அரசியல்
அலசல்
Published:Updated:

உனக்கு என் புருஷனே பரவாயில்லை... கள்ளக் காதலனைக் கொன்ற மனைவி!

நந்தினி - அருண்
பிரீமியம் ஸ்டோரி
News
நந்தினி - அருண்

`இவனைக் கொல்லுங்க... இவன் உசுரோட இருந்தா நாம நிம்மதியா இருக்க முடியாது’ என்று கத்த, பிரகாஷ் உடலில் பத்து இடங்களில் ஆத்திரத்துடன் கத்தியால் குத்தியிருக்கிறான் அருண்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண். தான் நடத்தும், ‘சவுண்ட் சர்வீஸ்’ கடையில் தன் நெருங்கிய நண்பரான பிரகாஷை வேலைக்குச் சேர்த்திருந்தார் அவர். இதனால் அருணின் வீட்டுக்கு அடிக்கடி சென்ற பிரகாஷ், அருணின் மனைவி நந்தினியிடம் நெருங்கிப் பழகியிருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்தப் பழக்கம் எல்லை மீறியிருக்கிறது.

இந்தத் தவறான உறவை அறிந்து ஆத்திரமடைந்த அருண், நந்தினி - பிரகாஷிடம் சண்டைபோட்டிருக்கிறார். `எனக்கு உன்னுடன் வாழப் பிடிக்கலை. நானும் பிரகாஷும் காதலிக்கிறோம். நீ வேஸ்ட். அவன்தான் பெஸ்ட்’ என்று சொல்லி பிரகாஷுடன் தனியாகச் சென்றுவிட்டார் நந்தினி. சுவாமிமலை அருகேயுள்ள அலவந்திபுரத்தில் தனியாக வீடு எடுத்து அவர்கள் வாழ்ந்தனர். இந்த நிலையில்தான் தன் கணவர் அருணுடன் சேர்ந்து பிரகாஷைத் தீர்த்துக்கட்டியிருக்கிறார் நந்தினி.

நந்தினி - அருண்
நந்தினி - அருண்

`என்ன நடந்தது?’ என்று போலீஸாரிடம் விசாரித்தோம், “ஒரு மாதம் வரை அவர்களது உறவு இனித்திருக்கிறது. நாளடைவில், வேலைக்கே போகாமல் தினமும் குடித்துவிட்டு வந்ததால், இருவருக்குமிடையே சண்டை வர ஆரம்பித்திருக்கிறது. பிரகாஷ் போதையில், `புருஷனை விட்டுட்டு என்னுடன் ஓடி வந்தவதானே நீ?’ எனக் கேட்டு நந்தினியை அடித்திருக்கிறான். தினம்தோறும் சண்டை வளர, நிம்மதி இழந்த நந்தினி அருணை போனில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். ‘உனக்கு மோசம் செஞ்சுட்டு வந்ததுக்கு இப்போ நான் அனுபவிக்கிறேன். அவனுக்கு நீ எவ்வளவோ பரவாயில்லைனு தோணுது. நான் உன்னோடயே இருக்குறேன். வந்து என்னைக் கூட்டிட்டுப் போ’ என்று கண்ணீர்விட்ட நந்தினி, தான் வசிக்கும் முகவரியையும் கொடுத்திருக்கிறார்.

பிரகாஷ்
பிரகாஷ்

சம்பவத்தன்று இரவு அந்த முகவரிக்குச் சென்ற அருண், மூடியிருந்த கதவைத் தட்ட பிரகாஷ் திறந்திருக்கிறான். `எங்கேடா என் பொண்டாட்டி?’ என ஆத்திரத்துடன் கேட்க... பிரகாஷ் திமிராகப் பேசியிருக்கிறான். சண்டை முற்றியதால் ஆவேசமான நந்தினி தன் கணவர் அருணிடம், `இவனைக் கொல்லுங்க... இவன் உசுரோட இருந்தா நாம நிம்மதியா இருக்க முடியாது’ என்று கத்த, பிரகாஷ் உடலில் பத்து இடங்களில் ஆத்திரத்துடன் கத்தியால் குத்தியிருக்கிறான் அருண். உயிர் பிரிந்துவிட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு இருவரும் தப்பி ஓடியிருக்கிறார்கள்” என்றனர்.

இது குறித்து கபிஸ்தலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அனிதா கிரேஸியிடம் பேசினோம். ``இந்தச் சம்பவம் நடந்த அடுத்த 24 மணி நேரத்துக்குள் இருவரையும் கைதுசெய்துவிட்டோம். அருண் பாபநாசம் சிறையிலும், நந்தினி திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.