Published:Updated:

க்ரைம் டேப்ஸ்: 50 கொலை, பாலியல் வன்கொடுமை; தமிழகத்தை உலுக்கிய பரபரப்பு சம்பவம் | பகுதி 1

க்ரைம் டேப்ஸ்
News
க்ரைம் டேப்ஸ்

ஜெயபாலைப் பார்த்தபோது சத்யா, ஒருபடி மேலே போய் ஜோதிமணியை எப்படி பாலியல் வன்கொடுமை கொலை செய்தேன் என்று விவரித்திருக்கிறான். ‘நான் லாரியில் வந்து கொண்டிருந்தேன்...’

ரிப்போர்ட்டர் டைரி குறிப்பு

கோவை மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூரில் தமிழக அமைச்சர் ஒருவர் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புப் பணியில் ஜோதிமணி என்ற தலைமைக் காவலர் ஈடுபட்டிருந்தார்.

நிகழ்ச்சி முடிந்து கூட்டம் கலைந்து சென்றதும், ஜோதிமணி தன்னுடைய டிவிஎஸ் 50 மொபெட்டில் வீட்டுக்குப் புறப்பட்டார். அப்போது அவரது செல்போன் அலறியது. வண்டியை நிறுத்திவிட்டு போனை எடுத்துப் பார்த்தார். அவரது நண்பர் ஜெயபாலின் எண்ணிலிருந்து அழைப்பு!!

அந்த நண்பர் ஜோதிமணியைச் சந்திக்க அங்கே வருவதாகக் கூறியிருக்கிறார். ஜோதிமணி தனக்கு வரப் போகும் ஆபத்தை உணராமல், அங்கேயே சாலையோரமாகத் தன் நண்பருக்காக காத்திருந்தார்!

செல்போன் - க்ரைம் டேப்ஸ்
செல்போன் - க்ரைம் டேப்ஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சில நிமிடங்களில் அந்த இடத்துக்கு ஜெயபால் வந்தார். ஆனால் அங்கே ஜோதிமணி இல்லை. ஜெயபால் ஜோதிமணி எண்ணுக்கு திரும்பவும் அழைத்தார். போன் சுவிட்ச் ஆஃப் என்று வந்திருக்கிறது. ஒருவேளை ஜோதிமணி வீட்டுக்குச் சென்றிருக்கலாம் என்ற நினைத்து ஜெயபால் சென்றுவிட்டார்.

அன்று இரவு ஜோதிமணி வீட்டுக்குப் போய்ச் சேரவில்லை. அவருடைய கணவர் ஜோதிமணியுடன் பணியாற்றும் சக போலீஸாரிடம் விசாரித்திருக்கிறார். எந்தப் பலனும் இல்லை. ஜோதிமணி செல்போனும் சுவிட்ச் ஆஃப் என்றே வந்திருக்கிறது.

மறுநாள் காலை முதல் வேலையாக ஜோதிமணியைக் காணவில்லை என்று அவர் பணியாற்றிய காவல் நிலையத்திலேயே புகார் பதிவு செய்யப்பட்டது.

போலீஸ் ஜோதிமணியைத் தேடத் தொடங்கியது. சைபர் க்ரைம் போலீஸார் நடத்திய விசாரணையில் ஜோதிமணியிடம் கடைசியாக செல்போனில் பேசிய நபர், அவருடைய நண்பர் ஜெயபால். அவரைப் பிடித்து விசாரித்ததில் அவர் நடந்த உண்மைகளைக் கூறினார்.

ஜோதிமணி தன் கணவருக்குத் தெரியாமல் ஜெயபாலுடன் பழகிவந்ததால் ஏற்பட்ட தகராறில், ஜெயபால் ஜோதிமணியை என்னவோ செய்திருக்கிறார் என்று போலீஸார் முதற்கட்ட விசாரணையில் முடிவு செய்தார்கள்.

அந்த நேரத்தில்தான், நெடுஞ்சாலை ஓரமாக சீருடை அணிந்த பெண் காவலர் ஒருவரின் பிணம் கிடைத்திருப்பதாக போலீஸுக்குத் தகவல் வந்தது.

சாலை ஓரம்
சாலை ஓரம்

அது வேறு யாரும் இல்ல ஜோதிமணிதான். ஜோதிமணி சடலத்துக்கு அருகே மது பாட்டில்கள் கிடந்தன. ஜோதிமணி தலையில் இரும்புக்கம்பியால் தாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருந்தார்.

அவர் உடல் கிடந்த இடத்திலிருந்து சற்றுத் தொலைவில் அவருடைய டிவிஎஸ் 50 மொபெட் கண்டுபிடிக்கப்பட்டது. ஜெயபால்தான் கொலை செய்திருப்பார் என்று முடிவு செய்த போலீஸார் அவரைக் கைதுசெயது சிறையில் அடைத்தனர். ஜெயபாலுக்குத் திருமணம் ஆகி மனைவி, இரு குழந்தைகள் இருந்தனர்.

கோவை சிறையில் இருந்த ஜெயபால், தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று புலம்பிக்கொண்டிருந்தார். அவருக்கு சக கைதிகள் ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள்.

தருமபுரியில் நடந்த ஒரு திருட்டு வழக்கில் கைதாகியிருந்த லாரி டிரைவர் சத்யா என்ற கைதி ஜெயபாலிடம் பேச்சுக் கொடுத்திருக்கிறான். அப்போது ஜெயபால் அழுதுகொண்டே கூறிய விவரங்களை கேட்ட சத்யா, ‘அடப்பாவி... அந்த போலீஸ்காரப் பொம்பளையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்னது நான்தான்யா... பாவம் உன்னைத் தூக்கி உள்ளேவெச்சிருக்காங்க‘ என்று போகிற போக்கில் சொல்லியிருக்கிறான்.

ஆரம்பத்தில் ஜெயபால்கூட அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் ஜெயபாலைப் பார்க்கும்போதெல்லாம், ‘நான் பணணின கொலைக்கு நீ அநியாயமா மாட்டிக்கிட்டியே‘ என்று அனுதாபப்பட்டிருக்கிறான் லாரி டிரைவர் சத்யா.

ஜெயபாலுக்கு லேசாகப் பொறிதட்ட ஆரம்பிக்க, மனுப் போட்டு தன்னை சந்திக்க வந்த மனைவியிடம் ‘ஜோதிமணியைக் கொன்னவன் சாதாரண கேஸ்ல உள்ளே இருக்கான். போலீஸ் என் மேல கொலைப் பழியை சுமத்திட்டாங்க‘ என்று சொல்லியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த ஜெயாபாலின் மனைவி உள்ளூர் நிருபர் ஒருவரிடம் இந்த விஷயத்தைச் சொல்ல, அவர் இதை ஜோதிமணி கேஸை விசாரிக்கும் போலீஸ்காரர்களிடம் சொல்லியிருக்கிறார்.

பாலியல் வன்முறை, கொலை
பாலியல் வன்முறை, கொலை

அவர்களோ, ‘ஜெயில்ல இருக்கற கைதிங்க பொழுது போகாம இப்படித்தான் ஏதாவது பேசி புதுசா உள்ளே போறவனை கலாய்ச்சிட்டு இருப்பாங்க‘ என்று தட்டிக் கழித்திருக்கிறார்கள்.

ஆனால் அடுத்த முறை ஜெயபாலைப் பார்த்தபோது சத்யா ஒருபடி மேலே போய் ஜோதிமணியை எப்படிப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தான் என்று விவரித்திருக்கிறான். ‘நான் லாரியில் வந்துகொண்டிருந்தேன். ரோட்டோரம் நின்றிருந்த ஜோதிமணியைப் பார்த்ததும் எனக்கு அவளை அனுபவிக்க வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. ஆள் அரவமற்ற அந்த சாலை. தனியா வேற நிக்கறா. லாரியை நிறுத்தி இறங்கி திடீர்னு கீழே விழுந்து வலிப்பு வந்தவன்போல நடிச்சேன். அந்தப் பொம்பளை என் நடிப்ப உண்மைன்னு நம்பி, என் மேல பரிதாபப்பட்டு உதவி செய்ய ஓடி வந்தா, நான் என்கிட்ட மறைச்சு வச்சிருந்த ஸ்பேனைரை எடுத்து அவ மண்டையில ஒரே போடு. அப்படியே சுருண்டு விழுந்துட்டா... அப்புறம் காட்டுக்குள்ள தூக்கிட்டுப் போய் என் ஆசையை முடிச்சுட்டு அங்கேயே உக்காந்து நான் கொண்டு போன சரக்கை அடிச்சுட்டு அவ காதுல கழுத்துல கெடந்த நகையைக் கழட்டிட்டு வந்துட்டேன்‘ என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிச் சிரித்திருக்கிறான். ஜெயபால் இந்த முறை தன்னைப் பார்க்க வந்த மனைவியிடம் இதைச் சொல்லி அழ, அவர் மறுபடியும் நிருபரை சந்தித்து இதைச் சொல்லியிருக்கிறார்.

அந்த நிருபர் இந்த முறை உயரதிகாரியிடம் ஜெயபாலின் மனைவியை அழைத்துச் சென்று நடந்த விவரங்களைச் சொல்லவைத்திருக்கிறார்.

அந்த அதிகாரி அதை சீரியஸாக எடுத்து விசாரிக்க ஆரம்பிக்க, லாரி டிரைவர் சத்யா, ஜோதிமணியைப்போல தமிழகம், ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததும், முப்பதுக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருப்பதும் தெரியவந்தது. அதன் பிறகு, சிறையிலிருந்த சத்யா இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டான்.

கைது
கைது

சேலம், கோவை சிறையில் இருந்த சத்யா, கர்நாடகாவில் நடந்த பாலியல் வன்கொடுமைக் கொலைக் குற்றத்துக்காக பெங்களூரு சிறையில் இருக்கும்போது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டான்.

இப்போது சத்யா உயிருடன் இல்லை. போலீஸும் சத்யாவை கிட்டத்தட்ட மறந்துவிட்டார்கள். நிரபராதி ஜெயபாலை தண்டனையிலிருந்து காப்பாற்றி, சத்யா என்ற சைக்கோ கொலைகாரனை வெளிஉலகத்துக்கு அம்பலப்படுத்தக் காரணமாக இருந்த அந்த உள்ளூர் நிருபர் அடுத்த பரபரப்பு செய்திக்காக ஓடிக்கொண்டிருக்கிறார்.

க்ரைம் டேப்ஸ் தொடரும்...