Published:Updated:

``டிரிங்ஸ் பார்ட்டி கொடுன்னா தர மாட்டியா?" - இன்ஜினீயரை வழி மறித்துத் தாக்கிய கும்பல்...

மது விருந்து

ஸ்பெஷலான விஷயங்களுக்கு மது விருந்து வைக்கச் சொல்வது வாடிக்கை என்றாலும் அதற்காக வழிமறித்துத் தாக்குவது பெரும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருக்கிறது. எதற்கும் நாம் எச்சரிக்கையுடன் இருப்பதே நலம்.

``டிரிங்ஸ் பார்ட்டி கொடுன்னா தர மாட்டியா?" - இன்ஜினீயரை வழி மறித்துத் தாக்கிய கும்பல்...

ஸ்பெஷலான விஷயங்களுக்கு மது விருந்து வைக்கச் சொல்வது வாடிக்கை என்றாலும் அதற்காக வழிமறித்துத் தாக்குவது பெரும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருக்கிறது. எதற்கும் நாம் எச்சரிக்கையுடன் இருப்பதே நலம்.

Published:Updated:
மது விருந்து

மாலத்தீவு சென்று வந்ததற்கு மது விருந்து கொடுக்குமாறு கேட்டு, அதைக் கொடுக்காததால் சென்னை புது வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த மெக்கானிகல் இன்ஜினீயரை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியிருக்கிறது. 

க்ரைம்
க்ரைம்

சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜ்குமார். மெக்கானிகல் இன்ஜினீயரான இவர், அலுவல் நிமித்தமாக மாலத்தீவுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் விக்டர், பிரபாகரன், சரண், ஆபிரகாம் விக்டர் ஆகியோர் அடங்கிய கும்பல் டீக்கடையில் ராஜ்குமாரை சந்தித்துப் பேசியிருக்கிறது. மாலத்தீவு பயணம் எப்படியிருந்தது, என்னென்ன பார்த்தாய் என்பது பற்றியெல்லாம் ராஜ்குமாரிடம் அவர்கள் விசாரித் துள்ளனர். உரையாடலின் இறுதியில், ``மாலத்தீவுக்கெல்லாம் போயிட்டு வந்திருக்க டிரிங்ஸ் பார்ட்டி இல்லையா" எனக் கேட்டிருக்கிறார்கள். மது விருந்து வைக்கும்படியும் பணம் தரும்படியும் அவர்கள் கேட்டதும் அங்கிருந்து ராஜ்குமார் நழுவிச் சென்றுவிட்டார். 

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதே நாள் மாலை ராஜ்குமார் சந்தைக்குச் சென்றபோது அந்தக் கும்பல் அவரை வழிமறித்து பார்ட்டி வைக்காத கோபத்தில் ராஜ்குமாரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதைக் கண்டு அருகிலிருந்த பொதுமக்கள் சூழ்ந்த நிலையில் அங்கிருந்து அந்த நால்வரும் தப்பியோடிவிட்டனர். போகும்போது, காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் கொடுக்கக் கூடாது என்று மிரட்டி விட்டுச் சென்றிருக்கின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த ராஜ்குமாரின் மனைவி, பொதுமக்கள் உதவியுடன் ராஜ்குமாரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் விக்டர், பிரபாகரன், சரண், ஆபிரகாம் விக்டர் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள் நால்வரும் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள கடைகளில் மிரட்டி பணம் வாங்குவது மற்றும் வழிப்பறி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மது
மது
representational image

எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள ஸ்பெஷலானவற்றை வாங்கி வந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அளிப்பது வாடிக்கையானது. ஸ்பெஷலான விஷயங்களுக்கு ட்ரீட், பார்ட்டி கேட்பது வாடிக்கை என்றாலும் அதற்காக வழிமறித்துத் தாக்குவது பெரும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருக்கிறது. எதற்கும் நாம் எச்சரிக்கையுடன் இருப்பதே நலம்.