Published:Updated:

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.... தாத்தா, சித்தப்பா உட்பட ஆறு பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு!

பாலியல் தொல்லை - சிறப்பு நீதிமன்றம்

சென்னையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தாத்தா உட்பட ஆறு பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு.

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.... தாத்தா, சித்தப்பா உட்பட ஆறு பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு!

சென்னையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தாத்தா உட்பட ஆறு பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு.

Published:Updated:
பாலியல் தொல்லை - சிறப்பு நீதிமன்றம்

சென்னை மயிலாப்பூர் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்தார். அவரின் பெற்றோர்கள் பிரிந்த நிலையில் சிறுமி தனது தாத்தாவுடன் தங்கி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு தனது தாத்தா தன்னை பாலியல் வன்கொடுமை செய்வதாகச் சிறுமி தான் படிக்கும் பள்ளி ஆசிரியரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, பள்ளி நிர்வாகம் இந்த விவகாரம் குறித்து மாவட்ட குழந்தைகள் குழந்தைகள் நல அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

இந்த புகாரை விசாரித்த குழந்தைகள் நல அதிகாரிகள், இந்த குற்றச்சாட்டுத் தொடர்பாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுமியின் தாத்தா, மூன்று சித்தப்பா, சித்தப்பாவின் மகன் உட்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவுசெய்து அனைவரையும் கைதுசெய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்ந்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையானது சமீபத்தில் நீதிபதி ராஜலட்சுமி அமர்வுக்கு முன்பாக வந்தது. அப்போது பேசிய நீதிபதி, "இந்தச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரின் மீதும் காவல்துறை தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார். மேலும், "சிறுமியின் தாத்தா, மூன்று சித்தப்பா உள்ளிட்ட நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. அதோடு, ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்தவேண்டும்" என்று நீதிபதி கூறினார்.

உயர்  நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

மேலும், சிறுமியின் சகோதரனுக்கு பத்து ஆண்டு சிறைத் தண்டனையும், மற்றவருக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையும், அதோடு, ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பு வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தமிழக அரசு சார்பில் பத்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார். நீதிபதியின் தீர்ப்பை அடுத்து காவல்துறையினர் குற்றவாளிகளைப் புழல் சிறையில் அடைத்தனர்.