியின் உடல் அழுகினாலும் அதிலிருந்து துர்நாற்றம் வெளியே வரக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்துள்ளனர். உறவினரான ஆகாஷ் சவானுக்குச் சொந்தமான டெம்போவில் நவம்பர் 12-ம் தேதி அந்த டிரம்மைக் கொண்டுசென்று ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் வீசியுள்ளனர்.

Representational Image
Representational Image

குழந்தையைக் காணவில்லை எனச் சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவர்களிடம் நடத்திய விசாரணையின் மூலம் டிரம்மைக் கைப்பற்றியுள்ளோம். சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம்” என்றனர்.