Published:Updated:

மும்பை: மகளின் கராத்தே பெல்ட்; நீட் தேர்வுக்குப் படிக்கச் சொன்ன தாய்க்கு நேர்ந்த கொடூரம்!

கொலை
கொலை

நீட் மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு நன்றாகப் படிக்கும்படி கூறிய தாயை 15 வயது மகள் கராத்தே பெல்ட்டால் கழுத்தை நெரித்துக் கொலைசெய்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நவிமும்பை ஐரோலியில் வசிப்பவர் ரச்சனா தேஷ்முக் (48). இவருக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார். ரச்சனா, தன் மகள் படித்து டாக்டராக வேண்டும் என்று விரும்பினார். இதற்காக 15 வயது மகள் வீட்டிலிருந்து நீட் நுழைவுத்தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்தார். அடிக்கடி நீட் தேர்வுக்குப் படிப்பது தொடர்பாக தாய், மகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதுண்டு.

கொலை
கொலை
நள்ளிரவு நேரம்... ரத்த வெள்ளத்தில் அம்மா, அப்பா... கதறிய சிறுவன்!- டெல்லியைப் பதறவைத்த கொலை

இந்தநிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ரச்சனா படுக்கை அறையில் இறந்துகிடந்தார். அவரது உடலை மீட்டு போலீஸார் விசாரணை நடத்திவந்தனர். பிரேத பரிசோதனையில் ரச்சனா கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் யார் கொலை செய்தது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். கொலை நடந்த மூன்று நாள்களுக்கு முன்புதான் ரச்சனாவுக்கு எதிராக அவரின் மகள் போலீஸ் நிலையத்தில் சென்று புகார் செய்திருக்கிறார். போலீஸார் மாணவியின் பெற்றோரை அழைத்து கவுன்சிலிங் கொடுத்து மாணவியை பெற்றோருடன் அனுப்பிவைத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இந்தக் கொலையில் ரச்சனாவின் மகளுக்குத் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடந்தது.

மைனர் பெண்ணை பெண் கான்ஸ்டபிள் ஒருவர் தனது கட்டுப்பாட்டில் எடுத்து நயமாகப் பேசி விசாரித்தார். ஆரம்பத்தில் எதையும் தெரிவிக்க மறுத்த மைனர் பெண், பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இது குறித்து மைனர் பெண் நடந்த சம்பவம் குறித்து பரபரப்பு வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். கொலை நடந்த அன்று தாய்க்கும் மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. ``ஏன் மொபைலை பார்த்துக்கொண்டிருக்கிறாய், நீட் தேர்வுக்குப் படி’’ என்று ரச்சனா தனது மகளிடம் சொல்லியிருக்கிறார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் மைனர் பெண் தனது தாயாரைப் பிடித்து கீழே தள்ளிவிட்டிருக்கிறார். இதில் ரச்சனாவுக்குத் தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. உடனே மைனர் பெண் வீட்டில் கிடந்த கராத்தே பெல்ட்டை எடுத்து வந்து தன் தாயாரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறார். பின்னர் உடலை எடுத்து படுக்கை அறையில் போட்டுவிட்டு ரச்சனாவின் மொபைலிலிருந்து ரச்சனாவின் சகோதரருக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பினார். அதில் தற்கொலை செய்துகொள்வதாக ரச்சனா சொல்வதுபோல் தெரிவித்திருக்கிறார். மெசேஜ் அனுப்பிய பிறகு படுக்கை அறை கதவைப் பூட்டிவிட்டு மைனர் பெண் தனது மாமாவுக்கு போன் செய்து அம்மா படுக்கை அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டதாகத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்தே மைனர் பெண்ணின் மாமா விரைந்து வந்து இது குறித்து போலீஸாருக்குத் தெரிவித்தார். போலீஸார் ஒரு வார தீவிர விசாரணைக்குப் பிறகு இந்தக் கொலையில் துப்பு துலக்கியுள்ளனர். மைனர் பெண்ணைக் கைதுசெய்து சிறுவர் சீர்திருத்தச் சிறைக்கு அனுப்பிவைத்தனர். சொந்த மகளே தன் அம்மாவை கராத்தே பெல்ட்டால் கழுத்தை நெரித்துக் கொலைசெய்த சம்பவம் பெற்றோர் மத்தியில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு