Published:Updated:

நடிகை கத்ரீனா கைஃப், விக்கி கெளஷல் ஜோடிக்குக் கொலை மிரட்டல் -இளைஞரைக் கைதுசெய்து விசாரிக்கும் போலீஸ்

விக்கி-கத்ரீனா கைஃப் ஜோடி

நடிகை கத்ரீனா கைஃப், அவர் கணவர் விக்கி கெளஷலுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைதுசெய்யப்பட்டார்.

நடிகை கத்ரீனா கைஃப், விக்கி கெளஷல் ஜோடிக்குக் கொலை மிரட்டல் -இளைஞரைக் கைதுசெய்து விசாரிக்கும் போலீஸ்

நடிகை கத்ரீனா கைஃப், அவர் கணவர் விக்கி கெளஷலுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைதுசெய்யப்பட்டார்.

Published:Updated:
விக்கி-கத்ரீனா கைஃப் ஜோடி

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், அவர் கணவர் விக்கி கெளஷல் ஆகியோருக்குக் கடந்த சில தினங்களாக மர்ம நபர் ஒருவர் சமூக வலைதளம் மூலம் தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்துக்கொண்டிருந்தார். அதோடு கத்ரீனா கைஃப்பை பின் தொடர்ந்து, அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக விக்கி கெளஷல் சாந்தாகுரூஸ் போலீஸில் புகார் செய்தார். அதனடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், மிரட்டல் விடுத்த நபர் தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக சாந்தாகுரூஸ் போலீஸ் அதிகாரிகள், ``கடந்த சில நாள்களாக சமூக வலைதளம் மூலம் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல்கள் தொடர்ந்து வருவதாக நடிகர் விக்கி கெளஷல் தெரிவித்திருக்கிறார்.

விக்கி-கத்ரீனா கைஃப் ஜோடி
விக்கி-கத்ரீனா கைஃப் ஜோடி

இன்ஸ்டாகிராமில் மிரட்டல் விடுத்ததோடு, கத்ரீனா கைஃப்பை பின் தொடர்ந்து சென்றும் மிரட்டல் விடுத்ததாக தன்னுடைய புகாரில் தெரிவித்திருக்கிறார். அதனடிப்படையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறோம்" என்று தெரிவித்தனர். ஆனால், கைதுசெய்யப்பட்ட நபர் யார் என்ற விவரத்தை போலீஸார் இன்னும் வெளியிடவில்லை. அவரிடம் மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கத்ரீனா கைஃப், விக்கி ஜோடி சமீபத்தில் மாலத்தீவுக்கு பிக்னிக் சென்றனர். அங்கிருந்தபோது மிரட்டல் வந்ததா என்று தெரிவிக்க மறுத்துவிட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

அதோடு நடிகை ஸ்வரா பாஸ்கருக்கு கடந்த மாதம் கொலை மிரட்டல் கடிதம் வந்தது. மும்பை அந்தேரி ஜுவில் உள்ள அவரது இல்லத்துக்குக் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அது குறித்து ஸ்வரா போலீஸில் புகார் செய்தார். நடிகை கங்கனா ரனாவத்துக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.