Published:Updated:

சேலம்: நீதிமன்ற மாடியிலிருந்து குதித்த கைதி... தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!

சேலம் மத்திய சிறை

சேலம், மேட்டூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் மாடியிலிருந்து கைதி ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலம்: நீதிமன்ற மாடியிலிருந்து குதித்த கைதி... தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!

சேலம், மேட்டூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் மாடியிலிருந்து கைதி ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
சேலம் மத்திய சிறை

சேலம், மேட்டூரையடுத்த நங்கவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் 2018-ம் ஆண்டு தன்னுடைய தாயை அடித்துக் கொலைசெய்த வழக்கில், நங்கவள்ளி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட செந்தில்குமாரை மேட்டூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது வழக்கமாக இருந்துவந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் செந்தில்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சேலம் மத்திய சிறையிலிருந்து போலீஸார் அழைத்துவந்தனர். பின்னர் போலீஸார் அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதி அடுத்த வாய்தா தேதியை அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, செந்தில்குமாரை போலீஸார் நீதிமன்ற அறையைவிட்டு வெளியே அழைத்துவந்தனர். அப்போது திடீரென செந்தில்குமார் `நான் செத்துப்போகிறேன். என்னை விடுங்க ப்ளீஸ்' என்று நீதிமன்ற முதல் மாடியிலிருந்து கீழே குதிக்க முயன்றார். போலீஸார் அவரைத் தடுக்க முயன்றனர்.

கைதி
கைதி

ஆனால், அவர் போலீஸாரைத் தள்ளிவிட்டு முதல் மாடியிலிருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த செந்தில்குமாரை போலீஸார் மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது குறித்து மேட்டூர் போலீஸார், தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.