Published:Updated:

சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமீன்... தேசிய பங்குச் சந்தை ஊழல் வழக்கின் நிலை என்ன?!

சித்ரா ராமகிருஷ்ணா
News
சித்ரா ராமகிருஷ்ணா

தேசத்தையே அதிரவைத்த தேசிய பங்குச் சந்தை ஊழலில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது.

Published:Updated:

சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமீன்... தேசிய பங்குச் சந்தை ஊழல் வழக்கின் நிலை என்ன?!

தேசத்தையே அதிரவைத்த தேசிய பங்குச் சந்தை ஊழலில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது.

சித்ரா ராமகிருஷ்ணா
News
சித்ரா ராமகிருஷ்ணா

உலக அளவில் மிகப்பெரிய பங்குச் சந்தைகளில் ஒன்றாக இந்தியாவின் தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ) விளங்குகிறது. மும்பையைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டுவரும் தேசிய பங்குச் சந்தையில், நாளொன்றுக்கு சுமார் 3.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்குப் பணம் புழங்குகிறது. ஐ.டி.பி.ஐ., எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ உட்பட முன்னணித் தனியார் நிறுவனங்களும், பொதுத்துறை நிறுவனங்களும் இதன் பங்குதாரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்ரா ராமகிருஷ்ணா
சித்ரா ராமகிருஷ்ணா

என்.எஸ்.இ-யின் மேலாண் இயக்குநர், தலைமைச் செயல் அதிகாரியாக 2013 முதல் 2016 வரை இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. அந்த நேரத்தில், என்.எஸ்.இ-யில் பல கோல்மால்களை அவர் செய்தார் என்ற குற்றச்சாட்டு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2013-ம் ஆண்டு ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரைத் தனது ஆலோசகராக நியமித்துக்கொண்டார்.

அதுவரை வேறொரு கம்பெனியில், ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த ஆனந்த் சுப்பிரமணியத்துக்கு, 1.68 கோடி ரூபாய் எனச் சம்பளத்தை உயர்த்திக்கொடுத்து வேலைக்கு வைத்தார் சித்ரா ராமகிருஷ்ணா. ஒரே ஆண்டில் ஆனந்த் சுப்பிரமணியத்தின் ஆண்டுச் சம்பளம் 2.06 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. 2015-ம் ஆண்டில்  3.337 கோடி ரூபாயாகவும், 2016-ம் ஆண்டு 4.21 கோடி ரூபாயாகவும் அவரின் ஆண்டுச் சம்பளம் உயர்ந்துகொண்டேபோனது.

தேசிய பங்குச் சந்தையில் முக்கியப் பதவிகளில் இருந்த சித்ரா ராமகிருஷ்ணா, ரவி நாராயண், ஆனந்த் சுப்பிரமணியம் உட்பட பலர் முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். இது தொடர்பான புகார்கள் எழுந்து, ஆதாரங்களுடன் சிக்கிய பிறகு அவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீதான புகார்களை விசாரித்து, அதன் விவரங்களை அறிக்கையாக வெளியிட்டது, தேசிய பங்குச் சந்தையைக் கண்காணிக்கும் அதிகாரம்கொண்ட ‘செபி’ (இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்) அமைப்பு.

சித்ரா ராமகிருஷ்ணா
சித்ரா ராமகிருஷ்ணா

செபி அறிக்கையில் இடம்பெற்றிருந்த தகவல்களைக் கண்டு நாடே அதிர்ந்தது. சித்ரா ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் ‘கோலொகேஷன்’ (Co-Location scam) முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதாவது, என்.எஸ்.இ-யில் பங்குகளை வாங்குவது, விற்பது தொடர்பான தகவல்களை அதற்கான சர்வர் மூலமாக மட்டுமே அறிந்துகொள்ள முடியும். ஆனால், குறிப்பட்ட சில புரோக்கர்கள் ஆதாயமடைய வேண்டும் என்பதற்காக, தனியாக ஒரு சர்வரைத் திருட்டுத்தனமாக இவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். 

மேலும், என்.எஸ்.இ பணியாளர்களின் தொலைபேசிகளை நீண்டகாலமாக இவர்கள் ஒட்டுக்கேட்டிருக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, கடந்த மார்ச் மாதம் சித்ரா ராமகிருஷ்ணா சி.பி.ஐ-யால் கைதுசெய்யப்பட்டார். இவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சுனேனா சர்மா முன்பாக டிசம்பர் 21-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி, சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஒட்டுக்கேட்பு வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

சித்ரா ராமகிருஷ்ணா
சித்ரா ராமகிருஷ்ணா
Chitra Ramakrishna

மேலும், ரூ.1 லட்சத்துக்கான பிணைப் பத்திரத்தைச் செலுத்த வேண்டும், விசாரணைக்கு அழைக்கப்படும்போது அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. முன் அனுமதி இல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என்பதும் நீதிமன்றத்தின் உத்தரவு. ஆனாலும், நிதி மோசடி தொடர்பான ஒரு வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சித்ரா ராமகிருஷ்ணா தாக்கல் செய்த மனு நிலுவையில் இருப்பதால், அவர் தொடர்ந்து சிறையிலேயே இருப்பார்.

இமயமலையில் இருக்கும் யோகி ஒருவர் தனக்கு குருவாக இருந்து வழிகாட்டியதாக சித்ரா ராமகிருஷ்ணா கூறிதைக் கேட்டு, விசாரணை அதிகாரிகள் ஆரம்பத்தில் அதிர்ந்துபோனார்கள். ‘அந்த யோகியை தான் பார்த்ததே இல்லை.... அவர் கண்களுக்குப் புலப்பட மாட்டார். அவர், இமயமலையில் வாழும் ஒரு சித்த புருஷ்’ என்றெல்லாம் சித்ரா ராமகிருஷ்ணா விசாரணையில் அதிகாரிகளை அதிரவைத்தார். ‘அந்த யோகிதான், ஆனந்த் சுப்பிரமணித்தை ஆலோசகராக நியமித்துக்கொள் என்று ஆலோசனை கூறினார்’ என்றும் சித்ரா ராமகிருஷ்ணா கூறினார். ஆனால், ஆனந்த் சுப்பிரமணம்தான் அந்த யோகி என்பதை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்டனர்.

சித்ரா ராமகிருஷ்ணா
சித்ரா ராமகிருஷ்ணா

`இந்த முறைகேடுகள் குறித்து செபி அறிக்கையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. அதன் பிறகு, இந்த முறைகேடு குறித்து வேறு எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இந்த முறைகேடுகள் பற்றிய முழு உண்மையும் வெளிவரும், குற்றவாளிகள் அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று ஆட்சியாளர்கள் உறுதியளிக்கவில்லை. இந்த வழக்கில் பல மர்மங்கள் விலகாமல் இருக்கின்றன’ எனப் பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள்.