Published:Updated:

நள்ளிரவில் வீட்டுக்குள் பாய்ந்த துப்பாக்கிக்குண்டு... உயிர் தப்பிய நபர் - ஆவடியில் அதிர்ச்சி!

துப்பாக்கிக்குண்டு

ஆவடி அருகே ஒருவரின் வீட்டுக்குள் துப்பாக்கிக்குண்டு பாய்ந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

நள்ளிரவில் வீட்டுக்குள் பாய்ந்த துப்பாக்கிக்குண்டு... உயிர் தப்பிய நபர் - ஆவடியில் அதிர்ச்சி!

ஆவடி அருகே ஒருவரின் வீட்டுக்குள் துப்பாக்கிக்குண்டு பாய்ந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

Published:Updated:
துப்பாக்கிக்குண்டு

ஆவடி அருகிலிருக்கும் மிட்டனமல்லி பகுதியிலுள்ள எம்.சி.ராஜா தெருவைச் சேர்ந்தவர் பெயின்டர் வேலை செய்யும் ராஜேஷ் குமார். இவர் தன் மனைவி, குழந்தையுடன் வசித்துவருகிறார். இவரின் மனைவி குழந்தையுடன் வெளியூருக்குச் சென்றிருந்த நிலையில், ராஜேஷ் நேற்று வேலை முடித்துவிட்டு வீட்டில் படுத்து உறங்கிக்கொண்டிருந்திருக்கிறார்.

ராஜேஷ் வீடு
ராஜேஷ் வீடு

அப்போது, நள்ளிரவில் வீட்டின் மேலே ஏதோ கல் விழும் சத்தம் கேட்டிருக்கிறது. ஆனால், இரவு நேரம் என்பதால் அதைப் பெரிதாக கவனிக்காத ராஜேஷ், காலையில் எழுந்து பார்த்திருக்கிறார். அப்போது, வீட்டின் சிமென்ட் ஓடு உடைந்து, பீரோ கண்ணாடி உடைந்திருப்பதைப் பார்த்திருக்கிறார். அதையடுத்து, தனது வீட்டின் தரையில் துப்பாக்கிக்குண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராஜேஷ், காவல்துறையின் அவசர எண்ணுக்கு அழைத்து தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தகவலறிந்து வந்த முத்தாபுதுப்பேட்டைப் பகுதி காவல்துறையினர், துப்பாக்கிக்குண்டை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கைப்பற்றப்பட்டது 9 எம்.எம் குண்டு என்பது தெரியவந்துள்ளது. ராஜேஷ் வீடு அமைந்திருக்கும் பகுதிக்கு அருகில் சி.ஆர்.பி.எஃப் பயிற்சி வளாகமும், இந்திய விமானப்படையும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பயிற்சி மையங்களிலிருந்து துப்பாக்கிக்குண்டு வந்ததா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

துப்பாக்கிக்குண்டு
துப்பாக்கிக்குண்டு

பயிற்சி மையத்துக்கும், சம்பவம் நடந்த இடத்துக்கும் 200 மீட்டர் இடைவெளி மட்டும்தான் இருந்திருக்கிறது. முதற்கட்ட விசாரணையில் நேற்று பயிற்சி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று சி.ஆர்.பி.எஃப் பயிற்சி வளாகத்தில் சொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதைத் தொடர்ந்து அந்த குண்டு எங்கிருந்து வந்தது என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism