Published:Updated:

சட்டவிரோத கருக்கலைப்பு; பயோ கேஸ் தொட்டியில் குழந்தைகள் மண்டை ஓடு - மருத்துவமனை உரிமையாளர் கைது!

தனியார் மருத்துவமனை
News
தனியார் மருத்துவமனை

மகாராஷ்டிராவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் பயோ கேஸ் தொழிற்சாலையில் 11 குழந்தைகளின் தலைகள் மற்றும் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மகாராஷ்டிரா மாநிலம் வார்தா மாவட்டம், அர்வி என்ற இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், 13 வயது சிறுமிக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததாக மாவட்ட காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, போலீஸார் இது தொடர்பாக அந்த மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர். அப்போது அங்கிருந்த பயோகேஸ் தொழிற்சாலையை சோதனை செய்தனர். பயோ கேஸ் தொட்டியில் ஆய்வு செய்தபோது, உள்ளே குழந்தைகளின் எலும்புக்கூடுகள் இருந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த போலீஸார், உடனடியாக தொட்டிக்குள் இறங்கி 11 குழந்தைகளின் மண்டை ஓடுகள், 56 குழந்தைகளின் எலும்புகள் ஆகியவற்றை கைப்பற்றினர். அவை தடயவியல் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கர்ப்பம்
கர்ப்பம்
சித்தரிப்புப் படம்

அதையடுத்து, போலீஸார் மருத்துவமனையை நடத்தி வந்த டாக்டர் ரேகா கதம் என்பவரைக் கைது செய்தனர். சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்தது தொடர்பாக அவரிடம் விசாரித்து வருகின்றனர். கருக்கலைப்பின் போது டெலிவரியாகும் குழந்தைகளின் உடல்கள் பயோ கேஸ் தொழிற்சாலையில் போடப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. அவை சட்டபூர்வமாக போடப்பட்டதா அல்லது சட்டவிரோதமாக போடப்பட்டதா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கைது
கைது

இந்தச் சம்பவம் குறித்து உள்ளூர் போலீஸார் கூறுகையில், ``சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்தது தொடர்பாக டாக்டர் ரேனுகா கதம் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவனின் பெற்றோரையும் கைது செய்திருக்கிறோம். சிறுமியின் பெற்றோரிடம் கருவை கலைக்கவில்லையெனில் அவரை அவமானப்படுத்துவோம் என்று அந்தச் சிறுவனின் பெற்றோர் மிரட்டியிருக்கின்றனர். 18 வயதுக்கு குறைவான சிறுமிக்கு கருக்கலைப்பு செய்தது தொடர்பாக டாக்டர் ரேகா கதம் முறைப்படி போலீஸாருக்கு தகவல் கொடுக்கவில்லை" என்று தெரிவித்தனர்.