குறிப்பு: இந்தத் தொடர், வட மாநில கொள்ளையர்களின் பின்னணியை விவரிக்கிறது. அத்துடன் பல்வேறு உண்மைச் சம்பவங்களையும் அதன் உள்விவகாரங்களையும் தோலுரிக்கிறது. ஒரு விஷயம் தெரியுமா... இப்போதெல்லாம் நம் போலீஸ் படை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் வருவதுபோல் வட இந்தியாவில் கொள்ளையர்களை ஓடிப்பிடித்து, ஜீப்பிலும் குதிரையிலும் மாறி மாறிப் பறந்து சென்று வேட்டையாடுவதில்லை. துப்பாக்கிச்சூடு கிடையாது, கத்தி கிடையாது, ரத்தம் கிடையாது. நோ வன்முறை. அகிம்சை மட்டுமே. அகிம்சை என்றவுடனே ‘காந்தியம்’ அளவுக்கு யோசிக்க வேண்டாம். கிட்டத்தட்ட குதிரைபேரம்தான்!

வட இந்திய மாநிலங்களில் தங்கநகைக் கொள்ளையர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கென்றே பிரத்யேக ஆட்கள் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட புரோக்கர்கள்போல. காவல்துறையிலும் சரி... கொள்ளையர்கள் தரப்பிலும் சரி... இவர்கள் தயவு இல்லாமல் எதுவுமே நடக்காது. இனி தங்கநகைக் கொள்ளை விவகாரங்களில் நடந்த சில விஷயங்களை அப்படியே இங்கு புட்டுப் புட்டு வைக்கிறோம். சம்பவங்களில் நபர்களின் பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன. இடையிடையே ரத்தம் தோய்ந்த தங்கநகைக் கொள்ளைகளின் வரலாற்றையும் அலசுவோம்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. வடக்கு மாவட்டம் ஒன்று அது. புறநகரில் இரவு ரோந்துப்பணியை முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தது ஒரு காவல் குழு. அதிகாலை 5 மணி இருக்கும். தேநீர்க் கடை ஒன்றில் ஜீப்பை நிறுத்தி, “அஞ்சு டீ” என்று ஆர்டர் செய்தார்கள். தேநீர்க் கடை மரப்பெஞ்சில் இளைஞன் ஒருவன் தேநீர் அருந்திக்கொண்டிருந்தான். அருகில் மரப்பெஞ்சில் துணிப்பை ஒன்று இருந்தது. காவலர்கள் வண்டியைவிட்டு இறங்கியதும் அவன் அவசரமாக டீயைக் குடித்துவிட்டு, மொபட்டை உதைத்துக் கிளம்பினான். காவலர்கள் மரப்பெஞ்சில் அமர்ந்தார்கள். ஒருவர் கையை பெஞ்சில் வைத்ததும் பிசுபிசுவென ஏதோ ஒட்டியது. டார்ச் அடித்துப் பார்த்தால் ரத்தம். உறையாத... லேசான சூடு தணியாத ரத்தம்! பெஞ்சில் நீளமாக ஒழுகி தரையில் சொட்டிக்கொண்டிருந்தது.

கவனித்த தேநீர் கடைக்காரர் ‘‘அந்தாளு பை வெச்ச இடமாச்சே... கறிகிறி ஏதாச்சும் வாங்கிட்டுப் போவானா இருக்கும். ஆனா, இன்னைக்கு விசாலக்கிழமை. பாய், கடை போட மாட்டாரே...” என்று இழுக்க, அதற்குள் இளம் காவலர்கள் ஜீப்பை எடுத்துக்கொண்டு மொபட் சென்ற திசையில் பறக்கத் தொடங்கினர். சிறிது தூரத்தில் புதர் ஓரம் மொபட் மறைவாகச் சாய்த்து வைக்கப் பட்டிருந்தது. சிறிது தூரம் சென்றால் மலையடிவாரம். தூரத்தில் புள்ளியாகத் தெரிந்தது நெருப்புப் பொட்டு. பீடி வாசனை. சத்தமில்லாமல் முன்னேறிச் சென்றார்கள் காவலர்கள். காலைக்கடன் கழித்துக்கொண்டிருந்தவனைக் கொத்தாக அமுக்கினார்கள். பொழுது பளபளவென விடியத் தொடங்கியது. அவன் வைத்திருந்த துணிப்பையைத் திறந்து பார்த் தார்கள். பேரதிர்ச்சி! ஏழெட்டுக் காதுகள் ரத்தம் சொட்டச் சொட்ட அறுந்துகிடந்தன. அத்தனையிலும் மின்னின தங்கத் தொங்கட்டான்கள். ஒவ்வொன்றுமே நான்கைந்து பவுன் தேறும்!

செய்தித்தாள்களில் எதிலும் இந்தச் செய்திகள் வரவில்லை. ஆனால், சில நாள் கழித்து வந்தது ஒரு செய்தி. `மூதாட்டி களையும் பெண்களையும் பாலியல் வன்முறை செய்த சைக்கோ இளைஞர், போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப் பட்டான்!’ என்றது அந்தச் செய்தி. பிரபல ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர்தான் அன்றைக்கு இந்த வழக்கை கையாண்டார்.

‘‘அவன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் இல்லை. கொள்ளையடிச்ச நகைகளை மண்ணுல புதைச்சு வெச்சதா அவன் சொன்ன சில இடங்களைத் தோண்டினோம். நாலைஞ்சு பைங்க கிடைச்சது. ஒரு பையில குழந்தைகளோட விரல் மோதிரங்கள் இருந்துச்சு. இன்னொரு பையில, இதேபோல காதுங்க. இன்னொரு பையில பிஞ்சுக்குழந்தையின் பாத எலும்பு. அதுல தங்கக்காப்பு இருந்துச்சு. பதறிப்போய், ‘படுபாதகா... ஏன்டா இப்படிப் பண்ண... நகையை மட்டும் கொள்ளை அடிச்சிருக்கலாமில்ல’னு கேட்டோம். ‘அது எங்களுக்குப் பழக்கமில்லைங்க. அறுத்துதான் பழக்கம்’னவன் நைலான் கயித்த காட்டினான். அது கண்ணுக்கே தெரியாத அளவுக்கு சன்னமா இருந்துச்சு. அதை ரெண்டு விரல்லைச் சுருட்டி லாகவமா காதை அறுத்திருக்கான். நாங்க டெமோ காட்டச் சொன்னபோது, மனுஷ பொம்மை உருவத்துல இருந்த காதை அறுத்த வேகத்தையும் லாகவத்தையும் பார்த்து மிரண்டுபோனோம். கொஞ்சம்கூட பிசுறு இல்லை. தேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர்கள்கூட அப்படி ஷார்ப்பா அறுப்பாங்களான்னா சந்தேகம்தான்.

காது அறுபட்டவங்களுக்கு, காது அறுந்துடுச்சுங்கிற வலிகூட உடனே தெரியாது. லேசா சுருக்குன்னு இருக்கும். அதுவும் தூக்கத்துல இருக்கிறவங்க காதைத்தான் இவன் அறுத்திருக்கான். கொஞ்சநேரம் கழிச்சுதான் காது அறுபட்டவங் களுக்கு வலி அதிகமாகி காதே காணோம்கிற விஷயமே தெரியவரும். அதுக்குள்ள இவன் மாயமா மறைஞ்சிருப்பான்” என்றவர் அடுத்த சொன்ன தகவல் அதிர்ச்சியின் உச்சம்.

“இவங்களுக்கு கொள்ளையடிச்சு பெருசா சம்பாதிக்கணும்னு, செட்டில் ஆகணும்னெல்லாம் எண்ணமில்ல. ஆனா, இவங்களால கொள்ளை யடிக்காம இருக்கவும் முடியாது. அதுவும் ரத்தம் சொட்டச் சொட்ட கொள்ளையடிக்கணும். அவங்களோட பிறப்பின் அர்த்தம், லட்சியம்... அவங்க குலதெய்வத்தின் தாகம் தீர்க்க ரத்தத்தை தினமும் கொடுக்கணும்கிற நம்பிக்கையில இதைச் செய்றாங்க. அந்த இளைஞன் நாடோடியைப்போல ராஜஸ்தானில் கிளம்பி குஜராத், மத்தியப் பிரதேசம்னு நர்மதா பள்ளத்தாக்கைத் தாண்டி கொள்ளையடிச்சுக்கிட்டே பயணிச்சிருக்கான். ராமேஸ்வரம் போறது அவன் திட்டம். அவன் பூர்வீகத்தைத் தோண்டியதுல ஒரு விஷயம் புலப்பட்டுச்சு. அவன் ஒரு தக்கி! 18-ம் நூற்றாண்டுல ஆதிக்கம் செலுத்திய ‘தக்கி’களின் எஞ்சிய வாரிசுங்க இன்னும் சிலர் இருக்காங்க. ரொம்பவும் அதிர்ச்சியா இருந்தது. தக்கிகளைத் திருத்த முடியாது. அவங்களோட சித்தாந்தமே, கொள்ளை வழியே அவங்க குலதெய்வத்தின் ரத்த தாகத்தைத் தணிக்கிறதுதான். சிறையில அடைச்சாலும் அங்கயும் ரத்தத்தைப் பார்க்காம விட மாட்டாங்க. தவிர, தங்கத்தை மட்டுமே பிரதானமா குறிவெச்சு கொள்ளையடிப்பாங்க. கடைசியில அவன் என்கவுன்ட்டர்ல செத்துப்போனான்” என்றார்.

தக்கிகளையும் பவேரியாக்களையும் அவ்வப்போது பார்ப்போம். நிகழ்காலத்துக்கு வருவோம்...

கோவை, சிறுவாணிக்கு மட்டுமல்ல... தங்கநகை உற்பத்திக்கும் பெயர்பெற்றது. தினமும் பல கோடி ரூபாய் மதிப்பில் தங்கநகைகள் உற்பத்தி செய்யப்பட்டு, நாடு முழுவதும் விற்பனைக்குச் செல்கின்றன. இந்த நகைகள் பெரும்பாலும் பேருந்து மற்றும் ரயில்களில்தான் எடுத்துச் செல்லப்படுகின்றன. அப்படித்தான் 2017-ம் ஆண்டு அக்டோபர் முதல் வாரம் தன் ஊழியர்களை நகைகளுடன் பெங்களூருவுக்கு அனுப்பினார் தங்கநகை உற்பத்தியாளரான ராஜன்.

நாள்: 12.10.2017 காலை: 6.40 மணி

ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனது அப்பார்ட்மென்ட் வீட்டில் பல் துலக்கிக் கொண்டிருந்தார் ராஜன். அவரது செல்போனுக்கு ஓர் அழைப்பு வருகிறது. மறுமுனையில் பேசுவது அவருடைய நிறுவனத்தில் பணியாற்றும் நந்தகுமார்.

“சார்... பெங்களூர்ல வித்ததுபோக மீதி இருந்த ரெண்டு கிலோ தங்கநகைகளை எடுத்துக்கிட்டு நானும் நம்ம கோபுவும் வந்துக்கிட்டிருந்தோம். இரவு கண் அசந்துட்டோம். காலையில சூட்கேஸ் எடுத்துப் பார்க்கும்போது, அதுல இருந்த நகைகளைக் காணோம்” என்று காலையிலேயே ராஜனின் தலையில் பேரிடியை இறக்கினார் நந்தகுமார்.

“என்னப்பா சொல்றீங்க... சூட்கேஸ்ல நம்பர் லாக் இருக்கே!” என்று பதறுகிறார் ராஜன்.

“சரி, இப்ப எங்க இருக்கீங்க?”

“வண்டி, வடகோவை மேம்பாலம் மேல போயிட்டிருக்கு.”

“சரி, அங்கேயே நில்லுங்க” என்று பதற்றத் துடனேயே தன் வாகனத்தைக் கிளப்பினார். `பேருந்துப் பயணம் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் பாயின்ட் டு பாயின்ட் பேருந்து. பெங்களூரிலிருந்து ஏறும்போது நகை இருந்திருக்கிறது. நம்பர் லாக் குறிப்பிட்ட சிலருக்குத்தான் தெரியும்’ என்று அந்த 10 நிமிடப் பயணத்தில் ஏராளமான சிந்தனைகள் ராஜனின் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தன. தன் ஊழியர்களுடன் காவல்நிலையத்துக்குச் சென்றார் ராஜன்.

“நகையை எந்த லிமிட்டில் விட்டீர்கள், உங்க ஊழியர்களே ஏன் எடுத்திருக்கக் கூடாது?” என்று கேள்விகளால் துளைத்தது போலீஸ். “இன்ஸ்பெக்டர் லீவு. நம்ம டீம் வர இன்னும் கொஞ்சம் டைம் ஆகும்” என்று காலம் தாழ்த்து கிறார்கள். ராஜனின் இதயத்துடிப்பு இன்னும் எகிறத் தொடங்கியது. காரணம், களவுபோயிருப்பது சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான தங்கநகைகள்.

போலீஸை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கக் கூடாது என, டிடெக்டிவ் ஏஜென்சி ஒன்றை அணுகுகிறார் ராஜன். பயணிகளின் சார்ட் விவரங்களை அலசி ஆராய்கிறார்கள் அவர்கள்.

‘‘சார், இதில் பயணித்த இரண்டு நபர்களின் எண்கள் போலியானவை” என்று முதல் துப்பைச் சொன்னது அந்த டீம். தொடர்ந்து அந்த எண்களைவைத்து ஒரு போட்டோவைக் கண்டு பிடிக்கிறது டிடெக்டிவ் டீம். போட்டோவில் இருக்கும் நபர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். “இந்த நபர் குற்றவாளியாக இருக்கலாம் சார்” என்று ரிப்போர்ட் கொடுத்தனர். அந்த போட்டோ வுடன் போலீஸ் உயரதிகாரியைச் சந்திக்கிறார் ராஜன்.

“எப்படி இதை கண்டுபிடிச்சீங்க... குற்றவாளிகள் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களா?” என்று ஆச்சர்யத்துடன் கேட்கிறார் அந்த அதிகாரி.

“ஆமா சார். நீங்கதான் குற்றவாளிகளைப் பிடிக்க உதவணும்” என்று கோரிக்கைவிடுக்கிறார் ராஜன். பிறகு, எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்படுகிறது.

தொடர்ந்து உதவி கமிஷனர் ஒருவரைச் சந்திப்பதற்காக மற்றொரு காவல்நிலையத்துக்குச் செல்கிறார் ராஜன். அங்கு அவர் போன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து, அருகில் வந்தார் ஒருவர்.

“சார், விஷயம் கேள்விப்பட்டேன். என் பெயர் சோம்நாத் பாட்டீல். நானும் தங்கநகை வியாபாரி தான். என் நகையும் திருடுபோயிருக்கு. அதைக் கொள்ளையடிச்சவங்களும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவங்கதான். உங்க நம்பர் கொடுங்க. நாம தனியா பேசுவோம்” என்றார் அவர்.

ஒரு வார காலமாக வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.

“இதற்கிடையே போலீஸ் தரப்பிலிருந்து வழக்குச் செலவுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் கேட்கிறார்கள். கொடுத்தார் ராஜன். மீண்டும் ஒரு வாரமாகிறது. எந்தத் தகவலும் இல்லை. போலீஸ் தரப்பில் மீண்டும் ஒரு லட்சம் ரூபாய் கேட்கிறார்கள். ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருளாயிற்றே. வேறு வழியின்றி தருகிறார் ராஜன். உத்தரப்பிரதேசத்தின் புலந்த்சாஹர் மாவட்ட போலீஸைத் தொடர்புகொள்கிறது நமது தனி டீம். அங்கு இருக்கும் உயரதிகாரி தமிழர்தான். “உங்கள் டீமை உடனடியாக அழைத்துக்கொண்டு வாருங்கள்... பார்த்துக் கொள்ளலாம்” என்கிறார் அந்த அதிகாரி.

உத்தரப்பிரதேசம் மாநிலம், புலந்த்சாஹருக்கு விமானத்தில் செல்கிறது போலீஸ் டீம். மொத்த செலவுகளையும் ஏற்றுக்கொண்டு அவர்களுடன் கிளம்புகிறார் ராஜன்.

(வேட்டை தொடரும்)