Published:Updated:

``கோபுரக் கலசம் பாலிஷ் போடாம இருந்துச்சு..!” - திருச்செந்தூர் ராஜகோபுரத்தில் ஏறிய நபரால் பரபரப்பு

ராஜகோபுரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 137 அடி ராஜகோபுரத்தின் கலசத்தில் ஏறிய மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்புத்துறையினர் அவரை பத்திரமாக மீட்டனர்.

``கோபுரக் கலசம் பாலிஷ் போடாம இருந்துச்சு..!” - திருச்செந்தூர் ராஜகோபுரத்தில் ஏறிய நபரால் பரபரப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 137 அடி ராஜகோபுரத்தின் கலசத்தில் ஏறிய மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்புத்துறையினர் அவரை பத்திரமாக மீட்டனர்.

Published:Updated:
ராஜகோபுரம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமுமாக இருக்கிறது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்தக் கோயிலில், 137 அடி உயரத்தில் ராஜகோபுரம் உள்ளது. இது ஒன்பது நிலைகளைக்கொண்டது. ராஜகோபுரத்தின் மீது ஒன்பது கலசங்கள் உள்ளன. இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 9 மணியளவில் ராஜகோபுரத்தின் கலசத்தின் அருகே மனிதர் ஒருவர் ஏறி அமர்ந்திருப்பதை, கோபுரத்தை தரிசனம் செய்த பக்தர்கள் சிலர் பார்த்துள்ளனர்.

ராஜகோபுரம்
ராஜகோபுரம்

இதையடுத்து அவர்கள் திருக்கோயில் பணியாளர்களிடம் இதைக் கூறினர். இது குறித்து உடனடியாக போலீஸாருக்கும் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு மீட்புப் படையினர், ரோப் கயிறு மற்றும் தார்ப்பாய்களுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ராஜகோபுரத்தின் உட்பகுதிப் படிகள் வழியாக தீயணைப்புத்துறையினர் ராஜகோபுரத்தின் மேற் பகுதிக்குச் சென்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அங்கு, கலசத்தின் அருகே அமர்ந்திருந்த நபரிடம் நைசாகப் பேசி பத்திரமாக மீட்டு கீழே இறக்கினர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர், சிவகங்கை மாவட்டம், கச்சாத்தநல்லூரைச் சேர்ந்த முத்து என்பது தெரியவந்தது. ”நான் பட்டப்படிப்பை பாதியில நிறுத்திட்டேன். இப்போ சிற்ப வேலைகளுக்குப் போறேன். திருச்செந்தூர் கோயில் ராஜகோபுத்தின் சிற்பங்கள், கலசங்கள் பெயின்ட் அடிக்காம, பாலிஷ் செய்யாம இருந்துச்சு.

திரண்ட பக்தர்கள்
திரண்ட பக்தர்கள்

பாலிஷ் செய்வதற்காக கோபுரத்தில் உள்ள சிற்பங்களைப் பிடித்து ஒன்றன் மீது ஒன்றாக ஏறி கோபுரத்தின் மேலே ஏறிப்போனேன்” எனக் கூறினார். அவரது பேச்சால், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றனர் போலீஸார். பொதுவாக சிற்ப வேலை பார்ப்பவர்களே கோபுரத்தில் பாதுகாப்புக்காகக் கயிறு கட்டித்தான் ஏறுவார்கள். இந்த நிலையில், கயிறு ஏதும் கட்டாமல், இரவு நேரத்தில் 137 அடி உயரமுள்ள கோபுரத்தில் அவர் ஏறியது பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism