Published:Updated:

சமீர் வான்கடே: மைனராக இருந்தபோது வாங்கப்பட்ட பீர் பார் லைசென்ஸ்?! - ரத்துசெய்து உத்தரவிட்ட அரசு!

சமீர் வான்கடே

நடிகர் ஷாருக் கான் மகனைக் கைதுசெய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவின் பீர் பார் லைசென்ஸ் ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.

சமீர் வான்கடே: மைனராக இருந்தபோது வாங்கப்பட்ட பீர் பார் லைசென்ஸ்?! - ரத்துசெய்து உத்தரவிட்ட அரசு!

நடிகர் ஷாருக் கான் மகனைக் கைதுசெய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவின் பீர் பார் லைசென்ஸ் ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.

Published:Updated:
சமீர் வான்கடே

நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கடந்த ஆண்டு கப்பலில் நடந்த பார்ட்டியில், போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைதுசெய்யப்பட்டார். இந்தக் கைது நடவடிக்கையை மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே முன்னின்று நடத்தினார். இந்தக் கைது, சமீர் வான்கடேவுக்கு பெரிய அளவில் சிக்கலை ஏற்படுத்தியது. மிரட்டிப் பணம் பறிப்பதற்காக சமீர் வான்கடே இந்தக் கைது நாடகத்தை நடத்தியதாக மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் குற்றம்சாட்டினார்.

சமீர் வான்கடே
சமீர் வான்கடே

அதோடு விடாமல், சமீர் வான்கடே பிறப்பால் முஸ்லிமாக பிறந்துவிட்டு தன்னை 'பட்டியலினத்தவர்' என்று கூறி இட ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு பெற்றதாகவும் நவாப் மாலிக் குற்றம்சாட்டினார். இது போன்ற தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் காரணமாக சமீர் வான்கடே ஆர்யன் கான் வழக்கு விசாரணையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதோடு, தற்போது மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவிலிருந்தும் நீக்கப்பட்டுவிட்டார்.

சமீர் வான்கடே பெயரில் பீர் பார் ஒன்று இருக்கிறது. நவிமும்பையில், `சத்குரு ஹோட்டல் அண்ட் பார்' என்ற பெயரில் அது இயங்கிவருகிறது. இதற்கு பார் லைசென்ஸ் கடந்த 1997-ம் ஆண்டு பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஷாருக் கானின் மகன் பிரச்னையைத் தொடர்ந்து சமீர் வான்கடே பெயரில் பீர் பார் நடப்பதாக நவாப் மாலிக் குற்றம்சாட்டினார். அதோடு சமீர் வான்கடே மைனராக இருந்தபோது இந்த லைசென்ஸ் பெறப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நவாப் மாலிக்
நவாப் மாலிக்

சமீர் வான்கடே மைனராக இருந்தபோது அவர் தந்தை சமீர் வான்கடே பெயரில் பார் லைசென்ஸ் பெற்றதாகவும், நவாப் மாலிக் தெரிவித்தார். இது தொடர்பாக தானே மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜேஷ் விசாரணை நடத்தினார். தானே மாவட்ட கலால் வரி கமிஷனர் மற்றும் சமீர் வான்கடேவின் வழக்கறிஞர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் சமீர் வான்கடேயின் பீர் பார் லைசென்ஸ் ரத்துசெய்யப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜேஷ் தெரிவித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism