Published:Updated:

சென்னை: டிரம்மில் தாயின் சடலம்; 10 நாள்கள் மறைத்த மகன் - மருமகளால் வெளியில் தெரிந்த உண்மை

டிரம்மில் வைக்கப்பட்ட தாயின் சடலம்

வயது மூப்பு காரணமாக உயிரிழந்த அம்மாவின் இறப்பு குறித்து உறவினர்களிடம் தெரிவிக்காத மகன், வீட்டுக்குள்ளேயே டிரம்மில் அவரை அடக்கம் செய்துவைத்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை: டிரம்மில் தாயின் சடலம்; 10 நாள்கள் மறைத்த மகன் - மருமகளால் வெளியில் தெரிந்த உண்மை

வயது மூப்பு காரணமாக உயிரிழந்த அம்மாவின் இறப்பு குறித்து உறவினர்களிடம் தெரிவிக்காத மகன், வீட்டுக்குள்ளேயே டிரம்மில் அவரை அடக்கம் செய்துவைத்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

Published:Updated:
டிரம்மில் வைக்கப்பட்ட தாயின் சடலம்

சென்னை சோழிங்கநல்லூர், நியூ குமரன் நகரைச் சேர்ந்தவர் பாபு (62). இவர் நீலாங்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``என்னுடைய அம்மா செண்பகம் (83). அப்பா கோபால். எனது தம்பி முருகன். நாங்கள் இருவரும் சிறு வயதாக இருக்கும்போது எனது அப்பா கோபால் இறந்துவிட்டார். அதனால் அப்பாவின் தம்பி அம்பியுடன், அம்மா செண்பகம் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்தார். அவர்களுக்குப் பிறந்தவர் சுரேஷ். நாங்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். எங்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. நானும் என்னுடன் பிறந்த தம்பி முருகனும் தனித்தனியாகக் குடும்பத்துடன் வசித்துவருகிறோம். சுரேஷுக்கும் திருமணமாகிவிட்டது. அவரின் இரண்டு குழந்தைகள் கல்லூரியில் படித்துவருகின்றனர்.

சுரேஷ்
சுரேஷ்

என் அம்மா, தம்பி சுரேஷுடன் நீலாங்கரையில் வசித்துவந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குளியலறையில் அம்மா கீழே விழுந்துவிட்டார். அதனால் அவருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அம்மா செண்பகம், நீலாங்கரைக்கு வந்துவிட்டார். என் தம்பி சுரேஷின் மனைவி எல்சி, கணவரைப் பிரிந்து பெருங்குடியில் வசித்துவருகிறார். கடந்த 13.5.2022-ம் தேதி பெருங்குடியில் வசிக்கும் என் அத்தை தங்கமும், தம்பி மனைவி எல்சியும் எனக்கு போன் செய்து செண்பகத்தைக் காணவில்லை என்று கூறினர். நான் கன்னியாகுமரியில் இருந்ததால் 15.5.2022-ம் தேதி சென்னைக்கு வந்து சுரேஷிடம் அம்மா எங்கே என்று விசாரித்தேன். அதற்கு `அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் கடந்த 10 நாள்களுக்கு முன் இறந்துவிட்டார். அதனால் வீட்டில் தண்ணீர் பிடிக்கும் டிரம்மில் உள்ளேவைத்து சிமென்ட்டால் பூசிவைத்திருக்கிறேன்' என்று கூறினான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நான் அந்த டிரம் அருகில் சென்றபோது தூர்நாற்றம் வீசியது. எனது அம்மாவின் இறப்பை மறைத்த சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மாவின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்து நல்லடக்கம் செய்ய என்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். புகாரின்பேரில் எஸ்.ஐ பிரதீப் வழக்கு பதிவுசெய்து விசாரித்தார். இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் திருஞானம், போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று டிரம்மிலிருந்த செண்பகத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் செண்பகத்தின் மரணம் குறித்து சுரேஷிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சடலம்
சடலம்

இது குறித்து போலீஸார் கூறுகையில், `` உயிரிழந்த செண்பகத்துக்கு பாபு, முருகன், சுரேஷ் என மூன்று மகன்கள் உள்ளனர். நீலாங்கரையில் சொந்த வீட்டில் செண்பகம் வசித்துவந்தார். இவரின் வீடு இரண்டு தளங்களைக்கொண்டது. செண்பகமும் சுரேஷின் குடும்பமும் இந்த வீட்டில் வசித்துவந்தனர். சுரேஷ், டெய்லராக வேலை பார்த்துவந்துள்ளார். இவரின் மனைவி எல்சி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுரேஷுக்குச் சில ஆண்டுகளாக மனநல பாதிப்பு இருந்ததால் அதற்குச் சிகிச்சையும் பெற்றுவந்தார். அடிக்கடி மனைவி, குழந்தைகளோடு சுரேஷ் தகராறு செய்துவந்தார். அதனால் அவரைப் பிரிந்து மனைவியும் குழந்தைகளும் பெருங்குடியில் தனியாக வசித்துவருகின்றனர்.

நீலாங்கரை வீட்டில் செண்பகமும் சுரேஷும் வசித்துவந்த நிலையில், கடந்த பத்து நாள்களாக செண்பகத்தைக் காணவில்லை. வீட்டிலும் அவரின் நடமாட்டம் இல்லை. அதனால்தான் செண்பகத்தைக் காணவில்லை என்று அவரின் மூத்த மகன் பாபுவிடம் எல்சியும், அவரின் உறவினர் தங்கமும் போனில் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பிறகே செண்பகம் உயிரிழந்த தகவல் வெளியில் தெரியவந்துள்ளது. கீழ்த்தளத்தில் உள்ள ஓர் அறையில் டிரம்மில் அம்மாவின் சடலத்தைவைத்த சுரேஷ், அதன் அருகிலேயே இருந்திருக்கிறார்.சுரேஷ், அக்கம் பக்கத்தில் யாரிடமும் பேசாததால் செண்பகம் உயிரிழந்த தகவல் யாருக்கும் தெரியவில்லை. செண்பகம் மரணம் தொடர்பாக சுரேஷிடம் விசாரித்தபோது `அம்மா தெய்வமாகிவிட்டார். அவரைப் பிரிய மனமில்லை. அதனால்தான் வீட்டிலேயே அடக்கம் செய்துவிட்டேன்' என்று கூறினார். பிரேத பரிசோதனையில் வயது மூப்பு காரணமாகவே செண்பகம் இறந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து செண்பகத்தின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளோம். தாய் இறந்த தகவலை ஏன் யாருக்கும் தெரிவிக்கவில்லை என சுரேஷிடம் விசாரித்துவருகிறோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism