Published:Updated:

நினைவுகளில் நிலைத்திருப்பான் நிஜநாயகன்!

ஏகேஷ் குடும்பத்தினர்
பிரீமியம் ஸ்டோரி
ஏகேஷ் குடும்பத்தினர்

சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் அரக்கோணம் செல்லும் வழியில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

நினைவுகளில் நிலைத்திருப்பான் நிஜநாயகன்!

சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் அரக்கோணம் செல்லும் வழியில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

Published:Updated:
ஏகேஷ் குடும்பத்தினர்
பிரீமியம் ஸ்டோரி
ஏகேஷ் குடும்பத்தினர்

`அநியாயத்தைத் தட்டிக்கேட்பவர்கள் ஹீரோக்கள்’ என்று சினிமாக்களில் பார்த்துப் பழகியிருக்கிறோம். ஆனால், தன் கண்ணெதிரே நடந்த அநீதியைத் தடுப்பதற்காகத் தன் உயிரையும் வழங்கி, நிஜ நாயகனாய்த் தன்னை நிரூபித்திருக்கிறார் ஏகேஷ் என்ற இளைஞர். ‘வாழும்வரை போராடு’ என்ற செய்தியை இளைஞர்கள் மனதில் அழுத்தமாகவும் ஆழமாகவும் விதைத்தும் சென்றிருக்கிறார் ஏகேஷ்.

ஏகேஷ்
ஏகேஷ்

கிறிஸ்துமஸ் தினத்தன்று, திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு பகுதியில், பெண் ஒருவர் ஆட்டோவில் கடத்தப்பட்டார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு சில இளைஞர்கள் பைக்கில் சென்று கடத்தலைத் தடுக்க முயன்றனர். ஆட்டோவைக் கொண்டு மோட்டார் சைக்கிள் மீது மோத, கொண்டச்சேரியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஏகேஷ் தலையில் அடிபட்டு, மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் பலியானார். ஒட்டுமொத்தத் தமிழகமும் ஏகேஷைப் பாராட்ட, ஒருபுறம் பெருமிதம் இருந்தாலும் இன்னொருபுறம் தீராச்சோகத்தில் மூழ்கியிருக்கிறது ஏகேஷின் குடும்பம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஏகேஷின் வீட்டுக்குச் சென்றோம். துயரத்தில் உறைந்திருந்தார்கள் குடும்பத்தினர். வீட்டில் ஏகேஷின் புகைப்படம் ஒன்றுகூட இல்லை. அம்மா பத்மாவதியிடம் . ‘என்னம்மா, உங்க பையன் போட்டோ ஒன்றுகூட இல்லையா?’ என்று கேட்டபோது, தலையில் அடித்துக்கொண்டு அழத்தொடங்கிவிட்டார். ‘‘எய்யா... வாழ வேண்டிய வயசுய்யா. இப்படி உயிரை விடுவான்னு கனவுலயும் நினைக்கலையே... என் மவன் இப்போ உயிரோடு இல்லைங்கிறதை என்னால ஜீரணிக்கவே முடியல. எங்களுக்கு அவன்தான் கடைசிப் புள்ள. வீடு முழுக்க அவனோட போட்டோதான் நிறைஞ்சிருக்கும்.

பாதிக்கப்பட்ட பெண்
பாதிக்கப்பட்ட பெண்

போட்டோவைப் பார்த்துப்பார்த்து அழுது அழுதே கண்ணீர் வத்திப்போச்சு. அவனோட போட்டோவைப் பார்த்துட்டிருந்தா நெஞ்சுவெடிச்சே செத்துப் போயிடுவேன். அதான், போட்டோவை எடுத்துப் பெட்டிக்குள்ள வெச்சுட்டேன்’’ என்றவருக்கு ஆறுதல் சொல்ல நம்மிடத்தில் வார்த்தைகள் இல்லாமல் நகர்ந்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் அரக்கோணம் செல்லும் வழியில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அத்துவான காட்டுப்பாதை போலக் காணப்படும் இந்தச் சாலையில் பெரிதும் சிறிதுமாகத் தொழிற்சாலைகள் நிறைந்திருந்தன. போக்குவரத்து அறவே இல்லாத அந்தச் சாலையில் பகலில்கூட பெண்கள் நடமாடுவது ஆபத்தாகவே தெரிந்தது. இந்தச் சாலையில் பயணித்தபோதுதான் அழகுக்கலை பெண் நிபுணர் ஒருவரை ஆட்டோ டிரைவர் கேசவன் கடத்த முயன்றிருக்கிறார். தடுக்க முயன்ற அப்பாவி இளைஞர் ஏகேஷ் பலியாகியிருக்கிறார்.

ஏகேஷ் குடும்பத்தினர்
ஏகேஷ் குடும்பத்தினர்

பாதிக்கப்பட்ட பெண்ணைச் சந்திக்க அவரின் வீட்டுக்கும் சென்றோம். ஆட்டோவிலிருந்து குதித்துத் தப்பும்போது படுகாயமடைந்திருக்கிறார். 18 நாள்களாகியும் முகத்தில் வீக்கம் வற்றவில்லை. நடக்க முடியாத நிலையில் இருந்தார். இதுவரை எந்த ஊடகத்திலும் பேசாத அவர், ஆனந்த விகடன் என்றதும் பேச முன்வந்தார். அன்று நடந்த சம்பவத்தை விவரிக்கும்போதே, கண்களில் பயம் படர்ந்தது.

“அன்னைக்கு ராத்திரி 7 மணிக்கு வீட்டுக்கு வர்றதுக்காக ஆட்டோ பிடிச்சேன். நான் மாரிமங்கலத்துக்குப் போகணும். ஆனா, கொண்டச்சேரி வளைவில் திரும்பி ஆட்டோ வேகமாப் போச்சு. எனக்கு பயம் வந்து உடனே கத்த ஆரம்பிச்சிட்டேன். அப்போ, ஒரு ஸ்பீடு பிரேக்கர்ல ஆட்டோ கொஞ்சம் ஸ்லோவாச்சு. என்னவானாலும் பரவாயில்லைன்னு ஆட்டோவுல இருந்து ரோட்டுல குதிச்சுட்டேன். கையிலயும் கண்ணுலயும் பலமா அடிபட்டுச்சு. அப்படியே மயங்கிட்டேன். அவ்ளோதான் எனக்குத் தெரியும். உடனே, அங்கிருந்தவங்க என்னை சவீதா ஹாஸ்பிட்டலுக்கு எடுத்துட்டுப் போயிருக்காங்க. என் பையில இருந்த செல்போன்ல இருந்து என் கணவருக்கு போன் செஞ்சிருக்காங்க. எனக்கு மயக்கம் தெளிஞ்ச கொஞ்ச நேரம் கழிச்சு அந்தப் பையனையும் அங்கே கொண்டு வந்தாங்க. அப்போதான், ஆட்டோவை விரட்டிப்போன ரெண்டு பசங்க விபத்துல சிக்கிட்டாங்கன்னு எனக்குத் தெரியும்.

ஏகேஷ் அம்மா வந்து கதறி அழுதாங்க...எனக்கு என்ன சமாதானம் சொல்றதுன்னே தெரியல. எனக்கும் ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. எனக்கு மனசுக்கு ரொம்ப சங்கடமாப்போச்சு. ரெண்டு நாள் கழிச்சு அந்தப் பையன் இறந்துபோனதா தகவல் கிடைச்சப்போ மனசே உடைஞ்சுபோச்சு. அந்தப் பையனோட இறப்புக்குக்கூடப் போகமுடியாத அளவுக்கு நான் நடக்க முடியாமக் கிடந்தேன். இப்போகூட என்னால சரிவர நடக்க முடியல.

நினைவுகளில் நிலைத்திருப்பான் நிஜநாயகன்!

ரோட்டுல குதிச்சப்போ பலமா கையை ஊன்றுனதுல கையைத் தூக்கக்கூட முடியல. என் கணவர்தான் எல்லாத்தையும் பார்த்துக்குறாரு. இப்போ, அந்தப் பையனோட குடும்பத்துக்கு முதலமைச்சர் 10 லட்சம் பணம் கொடுத்துருக்காருன்னு கேள்விப்பட்டேன். எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஒரு உசுருக்கு ஈடாகாது. ஆனாலும், என் மனசுல இருந்த பாரம் கொஞ்சம் இறங்கியிருக்குது. எனக்கு உடம்பு சரியானதும் ஏகேஷ் வீட்டுக்குச் போய் அவங்க அம்மாவைப் பார்ப்பேன். ஆனால், அவங்கள எப்படி எதிர்கொள்ளப் போறேன்னுதான் தெரியல!’’ என்று கண் கலங்கினார்.

தான் வாழ்ந்ததற்கு அர்த்தம் சேர்த்து மறைந்திருக்கிறார் ஏகேஷ் என்பதை அந்தக் கண்ணீர் சொல்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism