Published:Updated:

தூத்துக்குடி: கணவன் - மனைவி தகராறு; 2 வயது பெண் குழந்தையை சுவற்றில் அடித்துக் கொன்ற கொடூரம்!

தாளமுத்துநகர் காவல் நிலையம்

தூத்துக்குடியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் இரண்டாவது கணவன், இரண்டு வயது பெண் குழந்தையை தொட்டிலுடன் சுவற்றில் தூக்கி அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி: கணவன் - மனைவி தகராறு; 2 வயது பெண் குழந்தையை சுவற்றில் அடித்துக் கொன்ற கொடூரம்!

தூத்துக்குடியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் இரண்டாவது கணவன், இரண்டு வயது பெண் குழந்தையை தொட்டிலுடன் சுவற்றில் தூக்கி அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
தாளமுத்துநகர் காவல் நிலையம்

தூத்துக்குடி, தாளமுத்துநகர் அருகிலுள்ள மேற்கு காமராஜ் நகரைச் சேர்ந்தவர் ஷெபினா. இவரின் முதல் கணவர் கிஷோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 வயதில் மற்றொரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் தாளமுத்துநகரைச் சேர்ந்த டேவிட் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டு கடந்த 6 மாதங்களாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

டேவிட்டின் வீடு
டேவிட்டின் வீடு

டேவிட்டுக்கு ஏற்கெனவே செல்வராணி என்பவருடன் திருமணமாகி அவருக்குக் குழந்தை இல்லாததால் டேவிட்டைப் பிரிந்து சென்னையில் வசித்து வருகிறார். கடந்த ஒரு மாதமாகவே டேவிட்டுக்கும் ஷெபினாவுக்கும் ஏற்பட்டு வந்த கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டேவிட்டுக்கு மது அருந்தும் பழக்கமும் உண்டு என்பதால், தினமும் மது அருந்திவிட்டு இரவில் தாமதமாகவே தான் வருவாராம். கடந்த சில நாள்களாக டேவிட்டுக்கு வேறு ஒரு பெண்ணின் எண்ணில் இருந்து போன் வந்து கொண்டே இருந்ததாம். இன்று காலையும் செல்போன் அழைப்பு குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபத்தில் டேவிட், ஷெபினாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். ஷெபினாவின் அழுகைச் சத்தம் கேட்டு தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தை அழுததாம். "உன்னையும் கொல்றேன். உன் பிள்ளையையும் கொல்றேன்" எனச் சொல்லி தொட்டிலோடு தூக்கி குழந்தையை பலமுறை சுவற்றில் ஓங்கி அடித்துள்ளார்.

டேவிட்டின் வீடு
டேவிட்டின் வீடு

இதில் ரத்தம் கசிந்த நிலையில் குழந்தை கதறி அழுதுள்ளது. அடுத்த சில நிமிடங்களில் குழந்தையின் அழுகைச் சத்தம் நிற்கவே, டேவிட் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். குழந்தையின் தலையில் ரத்தக் கசிந்த நிலையில் உயிரிழந்துவிட்டதைக் கண்டு கதறி அழுத்துள்ளார் ஷெபினா. அவரின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் வீட்டின் முன் திரண்டனர். "அவன் பெத்த பிள்ளைன்னா இப்படிக் கொன்னுருப்பானா? சின்னப் பிஞ்சுவை அடிச்சுக் கொல்ல அந்தப்பாவிக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ?" என அப்பகுதியினரும் உயிரிழந்த அக்குழந்தையின் உடலைப் பார்த்து புலம்பி அழுதனர். இச்சம்பவம் குறித்து தாளமுத்துநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய டேவிட்டையும் கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism