Published:Updated:

கோவில்பட்டி: 23 கொள்ளை வழக்குகளில் தொடர்பு; நகைக் கொள்ளையன் சிக்கியது எப்படி?

கைதுசெய்யப்பட்ட கொள்ளையன் பாலமுருகன்
கைதுசெய்யப்பட்ட கொள்ளையன் பாலமுருகன்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களாக வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்த நகைக் கொள்ளையனை போலீஸார் கைதுசெய்துள்ளனர். அவரிடமிருந்து 22 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, நாரைக்கிணறு, கழுகுமலை, புளியம்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த இரு மாதங்களாகத் தொடர் நகைக் கொள்ளை சம்பவங்கள் நடந்துவந்தன. இந்தச் சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்தநிலையில், இந்தச் சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையனைக் கண்டுபிடிக்க, புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தர்மர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் நடந்த வீடுகள், அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததுடன் கிடைத்த தடயங்களைவைத்தும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

மீட்கப்பட்ட 22 சவரன் தங்க நகைகளைப் பார்வையிட்ட எஸ்.பி ஜெயகுமார்
மீட்கப்பட்ட 22 சவரன் தங்க நகைகளைப் பார்வையிட்ட எஸ்.பி ஜெயகுமார்

இதில் கிடைத்த கைரேகையை இதற்கு முன்பு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்களின் கைரேகையுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது அது, தென்காசி மாவட்டம், கடையத்தைச் சேர்ந்த பாலமுருகனின் கைரேகை எனத் தெரியவந்தது. இதையடுத்து பாலமுருகனை போலீஸார் கைதுசெய்தனர். விசாரணையில் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில வீடுகளிலும் அவர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன், அவர் கொள்ளையடித்துப் பதுக்கிவைத்திருந்த 22 சவரன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர் போலீஸார். நகைக் கொள்ளையன் பாலமுருகன் சிக்கியது எப்படி என போலீஸாரிடம் விசாரித்தோம். ``கோவில்பட்டி பகுதியில் கடந்த ஓராண்டாக, வீடுகளுக்குள் புகுந்து தொடர் நகைக்கொள்ளைச் சம்பவங்களில் ஈடுப்பட்ட தென்காசியைச் சேர்ந்த ரவி என்ற கார்த்திக்கை சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் கைரேகையால் உறுதி செய்து சுற்றி வளைத்தோம். விசாரணையில் அவர் 90-க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

கல்யாணிபுரம் கொலைமுயற்சி சம்பவத்தில் கைதான பாலமுருகன், தூத்துக்குடியைச் சேர்ந்த பெருமாள்
கல்யாணிபுரம் கொலைமுயற்சி சம்பவத்தில் கைதான பாலமுருகன், தூத்துக்குடியைச் சேர்ந்த பெருமாள்
கோவில்பட்டி: 90 திருட்டுச் சம்பவங்கள்; கைரேகையைால் பிடிபட்ட கொள்ளையன்; 64 பவுன் தங்க நகை மீட்பு!

அதேபோல, இந்த வழக்கில் கைதான பாலமுருகனையும் சிசிடிவி கேமரா காட்சிகள், கைரேகையால்தான் எளிதாகக் கண்டுபிடித்தோம். கைதுசெய்யப்பட்ட கொள்ளையன் பாலமுருகனின் சொந்த ஊரான கடையம் அருகிலுள்ள கல்யாணிபுரத்தில், கடந்த 11.08.2019-ல் எலுமிச்சைத் தோட்டத்துடன்கூடிய வீட்டில் தனியாக வசித்துவந்த சண்முகவேல் - செந்தாமரை என்ற வயதான தம்பதியரிடம் நகைகளைக் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் கொலை முயற்சியும் நடந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதில், செந்தாமரை அணிந்திருந்த நாலே முக்கால் சவரன் தங்கச் சங்கிலி கொள்ளைபோனது. அந்த வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் அரிவாளைக் காட்டி மிரட்டியது, சண்முகவேலின் கழுத்தை நெரித்தது, கொள்ளையனை செந்தாமரை பிளாஸ்டிக் சேரால் தூக்கி அடித்து விரட்டியது உள்ளிட்டவை தெளிவாகப் பதிவாகியிருந்தன. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகின. அந்த வழக்கில் கைதான இருவரில் முதல் குற்றவாளி இந்த பாலமுருகன்தான். இவர்மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 23 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மீட்கப்பட்ட 22 சவரன் தங்க நகைகளைப் பார்வையிட்ட எஸ்.பி ஜெயகுமார்
மீட்கப்பட்ட 22 சவரன் தங்க நகைகளைப் பார்வையிட்ட எஸ்.பி ஜெயகுமார்

ஏற்கெனவே இரண்டு முறை குண்டர் சட்டத்திலும் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளாலும், கைரேகையாலும் சிக்கினார் கொள்ளையன் பாலமுருகன்” என்றனர். கொள்ளையன் பாலமுருகனைக் கண்டுபிடித்துக் கைதுசெய்த புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தர்மர் தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் பாராட்டியதுடன், வெகுமதியும்ம் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு