Published:Updated:

கும்பகோணம் கொலை வழக்கு: பிரபல ரௌடி `கட்டை ராஜா'வுக்கு சாகும் வரை தூக்கு!

கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட கட்டை ராஜா

கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரௌடி ஒருவனுக்குக் கொலை வழக்கு ஒன்றில் சாகும்வரை தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

கும்பகோணம் கொலை வழக்கு: பிரபல ரௌடி `கட்டை ராஜா'வுக்கு சாகும் வரை தூக்கு!

கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரௌடி ஒருவனுக்குக் கொலை வழக்கு ஒன்றில் சாகும்வரை தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

Published:Updated:
கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட கட்டை ராஜா

தமிழகம் முழுவதும் பிரபல ரௌடி என அறியப்பட்டவனும், கூலிப்படைத் தலைவனாகவும் செயல்பட்டு வந்த கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரௌடி ஒருவனுக்குக் கொலை வழக்கு ஒன்றில் சாகும்வரை தூக்கிலிடவும், அதே கொலை வழக்கில் மற்ற இரண்டு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் வழங்கி கும்பகோணம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கும்பகோணம் ரவுடி கட்டை ராஜா
கும்பகோணம் ரவுடி கட்டை ராஜா

திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி பகுதியைச் சேர்ந்தவன் ராஜா என்கிற கட்டை ராஜா (43). கும்பகோணம் அருகே உள்ள மாடாகுடி பகுதியில் வசித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. பிரபல ரௌடியான கட்டை ராஜா கூலிப்படை தலைவனாகவும் இருந்து வந்துள்ளான். இவன் மீது தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பத்துக்கும் மேற்பட்ட கொலை வழக்கு உள்ளிட்ட 20 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கும்பகோணம் அருகே சென்னியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்நாதன். இவர் டாஸ்மாக் கடையில் பார் ஏலம் எடுத்து நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், ரௌடி கட்டை ராஜாவுக்கும், செந்தில்நாதனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்ததாகக் கூறப்படுகிறது. அது தொடர்பாக இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டை ராஜா, செந்தில்நாதனைக் கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டுள்ளான்.

இரட்டை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்ட குற்றவாளிகள்
இரட்டை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்ட குற்றவாளிகள்

அதன்படி ராஜா, ``எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் வா.." என கடந்த 2013, ஜூன் மாதம் 18-ம் தேதி மாடாகுடி புதுஆற்று பாலத்திற்கு செந்தில்நாதனை வரவைத்தாகச் சொல்லப்படுகிறது. புது ஆற்றுப்பாலத்தில் கட்டை ராஜாவுடன் அவன் தம்பி செல்வம் (35), தாய்மாமன்களான மனோகரன், ஆறுமுகம் (55), மைத்துனர் மாரியப்பன் உள்ளிட்டவர்களும் இருந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செந்தில்நாதன் வந்ததுமே கட்டை ராஜா உள்ளிட்ட ஐந்து பேர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை வெட்டிக் கொலை செய்துள்ளனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக பட்டீஸ்வரம் காவல் நிலைய போலீஸார் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, ஐந்து பேரையும் கைது செய்து விசாரித்து வந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு மற்றும் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

போலீஸ் பாதுகாப்புடன் கும்பகோணம் நீதிமன்றம் வந்த கட்டை ராஜா
போலீஸ் பாதுகாப்புடன் கும்பகோணம் நீதிமன்றம் வந்த கட்டை ராஜா

இதில், இரண்டு மற்றும் நான்காவது குற்றவாளியான மாரியப்பன், மனோகரன் ஆகிய இருவரும் வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் போதே இறந்து விட்டனர். கட்டை ராஜா திருச்சி மத்தியச் சிறையிலும், மற்ற இருவர் ஜாமீனில் வெளியிலிருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்காக கும்பகோணம் டி.எஸ்.பி., அசோகன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கட்டை ராஜா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டான். ஆறுமுகம், செல்வம் ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் விரைவு நீதிமன்ற நீதிபதி பெஞ்சமின் ஜோசப், கட்டை ராஜாவை சாகும் வரை துாக்கிலிடவும், ஆறுமுகம், செல்வம் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்.

இதையடுத்து கட்டை ராஜா, செல்வம், ஆறுமுகம் ஆகிய மூவரும் மதுரை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 150 ஆண்டுகால கும்பகோணம் நீதிமன்ற வரலாற்றில், குற்றவாளி ஒருவருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டை ராஜா குறித்து சிலரிடம் விசாரித்தோம், ``ஆரம்ப காலத்தில் மாடாகுடியிலிருந்து பஸ் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு கும்பகோணம் வருவான். பேருந்து நிலையம் பகுதியில் சுற்றிக் கொண்டு சின்ன சின்ன வம்புகளை செய்துவிட்டு ஊருக்கு செல்வான். அப்படிதான் அவனது ரௌடி வாழ்க்கையின் பயணம் தொடங்கியது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் கணவன் மனைவி இருவரையும் கொன்று விட்டு நகை, பணத்தை திருடினான்.

சாகும் வரை தண்டனை பெற்ற ரவுடி கட்டை ராஜா
சாகும் வரை தண்டனை பெற்ற ரவுடி கட்டை ராஜா

அந்த இரட்டை கொலைதான் அவன் செய்த முதல் சம்பவம் எனச் சொல்லப்படுகிறது. அந்த கொலை வழக்கு தொடர்பாக சிறையிலிருந்தபோது இரட்டை மர்டர் அடித்தவன் என கூறிக் கொண்டு கெத்தாக வலம் வந்துள்ளான். அதன் பிறகு பலரை கொலை செய்தான். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள ரௌடிகளுடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியான ரௌடிகள் லிஸ்டில் கட்டை ராஜா பெயரும் இருக்கும் அளவிற்கு உயர்ந்தான். தனக்கு நெருக்கமாக இருக்கும் ரௌடிகளின் நட்பிற்காக அவர்கள் சொல்லும் நபரை கொலை செய்வது, ஆதாயத்திற்காக கொலை செய்வது என வலம் வந்தான். போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டு மறைந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரபல ரௌடியான பாண்டியின் நெருக்கமான கூட்டாளியாகவும் இருந்தவன்.

தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் கட்டை ராஜா மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. பிரபல கூலிப்படைத் தலைவனாகச் செயல்பட்ட கட்டை ராஜாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism