Published:Updated:

`நான் மும்பை இந்தியன்ஸ் பிளேயர்’ - நட்சத்திர ஹோட்டல்களில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த கிரிக்கெட் வீரர்

மிருனாங்க் சிங்

அரியானாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் தன்னை மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணி வீரர் என்று கூறி நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி மோசடி செய்த கிரிக்கெட் வீரர் கைது செய்யப்பட்டார்.

`நான் மும்பை இந்தியன்ஸ் பிளேயர்’ - நட்சத்திர ஹோட்டல்களில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த கிரிக்கெட் வீரர்

அரியானாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் தன்னை மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணி வீரர் என்று கூறி நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி மோசடி செய்த கிரிக்கெட் வீரர் கைது செய்யப்பட்டார்.

Published:Updated:
மிருனாங்க் சிங்

அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் மிருனாங்க் சிங்(23). கிரிக்கெட் வீரரான சிங், அரியானா மாநில அணியிலும், மாவட்ட அணியிலும் விளையாடி இருக்கிறார். அதோடு ஐபிஎல் அணியின் ஏலத்திலும் பங்கேற்று இருக்கிறார். 2018-ம் ஆண்டு சிங்கிற்கு மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொண்டனர். அதோடு மும்பை பார்ட்டிகளிலும் கலந்து கொண்டனர். கடந்த 2020-ம் ஆண்டு சிங் தொழிலதிபரிடம் தன்னிடம் விலை உயர்ந்த மொபைல் போன் மற்றும் வாட்ச் இருப்பதாக தெரிவித்தார். தனக்கு தெரிந்த வெளிநாட்டு நண்பர் மூலம் அவை கிடைத்தது என்று தெரிவித்தார். இதனை வாங்குவதற்காக ரூ.6 லட்சத்தை தொழிலதிபர் சிங்கிடம் கொடுத்தார். ஆனால் பணத்தை வாங்கிய பிறகு தொழிலதிபரிடம் போனில் பேசுவதை சிங் நிறுத்திக்கொண்டார்.

மிருனாங்க் சிங்
மிருனாங்க் சிங்

கொரோனா தொற்று காலமாக இருந்ததால் அந்நேரத்தில் இது குறித்து தொழிலதிபர் போலீஸில் புகார் செய்யவில்லை. ஆனால் இது குறித்து தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். தற்போது இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் புகார் கொடுத்த நபர் உட்பட மொத்தம் 18 பேரிடம் இது போன்று சிங் பணத்தை வாங்கி மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

அதோடு மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தான் மும்பை இந்தியன் ஐபிஎல் அணியின் வீரர் என்று கூறி தங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. பில் கொடுக்கவேண்டிய சூழ்நிலை வரும் போது அணியின் மேலாளர் பில்லை கொடுப்பார் என்று கூறி விட்டு சென்றுவிடுவார். இது தொடர்பாக மும்பை ஹோட்டல்களும் புகார் கொடுத்திருந்தன. இந்நிலையில் அவர் மும்பை பரேல் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீஸார் அங்கு சென்று சிங்கை கைது செய்தனர். அவரை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விச்சாரித்து வருகின்றனர். மோசடி செய்த பணத்தில் சிங் ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தியது விசாரணையில் தெரிய வந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism