Published:Updated:

குழந்தைகள் தின்பண்டம் திருடியதாக கடைக்காரரின் சந்தேகம்?! -தாயின் இரண்டாவது கணவர் வெறிச்செயல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குழந்தைகள் மீது தீ வைத்த கொடூரம்
குழந்தைகள் மீது தீ வைத்த கொடூரம்

அந்தோணிராஜ் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அதே இடத்திலிருந்த கடைசி குழந்தை மீது, ஜேசு அந்தோணிராஜ் தீவைத்ததால் அவர் உடல் முழுவதும் வெந்து கருகியது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பீச் ரோட்டை சேர்ந்தவர் சுஜா. இவர் கணவர் குருநாதன். இந்த தம்பதிக்கு ஒரு ஆண், இரு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு குருநாதன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

காவல்கிணறு
காவல்கிணறு
நெல்லை: `மகன் கைதுக்கு எதிர்ப்பு; போலீஸ் முன்னிலையில் தீக்குளித்த தாய்!’ - என்ன நடந்தது?

அதன் பின்னர் வீட்டு வேலைகள் செய்து குழந்தைகளைப் பராமரித்து வந்த சுஜா, கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு ஜேசு அந்தோணிராஜ் என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். குமரி மாவட்டம் கடியபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ஜேசு அந்தோணிராஜூம், சுஜாவும் குழந்தைகளுடன் நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

காவல்கிணறு பகுதியில் உள்ள ஹோட்டலில் ஜேசு அந்தோணிராஜ் வேலை செய்து வந்தார். அதே ஹோட்டலில் சுஜாவும் பாத்திரம் கழுவும் வேலையைச் செய்து குழந்தைகளை வளர்த்து வந்திருக்கிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுஜாவின் குழந்தைகள் இருவர் தின்பண்டம் வாங்குவதற்காக மெயின் ரோட்டில் உள்ள பேக்கரிக்குச் சென்றிருக்கின்றனர்.

குழந்தைகள் மீது தீ வைத்த ஜேசு அந்தோணிராஜ்
குழந்தைகள் மீது தீ வைத்த ஜேசு அந்தோணிராஜ்

வழக்கமாக அந்த கடைக்குச் செல்லும் குழந்தைகள், அங்கு இருக்கும் சூழ்நிலையைப் பொறுத்து கடையிலிருந்து ஏதாவது தின்பண்டத்தைத் திருடிச் செல்வதாகக் கடைக்காரர் சந்தேகப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், இரு குழந்தைகளும் கடையிலிருந்து தின்பண்டத்தை எடுத்துச் சென்றதாக ஏற்பட்ட சந்தேகத்தில், ஜேசு அந்தோணிராஜிடம் புகார் செய்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹோட்டல் வேலை முடிந்து வீட்டுச் சென்ற ஜேசு அந்தோணிராஜ், குழந்தைகள் மூவரையும் அழைத்துக் கண்டித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர், வீட்டிலிருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து மூவரின் உடலிலும் ஊற்றியிருக்கிறார்.

குழந்தைகள் மீது தீ வைத்த கொடூரம்
குழந்தைகள் மீது தீ வைத்த கொடூரம்
இரண்டு வருடங்களுக்கு முன்.... நெல்லை கந்துவட்டி தீக்குளிப்பு..! இன்றைய நிலை என்ன?

பின்னர் தீப்பெட்டியை எடுத்துத் தீவைக்க முயன்றிருக்கிறார். அதைப் பார்த்த சிறுவனும், ஒரு சிறுமியும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். ஆனால் அவரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அதே இடத்திலிருந்த கடைசி குழந்தை மீது, ஜேசு அந்தோணிராஜ் தீவைத்ததால் அவர் உடல் முழுவதும் வெந்து கருகியது.

தீயில் கருகிய சிறுமியின் கூச்சலைக் கேட்டு உதவிக்கு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீயின் வெப்பம் தாங்க முடியாத சிறுமி ஓடிச் சென்று, ஜேசு அந்தோணிராஜின் காலைப் பிடித்துக் கொண்டதால் அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

தீ
தீ
Representational Image

இந்தச் சம்பவம் தொடர்பாக சுஜா அளித்த புகாரின் பேரில் காவல்கிணறு போலீஸார், கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் ஜேசு அந்தோணிராஜ் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். தீக்காயம் அடைந்த குழந்தையும், ஜேசு அந்தோணிராஜூம் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பேக்கரி கடைக்காரர் சொன்னதைக் கேட்டு, ஆத்திரத்தில் குழந்தை மீது தீ வைத்துக் கொளுத்திய நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு