Published:Updated:

திண்டுக்கல்: தங்கையைக் காதலித்தவரை, கொன்று காட்டுக்குள் வீசிய அண்ணன் - நடந்தது என்ன?

கொலை

தங்கையை வீட்டிலுள்ள அறையில்வைத்து பூட்டிவிட்டு, தோட்டத்துப் பகுதிக்கு அழகுவிஜய்யைத் தூக்கிச் சென்று தலையில் கல்லைப் போட்டு கொலை செய்திருக்கிறார். 

திண்டுக்கல்: தங்கையைக் காதலித்தவரை, கொன்று காட்டுக்குள் வீசிய அண்ணன் - நடந்தது என்ன?

தங்கையை வீட்டிலுள்ள அறையில்வைத்து பூட்டிவிட்டு, தோட்டத்துப் பகுதிக்கு அழகுவிஜய்யைத் தூக்கிச் சென்று தலையில் கல்லைப் போட்டு கொலை செய்திருக்கிறார். 

Published:Updated:
கொலை

திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை அருகே சேடபட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரின் மகன் அழகுவிஜய் (23) கூலி வேலை செய்துவருகிறார். இவர்களின் தெருவுக்குப் பக்கத்துத் தெருவில் குடியிருப்பவர் தமிழ்ச்செல்வன். இவருக்கு கூலி வேலை செய்துவரும் அஜித்குமார் (26) என்ற மகனும், ப்ளஸ் டூ முடித்து கல்லூரியில் சேருவதற்காக வீட்டில் இருக்கும் மகளும் உள்ளனர்.

அழகுவிஜய்
அழகுவிஜய்

கடந்த இரண்டு ஆண்டுகளாக அழகுவிஜய்யும், அந்தச் சிறுமியும் பழகிவந்துள்ளனர். இதையறிந்த இரு வீட்டாரும் இரண்டு முறை கண்டித்துள்ளனர். அப்போதும் அந்தச் சிறுமி, அழகுவிஜய்யை விரும்புவதாகக் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில் திங்கள்கிழமை சேடப்பட்டி மக்கள் பலரும் ராமேஸ்வரம் கோயிலுக்குச் சென்றனர். ஊரில் யாரும் இல்லாததால் இரவு அந்தச் சிறுமியைக் காண அழகுவிஜய் அவரின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென அந்தச் சிறுமியின் அண்ணன் அஜித்குமார் வந்து இருவரையும் பார்த்திருக்கிறார். ஏற்கெனவே எச்சரித்திருந்தும் வீட்டுக்கே வந்திருந்த அழகுவிஜயயை சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். தடுக்க முயன்ற தங்கையை வீட்டிலுள்ள அறையில்வைத்து பூட்டிவிட்டு, தோட்டத்துப் பகுதிக்கு அழகுவிஜய்யைத் தூக்கிச் சென்று தலையில் கல்லைப்போட்டு கொலை செய்திருக்கிறார்.

உடலை மீட்ட போலீஸார்
உடலை மீட்ட போலீஸார்

இதையடுத்து, தனது தந்தைக்குத் தகவல் கொடுத்து தோட்டத்துக்கு வரவழைத்து அழகுவிஜய்யின் உடலை சாக்கு மூட்டையில் திணித்து கட்டி டிவிஎஸ் எக்ஸ்-எல் வண்டியின் முன்பகுதியில் வைத்து 16 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஆத்தூர் காமராஜர் அணையை ஒட்டிய காட்டுப்பகுதியில் சாக்குமூட்டையைப் போட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கிருந்து அஜித்குமார் தப்பிச்சென்றுவிட, தமிழ்ச்செல்வன் வீட்டுக்கு வந்திருக்கிறார்.

காலை சாலை முழுவதும் ரத்தம் சிந்திக் கிடப்பது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதேவேளையில் அழுகுவிஜய்யையும் காணவில்லை என்பதால் போலீஸார், தமிழ்ச்செல்வன் வீட்டுக்குச் சென்று விசாரித்துள்ளனர். இதையடுத்து இரவு நடந்த கொலை குறித்து தமிழ்ச்செல்வன் கூறியிருக்கிறார். இதையடுத்து செம்பட்டி போலீஸார் அணை அருகே உள்ள காட்டுப்பகுதியில் சாக்கு மூட்டையில் வீசப்பட்டிருந்த அழகுவிஜய்யின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

போலீஸார்
போலீஸார்

முன்னதாக சாக்கு மூட்டையில் பிணம் கிடந்த இடத்தை மாவட்ட எஸ்.பி பாஸ்கரன், டி.எஸ்.பி முருகேசன், செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். இதையடுத்து சிறுமியின் தந்தை தமிழ்ச்செல்வனை கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.

காதல் விவகாரத்தில் இளைஞரைக் கொலைசெய்து சாக்கு மூட்டையில் வைத்து காட்டுக்குள் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.