Published:Updated:

`70 மாட்டு வண்டிகள்; நேரடி நெல் கொள்முதல் நிலையம்!' - தஞ்சையில் நூதன மணல் திருட்டு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கொட்டி வைக்கப்பட்டுள்ள மணல்
கொட்டி வைக்கப்பட்டுள்ள மணல்

இரவு 9 மணியிலிருந்து 12 வரை மணல் அள்ளுவதுடன் அதை அரசுக்குச் சொந்தமான நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ள இடத்தில் கொட்டி வைக்கின்றனர்.

தஞ்சாவூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில் வெண்ணாற்றில் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்படுவதுடன், அதை நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்குச் சொந்தமான இடத்தில் கொட்டி வைத்து லாரி மற்றும் வேன் மூலமாக ஏற்றிச் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள தடுப்பணைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியினர் கலெக்டர் கோவிந்தராவிடம் புகார் அளித்துள்ளனர்.

வெண்ணாற்றில் உள்ள தடுப்பணை
வெண்ணாற்றில் உள்ள தடுப்பணை

இதுகுறித்து நம்மிடம் பேசிய அப்பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவர்,``எங்க ஊரான கூடாலூர் வெண்ணாற்றங்கரையின் ஓரத்தில் அமைந்துள்ளது. எங்க ஊர் மக்களுக்கு விவசாயம்தான் முக்கிய தொழில். எங்க ஊரைச் சேர்ந்த ஒரு தரப்பினர் வெண்ணாற்றில் தொடர்ச்சியாக மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 70 மாட்டு வண்டிகளில் இரவு 9 மணியிலிருந்து 12 மணி வரை மணல் அள்ளுவதுடன் அதை அரசுக்குச் சொந்தமான நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ள இடத்தில் கொட்டி வைக்கின்றனர். இங்கு கொட்டுவதனால் பார்ப்பதற்கு நெல் போன்று இருக்கும் யாருக்கும் அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தால்கூட சந்தேகம் வராது என்றே இப்படிச் செய்கின்றனர்.

மேலும், அவர்கள் வீடுகளுக்கு முன்பும் மணலைக் கொட்டி வைத்துக் கொள்கின்றனர். இரவு 12 மணிக்குப் பிறகு மணல் வியாபாரிகளை வரவழைத்து லாரி மற்றும் வேன் மூலம் ஏற்றி அனுப்பி வைக்கின்றனர். காலை 6 மணிக்கெல்லாம் இது போன்ற ஒரு சம்பவமே நடக்காத அளவுக்கு அந்தப் பகுதி இருக்கும். இதில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கே இரவு நேரங்களில் நூதன முறையில் மணல் அள்ளி வருகின்றனர்.

மணல்
மணல்

எங்கள் பகுதியில் வெண்ணாற்றிலிருந்து ரெகுநாதபுரம் வாய்க்கால் பிரிந்து செல்லும் இடத்தில் தடுப்பணை ஒன்று அமைந்துள்ளது. அந்தத் தடுப்பணைக்கு அருகிலேயே மணல் அள்ளப்பட்டு வருவதால் தடுப்பணைக்கு முன்பு 500 மீட்டர் நீளம் அளவில் 5 அடிக்கு ஆழம் ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பணை சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை நாங்க பல முறை போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகள் தரப்பில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`தடுப்பணைக்கு 8 லட்சம் ரூபாய்; ஓராண்டில் உடைந்த கொடுமை!' -மணல் கொள்ளையால் கலங்கும் கடவூர் விவசாயிகள்

இதை உடனடியாகத் தடுக்க வேண்டும் இல்லையென்றால் தடுப்பணைக்கு ஆபத்து ஏற்படுவதுடன் விவசாயிகளின் வாழ்வாதரமும் பாதிக்கப்படும்" என்றார்.

இதுகுறித்து தஞ்சாவூர் தாசில்தார் வெங்கடேஷ்வரனிடம் பேசினோம், ``நாங்க ரவுண்ட்ஸ் செல்லும்போது சிக்காமல் தப்பித்து விடுகின்றனர். இதற்கென விரைவில் குழு ஒன்றை அமைத்து இதைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு