குறிப்பு: இந்தியாவில் கொள்ளையர்களின் வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதுடன், சமீபத்தில் கோவையில் நடந்த சில தங்கநகைக் கொள்ளைகளின் பின்னணித் தகவல்களையும் விவரிக்கிறது இந்த மினி தொடர்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், தக்கிகளை ஒழிக்க நிறைய தனிப்படைகளை அமைத்திருந்தனர். அதில் பிரதான படையின் உயர் அதிகாரி ஸ்லிமன். மற்றொரு பக்கம், நிஜாம் அரசாட்சியிலும் தக்கிகள் ஒழிப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதில் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் கேப்டன் பிலிப் மெடோஸ் டெய்லர். 1800-களின் தொடக்கங்களில் பிரிட்டிஷ் இந்தியாவில் தக்கிகளைப் பற்றி இவர் எழுதிய ‘Confessions of a Thug’ (ஒரு தக்கியின் வாக்குமூலம்) நூல் மிகப் பிரபலம். இவர்கள் இருவருமே பிரபல தக்கியான ஃப்ரிங்காவைத் தேடித் தேடி அலைந்தார்கள். இதில் ஸ்லிமனின் தனிப்படை, தக்கிகள் கூட்டத்தினரைத் தேடித் தேடி அழிப்பதில் முன்னிலைவகித்தது. மிகப்பெரிய தக்கிக் கூட்டங்கள் அடுத்தடுத்து பிடிப்பட்டன. ஆனால், ஃப்ரிங்காவை மட்டும் நெருங்கவே முடியவில்லை என்பதுடன், ‘ஃப்ரிங்கா ஒரு பேய், அவன் பூதம்... அவனைத் தேடிச் சென்றாலே அவன் அருவமாக மறைந்துவிடுவான். தேடிவரும் படையினரையும் துப்பு கொடுக்கும் மக்களையும் கொத்துக் கொத்தாக ரத்தம் கக்கவைத்துச் சாகடிப்பான்’ என்றெல்லாம் ஏராளமான வதந்திகள் பரவிவந்தன.

இவ்வளவு இடர்ப்பாடுகளையும் கடந்து ஒருமுறை ஸ்லிமனின் படை, ஃப்ரிங்கா தங்கியிருப்பதாகக் கூறப்பட்ட கிராமத்து வீட்டை முற்றுகையிட்டது. தடபுடலாக கறி விருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த ஃப்ரிங்கா, சில நிமிடங்களுக்கு முன்புதான் அங்கிருந்து தப்பியிருந்தான். அவன் விட்டுச் சென்ற தட்டில் பாதி உணவு மிச்சம் இருந்தது. அவனுடைய தாய், மனைவி, குழந்தைகள் மட்டும் பிடிபட்டனர். அவர்களை விசாரித்தபோது, ‘ஃப்ரிங்கா ஒரு தக்கியே அல்ல’ என்று தங்கள் குழந்தைகளின் மீது சத்தியம் செய்தார்கள். உண்மையில் அவன் ஒரு தக்கி என்பது தனிப்படையினர் சொல்லித்தான் அவர்களுக்கே தெரிந்தது.

அப்போது ஃப்ரிங்காவின் ஒன்றுவிட்ட சகோதரன் ஜிர்து என்பவன் தக்கியாகப் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். அவன் முன்பாக ஃப்ரிங்காவின் தாயைக் கொண்டுச் சென்று நிறுத்தினார் ஸ்லிமன். அவன், தாய் முன்பாக மண்டியிட்டு `‘அம்மா என்னை மன்னித்துவிடு. நம் குலம் நேரடி தக்கிக்குலம் அல்ல. எப்படியோ தக்கிகள் பிடியில் சிக்கி, அவர்களாகவே ஆகிவிட்டோம். ஃப்ரிங்கா ஒரு தக்கிதான்’’ என்று தன் அம்மாவிடம் அழுதான்.

இந்தத் தகவல்கள் எப்படியோ ஃப்ரிங்காவிடமும் சென்று சேர்ந்தன. கடும் மனச்சோர்வடைந்தான் அவன். கொஞ்சம் கொஞ்சமாக அவனது கொள்ளைகள் மட்டுப்பட்டன. நடமாட்டங்கள் குறைந்தன. அடுத்தடுத்து அவனுடைய சகாக்கள் பிடிபட்டனர். சில வாரங்கள் கழித்து ஜான்சி அருகில் இருக்கும் ஐந்து கிராமங்களில் ஒன்றில் ஃப்ரிங்கா பதுங்கியிருப்பதாக ஸ்லிமனுக்குத் தகவல் கிடைத்தது. ஐந்து கிராமங்களிலுமே ஸ்லிமனின் தனிப்படையினர் வேட்டை நடத்தினர். இதில் அப்ரூவர் சோகார் என்பவன் காட்டிக்கொடுத்த கிஷ்ராய் கிராமத்தில் ஒரு வீட்டில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த ஃப்ரிங்காவை தனிப்படை போலீஸார் கைதுசெய்தனர். 1830-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அது. எதிர்ப்பு எதுவும் காட்டாமல் சரணடைந்த அவன், சாகர் நகரின் சிறையில் அடைக்கப்பட்டான். சில வருடங்கள் வழக்கு விசாரணை நடந்தது.

ஸ்லிமனே பல்வேறு வழக்குகளில் நீதிபதியாகவும் இருந்தார். ஃப்ரிங்காவின் கைதுக்குப் பிறகுதான் ஆயிரக்கணக்கில் தக்கிகள் பிடிபட்டனர். தக்கிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, வட இந்தியாவில் ஏராளமான இடங்கள் தோண்டப்பட்டன. தோண்டத் தோண்ட பிணக்குவியல்கள்! அந்த வாக்குமூலங்களின்போது பொதுவாக தக்கிகள் பலரும் ஒரேமாதிரியாக சொன்ன ஒரு விஷயம், ‘தேவியின் ஆணைப்படிதான் இதையெல்லாம் செய்கிறோம். எங்களால் கொல்லப்படும் நபர்களை காளிதேவி சொர்க்கத்துக்கு அனுப்புகிறாள். இது ஒரு புனித வாழ்க்கை’ என்கிறார்கள். ஒருவழியாக 18-ம் நூற்றாண்டின் இறுதியில் தக்கிகள் மொத்தமாக ஒழிக்கப் பட்டார்கள். அதன் பிறகு தொடங்கியது பவேரியாக்களின் ஆட்டம்!

2005 - ஜனவரி 10, பின்னிரவு 2.30 மணி. தமிழ்நாடு, கும்மிடிப்பூண்டி தனக்குளம். ஆள் அரவமின்றி இருளில் மூழ்கிக்கிடக்கிறது அந்த ஏரியா. பைபாஸ் சாலையின் ஓரமாக லாரி ஒன்று வந்து நின்றது. வரிசையாக ஆறு பேர் இறங்கினார்கள். பெண்கள் நான்கைந்து பேர் லாரியின் பின் பகுதியில் அமர்ந்து கண்காணிக்கத் தொடங்கினார்கள். இறங்கியவர்கள் கிரீஸ் டப்பாவை எடுத்து முகம், கை, கால் முழுக்க கிரீஸை அப்பிக்கொண்டார்கள். யாரேனும் பிடித்தாலும் வழுக்கிக்கொண்டு தப்பிவிடலாம். அதேசமயம் அவர்களை அடையாளமும் காண முடியாது. இரும்பு பைப்புகள், பட்டாக்கத்திகள், நாட்டுத் துப்பாக்கிகளுடன் சுமார் 500 மீட்டர் தொலைவில் இருந்த ஒரு பங்களாவின் காம்பவுண்ட் சுவர்மீது ஏறி உள்ளே குதிக்கிறது அந்தக் கூட்டம். கும்மிடிப்பூண்டி அ.தி.மு.கழக எம்.எல்.ஏ-வான சுதர்சனத்தின் வீடு அது.

கதவை ஓங்கித் தட்டுகிறார்கள். ‘குழந்தைக்கு அடிப்பட்டிருச்சு... கதவைத் திறங்க...’ என்று அபயக்குரல் எழுப்புகிறார்கள். சத்தம் கேட்டு, சுதர்சனத்தின் இளைய மகன் சதீஷ் கதவைத் திறக்கிறார். கையில் வைத்திருந்த ஆயுதங்களால் சதீஷின் தலையில் ஓங்கி அடிக்கிறான் ஒருவன். பயங்கர அலறலுடன் சாய்ந்தார் சதீஷ்.

சுதர்சனத்தின் மூத்த மகன் விஜயகுமார், அவரின் மனைவி தரை தளத்திலும், சுதர்சனம் முதல் தளத்திலும் உறங்கிக்கொண்டிருந்தனர். மகனின் அலறல் சத்தம் கேட்டு பதறிப்போய் மாடியிலிருந்து ஓடிவருகிறார் சுதர்சனம். அந்தக் கும்பலில் இருந்த ஒருவன், நாட்டுத் துப்பாக்கியால் சுதர்சனத்தைச் சுட்டான். ரத்த வெள்ளத்தில் படிகளில் உருண்டு பிணமானார் சுதர்சனம். கொள்ளையடித்த பிறகு சாவகாசமாகத் தப்பிச் சென்றது அந்தக் கும்பல். விடிந்தவுடன் ஒட்டுமொத்த தமிழகத்திலும் பதற்றம் தொற்றிக்கொண்டது.

கொலை செய்யப்பட்ட சுதர்சனம், அமைச்சராகவும் பதவிவகித்தவர். அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தி உத்தரவிடுகிறார். அப்போதைய வடக்கு மண்டல ஐ.ஜி-யான ஜாங்கிட் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. பல்வேறு தேடுதல் வேட்டைகளுக்குப் பிறகு இந்தக் கொலை, கொள்ளையில் ஈடுபட்டது பவேரியா கொள்ளையர்கள் என்பது உறுதியானது.

2005, செப்டம்பர் மாதம் உத்தரப்பிரதேசத்தில் வைத்து ஓமா என்பவன் தலைமையிலான கும்பலைக் கைதுசெய்கிறது போலீஸ். அடுத்த ஆண்டு மீரட் நகரில் ஓமாவின் தம்பி சுரா மற்றும் விஜய் ஆகியோர் போலீஸ் என்கவுன்டரில் பலியானார்கள். ஓமா, சிறையிலேயே இறந்துபோனான். 2017 நவம்பரில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம், இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டுதான் உருவானது.

“சான்ப்... சான்ப்” என்றபடி ஓடிவந்தார் அந்த உ.பி காவலர். மேலே வந்தவர் சைகையில் கைகளை நீட்டி பாம்புபோல் ஆட்டியபடி, பாம்பு ஒன்று காலைச் சுற்றியதாக விவரித்தார். தனிப்படை போலீஸார் கால்வாயை எட்டிப் பார்த்தபோது அப்படி எதுவும் அங்கு இல்லை. ஆனால், கரும்புக்காட்டில் சற்று தூரத்தில் ஒரு கூட்டம் சலசலத்து ஓடியது அவர்களின் மனதில் நெருடியது. துப்பு கொடுத்த ஒரு நபர் சொன்ன தகவலைவைத்து சுசலைன்கலான் கிராமத்தின் கரும்புக்காட்டுக்குள் புகுந்து முன்னேறிச் சென்றது தனிப்படை. சற்று தூரத்தில் கிணறு ஒன்று, அருகிலேயே மோட்டார் அறை. அறை வாயிலில் இருந்த கட்டாந்தரையில் மதுப்புட்டிகள் சிதறிக் கிடந்தன. சில புட்டிகளில் பாதி அளவுக்கு மது மிச்சம் வைக்கப்பட்டிருந்தது. உணவுப் பண்டங்களும் அப்படியே. அங்கு இருந்த கூட்டம் ஒன்று, அப்போதுதான் தப்பி ஓடியிருக்கிறது என்பதை மட்டும் தனிப்படை யினரால் உணர முடிந்தது.

ஒரு பாலித்தீன் கவரில் சில செய்தித்தாள்கள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பிரித்தார்கள். அதில் அஸ்லாம்கான் பற்றி குற்றச் செய்திகள்! அங்கிருந்து தப்பியது அஸ்லாம்கான்தான் என்பது உறுதியானது. கால்வாயில் பாம்பைப் பார்த்ததாக அலறிய அந்த உ.பி காவலர், அதன் பிறகு எவரின் கண்களையும் சந்திக்கவில்லை. தலைகுனிந்தே இருந்தார்.

மறுநாள் மீண்டும் தொடங்கியது தேடுதல் வேட்டை. இந்த முறை வாகனங்களை மாற்றுகிறார்கள். மூன்று வாகனங்கள். இரண்டு கரும்பு லாரிகள். ஒரு பால் வண்டி. மூன்றிலுமே மஃப்டியில் 16 தனிப்படை போலீஸார் இருந்தார்கள். இந்த முறை கவனமாக அந்த உ.பி காவலர் தவிர்க்கப்பட்டார். மாலை 6-க்கு மணிக்கு முன்பாகவே சுசலைன்கலானை நெருங்கிவிட்டாலும், ஐந்தாறு கிலோமீட்டர் முன்பாக வனப்பகுதியில் ஓரங்கட்டப்பட்டன வாகனங்கள். “காத்திருக்கலாம்... தகவல் வரும்” என்றார் தலைமை தாங்கிய அந்த அதிகாரி.

இரண்டு மணி நேரம் எதுவும் தகவல் இல்லை. போலீஸார் சோர்வடையத் தொடங்குகிறார்கள். இரவு 8 மணியைத் தாண்டியது. சைலன்ட் மோடில் வைக்கப்பட்டிருந்த அந்த அதிகாரியின் மொபைல் ஒளிர்ந்தது. ‘மது வாங்கச் சென்றிருக்கி றார்கள்’ என்றது முதல் தகவல். சில நிமிடங்கள் கழித்து, ‘வந்து அமர்ந்துவிட்டார்கள்... முதல் ரவுண்டு ஓடுகிறது’ என்றது தகவல். ‘அவர்களுக்குள் ஏதோ வாய்த்தகராறு... கடுமையாக மோதிக்கொள்கிறார்கள்’ என்று அடுத்த தகவல் வந்தது. “நாம் இப்போது சிறிது தூரம் முன்னேறுவோம்” என்றபடி வாகனங்களைக் கிளப்ப உத்தரவிட்டார் அந்த அதிகாரி. மணி அப்போது நள்ளிரவு 12-ஐ தாண்டியிருந்தது. கடும் குளிர். கிராமத்தின் ஒதுக்குப்புறமான சாலையின் முகப்பில் நின்றன வாகனங்கள். முகப்புவிளக்குகள் அணைக்கப்பட்டன. மீண்டும் ஒரு தகவல். ‘இப்போது உள்ளே போக வேண்டாம். வாகனச் சத்தம் கேட்டால் ஓடிவிடுவார்கள். சுற்றிலுமே கரும்புக்காடு. இருட்டில் தேடிப் பிடிக்க முடியாது’ என்று மெசேஜ் வந்தது.

உத்தரப்பிரதேசத்தின் ஏதோ ஒரு குக்கிராமத்தின் அத்துவான காட்டின் நடுவே குளிரில் நடுங்கிக்கொண்டு காத்திருந்தார்கள் தமிழகத்திலிருந்து சென்ற தனிப்படையினர். மணி பின்னிரவு 1.30. அதிகாரியின் மொபைல் ஒளிர்ந்தது. ‘நல்ல போதையில் தலை சாயத் தொடங்கிவிட்டது. இப்போது வந்தால் அமுக்கிவிடலாம்’ என்றது அந்தத் தகவல். சீறிப்பாய்ந்தன வாகனங்கள். மணி 1.45. அறுவடை செய்யப்பட்ட கரும்புத் தோட்டம் ஒன்றில் ஜமுக்காளத்தை விரித்து போதையில் சலம்பிக் கொண்டிருந்தது ஒரு கூட்டம். கூட்டத்திலேயே ஒருவர் போலீஸிடம் கை ஜாடை காட்டிவிட்டு ஓடி மறைந்தான். துப்பாக்கிமுனையில் அஸ்லாம்கானையும் அவனுடன் இருந்தவர்களையும் சுற்றிவளைத்தது போலீஸ்!

கரும்புத் தோட்டம் ஒன்றில் ஜமுக்காளத்தை விரித்து போதையில் சலம்பிக்கொண்டிருந்தது ஒரு கூட்டம். கூட்டத்திலேயே ஒருவர் போலீஸிடம் கை ஜாடை காட்டிவிட்டு ஓடி மறைந்தான். துப்பாக்கிமுனையில் அஸ்லாம்கானையும் அவனுடன் இருந்தவர்களையும் சுற்றிவளைத்தது போலீஸ்!

மறுநாள் அஸ்லாம்கானை தங்கள் பாணியில் ஸ்பெஷலாக விசாரிக்கிறார்கள் தமிழக தனிப்படையினர்.

மொழிப்பிரச்னை என்பதால், நகைகளைப் பறிகொடுத்த ராஜனே அஸ்லாம்கானிடம் பேசி, வாக்குமூலத்தை எழுதத் தொடங்குகிறார். “முடிந்த அளவுக்கு உன்னை அடிக்காமல் பார்த்துக்கொள்கிறேன். நீ உண்மையை மட்டும் சொல்லிவிடு” என்கிறார் ராஜன்.

“ஆமாம்... அந்தக் கோவை கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது நாங்கள்தான்” என்று ஒப்புக்கொண்டான் அஸ்லாம்கான்.

தமிழக தங்கநகை வியாபாரிகளை நடுநடுங்க வைக்கும் வாக்குமூலம் அது.

(வேட்டை தொடரும்)