Published:Updated:

`காதலி ஞாபகம் வரும்போதெல்லாம் ஸ்டேஷனுக்கு வந்துவிடுவார்!' -`கீரிப்புள்ள' மெக்கானிக்கின் பிளாஷ்பேக்

எஸ்.மகேஷ்

சென்னை மதுரவாயல் காவல் நிலையத்தில் காதலி மீது குற்றம் சுமத்திய விக்கி என்கிற கிரிப்புள்ள குறித்து போலீஸார் சில தகவல்களை நம்மிடம் தெரிவித்தனர்.

vicky
vicky

மதுரவாயல் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் விக்கி என்கிற கீரிப்புள்ள (21). டூவிலர் மெக்கானிக். இவர், அந்தப்பகுதியைச் சேர்ந்த 16 வயதாகும் மாணவியைக் காதலித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுரவாயல் காவல் நிலையத்துக்கு வந்தார். விநாயகர் சிலை பாதுகாப்பு பணிக்காக மதுரவாயல் போலீஸார் சென்றதால் காவல் நிலையத்தில் ஒருசிலர் மட்டுமே இருந்தனர்.

maduravoyal police station
maduravoyal police station

இந்தச் சமயத்தில் காவல் நிலையத்துக்கு வந்த விக்கி என்கிற கீரிப்புள்ள, `நான் காதலித்த பெண் என்னை ஏமாற்றிவிட்டாள், அவளுககாக நான் செலவழித்த 3,000 ரூபாயை வாங்கித் தாருங்கள்' என்று கூறினார். அப்போது அவர் போதையில் இருப்பதைத் தெரிந்துகொண்ட போலீஸார், அவரை சமாதானப்படுத்தியுள்ளனர். ஆனால், விக்கியோ பிளேடால் தன்னுடைய கையை பலமுறை வெட்டியிருக்கிறார். அவரின் கையிலிருந்து அதிகளவில் ரத்தம் வெளியேறியதைக் கூட அவரால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. கீரிப்புள்ள பற்றி தெரிந்த போலீஸாரும், `இவனோடு எப்போதும் இப்படித்தான் தொல்லை' எனப் புலம்பினர்.

பிறகு காவல் நிலையத்தை விட்டு வெளியேறியவர், பூந்தமல்லி நெடுஞ்சாலைக்குச் சென்றார். அப்போது வாகனங்கள் வேகமாக சாலையில் சென்றுகொண்டிருந்தன. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சாலையின் நடுவில் நின்றபடி தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டியிருக்கிறார். அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. சிறிது நேரத்துக்குப்பிறகு காதலியின் வீட்டின்முன் தர்ணாவில் ஈடுபடப் போவதாகக் கூறி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

vicky
vicky

இதனால் நிம்மதியடைந்த போலீஸார் பெருமூச்சுவிட்டபடி தங்களின் அன்றாடப் பணிகளை கவனிக்கத் தொடங்கினர். விக்கி செய்த ரகளை குறித்த செய்திகளும் வெளியாகின. இதனால் அவரைப் பற்றி போலீஸ் உயரதிகாரிகள் மதுரவாயல் காவல் நிலையத்தில் விசாரித்துள்ளனர். அவர்களிடம் கீரிப்புள்ள குறித்த விவரங்களைப் போலீஸார் பட்டியலிட்டுள்ளனர். அதைக்கேட்ட போலீஸ் உயரதிகாரிகள், `இனிமேல் கீரிப்புள்ளயால் தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுங்கள்' என்று கூறியுள்ளனர்.

மதுரவாயல் போலீஸாரிடம் விசாரித்தோம். ``மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த விக்கி என்கிற கீரிப்புள்ள, கடந்த சில மாதங்களுக்கு முன் காவல் நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் போதையில் இருந்தார். ` தன்னுடைய காதல் கதையைக் கூறியதோடு காதலி மீது நடவடிக்கை எடுங்கள் என்றார். அவர் போதையில் இருந்ததால் வீட்டுக்கு அனுப்பி வைத்தோம். அதன்பிறகு அவர் கூறிய தகவலின்படி விசாரித்தபோதுதான் அவரின் சுயரூபம் தெரியவந்தது" என விவரித்தவர்கள்,

vick
vick

`` அந்தப்பகுதியைச் சேர்ந்த 16 வயதாகும் பள்ளி மாணவி ஒருவருடன் விக்கி பழகியுள்ளார். மது, கஞ்சா போன்ற போதை பொருள்களுக்கு அடிமையானவர் என்று தெரிந்ததும் அவருடன் பேசுவதை மாணவி நிறுத்திவிட்டார். ஆனால், விக்கியால் அந்த மாணவியை மறக்க முடியவில்லை. மாணவியிடம் பேசுவதற்கு அவர் பலதடவை முயற்சி செய்துள்ளார். ஆனால், மாணவியோ, விக்கியைக் கண்டுகொளளவில்லை. இதனால், மாணவியின் ஞாபகம் வரும்போதெல்லாமல் கஞ்சா அல்லது மது அருந்துவார்.

போதையில் காதலி மீது புகார் கொடுப்பதாகக் கூறி காவல் நிலையத்துக்கு வந்துவிடுவார். இதுவரை 7 தடவை காவல் நிலையத்துக்கு வந்துவிட்டார். அப்போதெல்லாம் அவரை சமாதானப்படுத்தி வீட்டில் விட்டுவிட்டு வந்துள்ளோம். இந்த முறை பிளேடால் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம்.

`3,000 செலவழிச்சேன். காதலிகிட்ட இருந்து வாங்கிக் கொடுங்க!' - போலீஸாரை மிரளவைத்த சென்னை மெக்கானிக்

மாணவி தரப்பில் புகார் கொடுத்தாலும் விக்கி மீது உறுதியாக நடவடிக்கை எடுப்போம். விக்கியை அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் `கீர்ப்புள்ள' என்று செல்லமாக அழைப்பதுண்டு. போதையில் இருந்தாலே காதலி மீது புகார் கொடுக்க காவல் நிலையத்துக்கு வந்துவிடுவார். அடுத்தமுறை அவர் காவல் நிலையத்துக்கு வந்தால் சிறைக்கு அனுப்பிவிடுவோம்" என்கின்றனர் உறுதியாக.