Published:Updated:

சிறைச்சாலை கழிவறையில் விசாரணைக் கைதி தூக்கிட்டுத் தற்கொலை - விழுப்புரத்தில் பரபரப்பு!

தற்கொலை செய்து கொண்ட முருகன்

மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி, தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறைச்சாலை கழிவறையில் விசாரணைக் கைதி தூக்கிட்டுத் தற்கொலை - விழுப்புரத்தில் பரபரப்பு!

மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி, தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
தற்கொலை செய்து கொண்ட முருகன்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள டி.புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். 36 வயதான இவர், அதே பகுதியை சேர்ந்த சின்னராசு என்பவரது கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம், வேடம்பட்டில் உள்ள விழுப்புரம் மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அவர், சிறைக்கு வந்து சுமார் 3 மாதங்களாகியும் உறவினர்கள் யாரும் அவரை ஜாமீனில் எடுக்க முன்வரவில்லையாம். இதனால் முருகன் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

 தற்கொலை
தற்கொலை
மாதிரிப் படம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதன் தொடர்ச்சியாக இன்று (18.05.2022) மாலை சிறைச்சாலை கழிப்பறைக்குள் சென்ற முருகன், நீண்ட நேரமாகியும் வெளியே வராமல் இருந்து வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சிறை அதிகாரிகளும், சக கைதிகளும் கழிவறையின் உள்ளே சென்று பார்த்தபோது, தான் அணிந்திருந்த லுங்கியை பயன்படுத்தி ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தொங்கியுள்ளார் முருகன். அவரை மீட்ட சிறைத்துறையினர், முதலுதவி சிகிச்சை செய்து விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். முருகனை பரிசோதித்த மருத்துவர், 'அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார்' என்று தெரிவித்துள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனைத் தொடர்ந்து, உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து காணை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி, கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism