Published:Updated:

திருப்பூர்: நீதிபதிகள் குறித்து அவதூறு பதிவு - மூன்று ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்தவர் கைது!

கைது

சமூக வலைதளங்களில் நீதிபதிகள் குறித்து அவதூறாகப் பதிவிட்டதாக பாலசுப்ரமணியம் என்பவரை போலீஸார் தேடி வந்தனர். ஆனால், அவர் தொடர்பான தகவல்கள் இல்லாததால் போலீஸாருக்கு அவரை பிடிப்பதில் சிரமம் இருந்தது.

திருவாரூர் மாவட்டம், பேரளத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் (எ) பாலா (49). இவர் உள்ளிட்ட 13 பேர் திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற பெண் நீதிபதி அல்லி, தாராபுரம் நீதித் துறை நடுவர் சசிகுமார் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசி யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது.

social media
social media

இது தொடர்பாக, திருப்பூர் மாநகர் குற்றப்பிரிவு மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் நீதிபதிகள் தனித்தனியாக கடந்த 2019-ம் ஆண்டு புகார் அளித்திருந்தனர். இதில், சம்பந்தப்பட்ட 12 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

இந்த நிலையில், வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. தலைமறைவாக இருந்த பாலசுப்ரமணியத்தை தேடும் பணி நடைபெற்று வந்தது. ஆனால், பாலசுப்ரமணியம் தொடர்பான தகவல்கள் இல்லாததால் போலீஸாருக்கு அவரை பிடிப்பதில் சிரமம் இருந்தது.

பாலசுப்ரமணியம்
பாலசுப்ரமணியம்

இந்த நிலையில், அவர் திண்டுக்கல்லில் இருப்பதாக போலீஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்ற திருப்பூர் சி.பி.சி.ஐ.டி காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவகுமார், காவல் ஆய்வாளர் ராதா ஆகியோர் பாலசுப்ரமணியத்தை கைதுசெய்தனர்.