Published:Updated:

விழுப்புரம்: கர்ப்பிணி வயிற்றில் எட்டி உதைத்த கணவன்; ரத்தப்போக்கு ஏற்பட்டு பெண் உயிரிழந்த சோகம்

செல்வ பாண்டியன், உயிரிழந்த ராணி

குடும்ப பிரச்னையில், கர்ப்பமாக இருந்த மனைவியின் வயிற்றில் காதல் கணவன் எட்டி உதைத்ததில், ரத்தப்போக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்: கர்ப்பிணி வயிற்றில் எட்டி உதைத்த கணவன்; ரத்தப்போக்கு ஏற்பட்டு பெண் உயிரிழந்த சோகம்

குடும்ப பிரச்னையில், கர்ப்பமாக இருந்த மனைவியின் வயிற்றில் காதல் கணவன் எட்டி உதைத்ததில், ரத்தப்போக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
செல்வ பாண்டியன், உயிரிழந்த ராணி

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே உள்ள வீரங்கிபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகர். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் என மொத்தம் நான்கு பேர். இவரது 3-வது மகள் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு முகநூல் வாயிலாக தஞ்சாவூரை சேர்ந்த ஈஸ்வரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அந்த நபரை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார் ராணி. தஞ்சாவூரிலேயே வசித்து வந்த இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். 

காதல் திருமணம்
காதல் திருமணம்

அதன் பின்னர், தனது குழந்தையுடன் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு திரும்பிய ராணி, அங்கேயே வசித்து வந்துள்ளார். மேலும், கண்டாச்சிபுரம் அடுத்த மழவந்தாங்கள் கிராமத்தில் வசிக்கும் தனது அக்கா வீட்டிற்கு அவ்வப்போது சென்று வருவாராம் ராணி. அப்போது மழவந்தாங்கள் கிராமத்தை சேர்ந்த செல்வ பாண்டியன் என்பவருடன் ராணிக்கு பழக்கம் ஏற்பட்டு, பின் காதலாக மாறியுள்ளது.

இதனிடையே சில மாதங்களுக்கு முன்பாக ராணி கருவுற்றதாகவும், பின் அதனை கலைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் உறவினர்களுக்கு தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டு, ராணியின் வீட்டிலேயே தனியாக வசித்து வந்துள்ளனர். மேலும், ராணி மூன்று மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பாக, ராணியின் கார்ப்பத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டு செல்வ பாண்டியன், ராணியிடம் பிரச்னையில் ஈடுபட்டுள்ளார். அப்போது செல்வ பாண்டியன் ராணியில் வயிற்றில் பலமாக எட்டி உதைத்தாராம். இதனால் ராணிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில், வீட்டிலேயே வைத்து நாட்டு வைத்தியம் பார்த்து வந்துள்ளனர். ஆனால், அந்த வைத்தியம் பலனளிக்காமல் 28-ம் தேதி இரவு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
தே.சிலம்பரசன்

அதன் பின்னர் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் ராணி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி 29-ம் தேதி காலையில் ராணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ராணியின் தந்தை சந்திரசேகர் கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் 294B, 323, 314 ஐ.பி.சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ள போலீஸார், ராணியின் இரண்டாவது கணவர் செல்வ பாண்டியனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு, சிறையில் அடைத்துள்ளனர்.