Published:Updated:

பெரம்பலூர்: மறைந்திருந்து வீடியோ எடுத்த வாலிபர்; அலறிய மாணவிகள் - பொதுமக்களிடம் சிக்கி, தப்பிய நபர்

பெரம்பலூர் எஸ்.பி ஆபீஸ்

கழிவறை மாணவ, மாணவிகளுக்கு முக்கியமான ஒன்று. அதை ஏற்படுத்தித் தராதது அரசின் தவறு. அரசுப் பள்ளி வளாகத்துக்குள் மாணவிகளை இளைஞர் மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுக்கிறார் என்றால் தரம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.

பெரம்பலூர்: மறைந்திருந்து வீடியோ எடுத்த வாலிபர்; அலறிய மாணவிகள் - பொதுமக்களிடம் சிக்கி, தப்பிய நபர்

கழிவறை மாணவ, மாணவிகளுக்கு முக்கியமான ஒன்று. அதை ஏற்படுத்தித் தராதது அரசின் தவறு. அரசுப் பள்ளி வளாகத்துக்குள் மாணவிகளை இளைஞர் மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுக்கிறார் என்றால் தரம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.

Published:Updated:
பெரம்பலூர் எஸ்.பி ஆபீஸ்

இயற்கை உபாதை கழிக்கச் சென்ற மாணவிகளை போனில் வீடியோ எடுத்த இளைஞரைப் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பெரம்பலூர்
பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகேயுள்ள நன்னை கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இருக்கிறது. அங்கு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர். அதில், 200-க்கும் மேற்பட்ட மாணவியர்கள் படித்துவருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடக்கப் பள்ளியாக இருந்தது, உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. உயர்நிலைப் பள்ளியில் மாணவியர்களுக்குக் கழிப்பறை வசதி இல்லாததால் தொடக்கப்பள்ளி வளாகத்திலுள்ள கழிப்பறைக்குச் சென்று மாணவிகள் இயற்கை உபாதைகள் கழிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாணவிகள் சிலர் இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அத்துமீறி மறைந்திருந்து, தனது செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். இதைக் கண்ட மாணவிகள் கத்தியிருக்கிறார்கள். மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டனர்.

நன்னை கிராமம்
நன்னை கிராமம்

மாணவிகளிடம் என்ன நடந்தது எனக் கேட்டு அறிந்து வாலிபரைத் தேடிப்பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அடி தாங்க முடியாத வாலிபர் தப்பியோடித் தலைமறைவானார். பின்னர் காவல்துறையினருக்குப் பொதுமக்கள் தகவல் அளித்த பிறகு அந்த இளைஞரின் புகைப்படத்தைக் காட்டி போலீஸாருக்கு தகவலைச் சொல்லியிருக்கிறார்கள்.

பின்பு போலீஸார் நடத்திய விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன்தான் அந்த வாலிபர் என்பது தெரியவந்தது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்த குன்னம் போலீஸார் தலைமறைவான மணிகண்டனைத் தேடிவருகின்றனர்.

பெரம்பலூர்  போலீஸார்
பெரம்பலூர் போலீஸார்

மத்திய, மாநில அரசுகள் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு ஏற்படும் அவலங்களைப் போக்கத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் தரப்பில் பேசினோம். ```ஒரு பள்ளி தரம் உயர்த்தப்படுகிறது என்றால் அதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். கழிவறை மாணவ, மாணவிகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. அதை ஏற்படுத்தித் தராதது அரசின் தவறு. அரசுப் பள்ளி வளாகத்துக்குள் மாணவிகள் இயற்கை உபாதை கழிப்பதை இளைஞர் மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுக்கிறார் என்றால் பள்ளியின் தரம் எப்படியிருக்கிறது என்று பாருங்கள்.

வீடியோ எடுத்த இளைஞர்
வீடியோ எடுத்த இளைஞர்

எத்தனையோ அரசுக் கட்டங்கள் சும்மாவே கிடக்கின்றன. கோடிக்கணக்கில் தேவை இல்லாததற்கெல்லாம் இந்த அரசு செலவு செய்துகொண்டிருக்கிறது. ஆனால், மாணவ, மாணவிகள் பயிலும் பள்ளிகளில் போதிய கழிவறைகள் இல்லாதது வேதனை அளிக்கிறது” என்று ஆதங்கப்படுகிறார்கள்.