Published:Updated:

மாணவி தற்கொலை விவகாரம்: ``முதல்வர் மெளனமாக இருப்பது ஏன்?!” - பாஜக குழுவைச் சேர்ந்த விஜயசாந்தி

பாஜக சார்பில் அமைக்கப்பட்ட குழு ( ம.அரவிந்த் )

``மதமாற்றம் என்று இல்லை, வேறு எந்த விஷயமாக இருந்தாலும், மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது தவறு. தைரியமாக எந்த விஷயமாக இருந்தாலும் சந்திக்க வேண்டும்” என தஞ்சாவூர் வந்த பாஜக சார்பில் அமைக்கப்பட்ட குழுவைச் சேர்ந்த விஜயசாந்தி கூறினார்.

மாணவி தற்கொலை விவகாரம்: ``முதல்வர் மெளனமாக இருப்பது ஏன்?!” - பாஜக குழுவைச் சேர்ந்த விஜயசாந்தி

``மதமாற்றம் என்று இல்லை, வேறு எந்த விஷயமாக இருந்தாலும், மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது தவறு. தைரியமாக எந்த விஷயமாக இருந்தாலும் சந்திக்க வேண்டும்” என தஞ்சாவூர் வந்த பாஜக சார்பில் அமைக்கப்பட்ட குழுவைச் சேர்ந்த விஜயசாந்தி கூறினார்.

Published:Updated:
பாஜக சார்பில் அமைக்கப்பட்ட குழு ( ம.அரவிந்த் )

பாஜக ``தமிழக அரசு, மாணவி தற்கொலை விவகாரத்தில், மெளனமாக உள்ளது. ஏன் மெளனமாக இருக்கிறது என்பது தெரியவில்லை ஒருதலைபட்சமாகவும் செயல்படுகிறது. முதல்வர் மெளனமாக இருப்பதைப் பார்த்தால்,எங்களுக்குச் சந்தேகம் வருகிறது. மாணவியின் தந்தை 25 ஆண்டுக்ளாக தி.மு.க-வில் தொண்டராக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது” என தஞ்சாவூர் வந்த பாஜக சார்பில் அமைக்கப்பட்ட குழுவைச் சேர்ந்த விஜயசாந்தி தெரிவித்தார்.

மாணவி தற்கொலை விவகாரத்தில் பாஜக  சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர்
மாணவி தற்கொலை விவகாரத்தில் பாஜக சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர்

தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டி, துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவந்த அரியலுார் மாவட்டம், வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்த17 வயது மாணவி ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 19-ம் தேதி உயிரிழந்தார். மாணவியின் தற்கொலைக்கு அவர் தங்கிப் படித்த ஹாஸ்டல் வார்டன் மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதே காரணம் என சர்ச்சை எழுந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது தொடர்பாக இறப்பதற்கு முன்பு அந்த மாணவி பேசிய இரண்டு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. மதம் மாறச் சொல்லி அழுத்தம் கொடுத்துவந்ததால் மாணவி தற்கொலை செய்துகொண்டார் என பாஜக மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் இதிக் கையில் எடுத்து போராட்டமும் நடத்தினர். மாணவி விவகாரத்தில் இரு வேறுவிதமான கருத்துகள் நிலவிவரும் நிலையில், அதை விசாரித்து உண்மை நிலையைக் கண்டறிய பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நான்கு பேர்கொண்ட குழு அமைத்து உத்தரவிட்டார்.

தற்கொலை செய்துகொண்ட மாணவி படித்த பள்ளி
தற்கொலை செய்துகொண்ட மாணவி படித்த பள்ளி

இதைத் தொடர்ந்து மைக்கேல்பட்டி கிராம மக்கள், `பள்ளியில் இதுவரை மதமாற்றம் எதுவும் நடைபெறவில்லை. கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் பாரம்பர்யமான பள்ளியில் 60 சதவிகிதத்துக்கு மேல் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களே படித்துவருகிறார்கள். எங்க ஊரில் மத வேறுபாடுகள் இல்லாமல் இருந்துவருகிறோம். பாஜக உள்ளிட்ட எந்தக் குழுவும் எங்க ஊருக்கு வந்து விசாரிக்க வேண்டாம்’ என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதற்கிடையே, மாணவியின் தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையக் குழுவினரும் 20-க்கும் மேற்பட்ட தரப்பினரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அமைத்த குழுவைச் சேர்ந்த மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி சந்தியா ரே, முன்னாள் எம்.பி-யும், நடிகையுமான தெலங்கானாவைச் சேர்ந்த விஜயசாந்தி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த சித்ரா தாய் வாக், கர்நாடகா கீதா விவேகானந்தா ஆகியோர் மாணவி தற்கொலை குறித்து விசாரிக்க தஞ்சாவூர் வந்தனர். அக்குழுவினர் மைக்கேல்பட்டி கிராமத்துக்குச் செல்வதற்கு போலீஸார் அனுமதிக்கவில்லை. இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மைக்கேல்பட்டி அருகே உள்ள செந்தலை கிராமத்திலுள்ள பாஜக நிர்வாகி ஒருவர் வீட்டுக்குக் குழுவினர் செல்லவிருப்பதாகவும் தகவல் வெளியானதால் அங்கும் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

பி.ஜே.பி குழுவைச் சேர்ந்த விஜயசாந்தி
பி.ஜே.பி குழுவைச் சேர்ந்த விஜயசாந்தி

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரைச் சந்தித்த பாஜக குழுவினர், கலெக்டரிடம் 10 நிமிடங்கள் மாணவி தற்கொலை தொடர்பாக தங்கள் விளக்கத்தையும், அதன் பின்னர் அது குறித்த விவரங்களையும் கேட்டறிந்தனர். பின்னர் விஜயசாந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், ``இந்த ஒரு மாணவிக்கு நடந்ததுபோல, மற்ற மாணவிகளுக்கு நடக்கக் கூடாது. மிகவும் கஷ்டமாக உள்ளது. மதமாற்ற தடைச் சட்டத்தை இன்னும் வலுப்படுத்த வேண்டும். மாணவிக்கு நல்ல நீதி கிடைக்க வேண்டும்.

மத மாற்றம் தொடர்பாக என்று மட்டும் இல்லை, வேறு எந்த விஷயமாக இருந்தாலும், மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளவது தவறானது. தைரியமாக எந்த விஷயமாக இருந்தாலும் சந்திக்க வேண்டும். பெற்றோர் உங்கள்மீது எவ்வளவு ஆசைவைத்திருப்பார்கள். நீங்கள் தற்கொலை செய்துகொண்டு இறப்பது ஒரு நிமிடத்தில் முடிந்தும்விடும், வாழ்நாள் முழுவதும் உங்கள் பெற்றோர்கள் கஷ்டப்படுவார்கள். வாழ்வில் போராட வேண்டும்.

தமிழக அரசு மாணவி விவகாரத்தில், மிகவும் மெளனமாக உள்ளது. ஏன் மெளனமாக இருக்கிறது எனத் தெரியவில்லை. தமிழக அரசு ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறது. இதுவரை மாணவியின் குடும்பத்துக்கு யாரும் ஆதரவு அளிக்கவில்லை. பாஜக சார்பில் 10 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் மாணவியின் குடும்பத்துக்கு அரசு கொடுக்க வேண்டும். பாஜக இதில் அரசியல் செய்யவில்லை. மதமாற்றத்துக்காகக் கட்டாயப்படுத்தியாக அந்த மாணவியே கூறியிருக்கிறார்.

முதல்வர் மெளனமாக இருப்பதைப் பார்த்தால், எங்களுக்கு சந்தேகம் வருகிறது. தவறு செய்வதவர்களுக்கு ஆதரவு அளிக்கிறார். இறந்தவருக்கு ஆதரவு அளிக்க மறுப்பதாகத் தெரிகிறது. இது போன்ற விஷயம் மற்ற மாணவிகளுக்கு நடக்காமலிருக்க முதல்வர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த மாணவியின் தந்தை 25 ஆண்டுகளாக தி.மு.க.-வில் தொண்டராக இருக்கிறார். அவர் கட்சியில் இருப்பவருக்கே இந்த நிலைமை வந்துள்ளது.

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் பி.ஜே.பி குழுவினர்
தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் பி.ஜே.பி குழுவினர்

ஆனால் முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்தார் எனத் தெரியவில்லை. முதல்வரே, ப்ளீஸ் உங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ளுங்கள். தி.மு.க பற்றி எங்களுக்குத் தெரியும். எனவே, மக்களுக்கு நல்லது செய்யுங்கள்” என்றார்.

`நீட் தேர்வு விவகாரத்தில் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். அப்போது நீங்க வரவில்லையே..?’ என செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பபட்டதற்கு, `தற்போது தற்கொலை செய்துகொண்ட மாணவிக்காக வந்திருக்கிறோம். அதைப் பற்றி மட்டுமே பேசுவோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism