Published:Updated:

சென்னை விடுதியில் கஞ்சா லேகியம் காய்ச்சிய கும்பல்!- தீ விபத்தால் குட்டு வெளிப்பட்டது

சென்னை புறநகர் பகுதியில் உள்ள விடுதி அறையில் கஞ்சா லேகியம் காய்ச்சிய கும்பல், தீ விபத்தில் சிக்கியது.

கஞ்சா
கஞ்சா

சென்னை புறநகர் பகுதியான திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம், மாந்தோப்பு சாலையில் விடுதி உள்ளது. இங்கு, ரெய்ஸ் ராஜா, மாசி (என்ற) ராஜேஷ், ராஜி (என்ற), ஞானவேல்ராஜா, விக்னேஷ், முகமது ரசாக் ஆகியோர் தங்கினர். ரெய்ஸ் ராஜா, விக்னேஷ் ஆகியோரைத் தவிர மற்றவர்கள் மதுவாங்க வெளியில் சென்றனர்.

கஞ்சா
கஞ்சா

அப்போது திடீரென அறையிலிருந்து கரும்புகை வெளிவந்தது. அதைப்பார்த்த விடுதி ஊழியர்கள் அங்கு சென்றனர். அப்போது ரெய்ஸ் ராஜாவும் விக்னேஷிம் தீயில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். உடனே அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் போலீஸார் அங்கு வந்து விசாரித்தனர்.

விசாரணையில் ரெய்ஸ் ராஜா, விக்னேஷ் மற்றும் அவர்களின் நண்பர்கள் தங்கியிருந்த அறையில் எலெக்ட்ரிக் ஸ்டவ் ஒன்று இருந்தது. அந்த ஸ்ட்வ்வைப் பயன்படுத்தி சாராயம், கஞ்சா, மீத்தேன் ஆகியவற்றைக் கலந்து காய்ச்சியுள்ளனர். அப்போது அறை முழுவதும் கரும்புகை வந்துள்ளது. இதனால் மூச்சுத்திணறிய அவர்கள் அறையை விட்டு வெளியில் வர முடியாமல் தவித்துள்ளனர். அப்போது சீக்ரெட்டைப் பற்ற வைக்கும் லைட்டரைப் பற்ற வைத்துள்ளனர். இதனால் திடீரென தீப்பிடித்தது தெரியவந்துள்ளது.

திடீரென அறையிலிருந்து கரும்புகை வெளிவந்தது. அதைப்பார்த்த விடுதி ஊழியர்கள் அங்கு சென்றனர். அப்போது ரெய்ஸ் ராஜாவும் விக்னேஷும் தீயில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர்.
போலீஸ்

தீ விபத்தில் சிக்கிய இருவரிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ரெய்ஸ் ராஜாவின் நண்பர்கள் தலைமறைவாகிவிட்டனர். இந்தக் கும்பல் கஞ்சா லேகியம் தயாரித்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு போதை வஸ்துகள் எப்படி கிடைத்தன என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர். சென்னை புறகரில் உள்ள விடுதியில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.