Published:Updated:

விழுப்புரம்: பிரிந்து சென்ற மனைவி; தற்கொலை செய்துகொண்ட கணவன்? - போலீஸ் விசாரணை!

வினோத்குமார்

மனைவி பிரிந்து சென்று விவாகரத்து கோரியதால் மனவருத்தத்தில் இருந்துவந்த கணவன், அதீத மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகேயுள்ள பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட இவர், அதே பகுதியில் வசித்திருக்கிறார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை என்று சொல்லப்படுகிறது. மேலும், வினோத்குமாருக்கு மது பழக்கம் இருந்ததால் கணவன் மனைவியிடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி

இதனால், கணவனைப் பிரிந்து சென்ற ராணி கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக தனது தாய் வீட்டிலேயே இருந்து வந்ததோடு, விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதனால் மனமுடைந்த வினோத்குமார், அதிக குடிப்பழக்கத்துக்கு அடிமையாகியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், பொன்னங்குப்பத்திலுள்ள விவசாயக்கிணறு ஒன்றில், வினோத்குமார் நேற்றைய முன்தினம் குதித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

நேற்றைய தினம் கிணற்றில் உடல் மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள், விக்கிரவாண்டி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். அங்கு சென்ற காவல்துறை அதிகாரிகள், வினோத்குமாரின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மனைவி பிரிந்து சென்று விவாகரத்து கோரிய மன விரக்தியில் இருந்துவந்த வினோத்குமார், தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து 174-வது பிரிவின்கீழ் வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.