Published:Updated:

சின்னசேலம்: காவல்துறை தண்டோரா; கலவரத்தில் எடுத்துச் செல்லப்பட்ட பொருள்களைத் திருப்பியளிக்கும் மக்கள்

பொருள்களைத் திருப்பியளிக்கும் மக்கள்

காவல்துறையின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தாங்கள் எடுத்துச் சென்ற பள்ளிக்குச் சொந்தமானப் பொருள்களை பள்ளிக்கு அருகிலுள்ள `கும்ப கொட்டாய் கோயில்' பகுதியில் மக்கள் போட்டுவிட்டுச் செல்கின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கணியாமூரில் இயங்கிவந்த தனியார் பள்ளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடித்த கலவரத்தின்போது, பள்ளியிலிருந்து எடுத்துச் சென்ற பொருள்களைத் திருப்பி அளிக்குமாறு அருகிலுள்ள சுற்றுவட்டார கிராமங்களில் காவல்துறை மூலமாக தண்டோரா போடப்பட்டது. எடுத்துச் சென்ற பொருள்களைத் திருப்பி அளிக்காத பட்சத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறப்பட்டது. காவல்துறையின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தாங்கள் எடுத்துச் சென்ற பள்ளிக்குச் சொந்தமான பொருள்களை பள்ளிக்கு அருகிலுள்ள `கும்ப கொட்டாய் கோயில்' பகுதியில் மக்கள் போட்டுவிட்டுச் செல்கின்றனர்.

ஒப்படைக்கப்பட்ட கம்மல்கள்
ஒப்படைக்கப்பட்ட கம்மல்கள்

ஆர்.ஓ.வாட்டர் பியூரிஃபயர், மேசைகள், நாற்காலிகள், சிலிண்டர், சமையல் பாத்திரம், ஃபேன், இரும்பு கிரில் கதவுகள் என பள்ளியிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருள்கள், தற்போது அந்த இடத்தில் குவிந்துவருகின்றன. மேலும், கலவரத்தன்று பள்ளி வழியாக வந்தபோது 14 செட் கம்மல்கள் கிடந்ததாகக் கூறி சின்னசேலம் காவல் நிலையத்தில் ஒருவர் ஒப்படைத்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!