Published:Updated:

பெண்களை இழிவுபடுத்திய புல்லிபாய் ஆப்பை உருவாக்கியது ஏன்?! - கைதான இளம்பெண் சொல்வது என்ன?

மும்பைக்கு அழைத்து வரப்பட்ட விஷால் குமார்
News
மும்பைக்கு அழைத்து வரப்பட்ட விஷால் குமார்

மும்பை போலீஸார் இந்த விவகாரத்தில், வழக்கு பதிவு செய்த 24 மணி நேரத்தில் துப்பு துலக்கி, குற்றவாளிகளைக் கைதுசெய்துள்ளனர். ஸ்வேதா தனது தந்தையைக் கடந்த ஆண்டு கொரோனாவுக்கு பறிகொடுத்துவிட்டார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு `புல்லிபாய்’ என்ற மொபைல் ஆப்பில் பிரபலமான இஸ்லாமிய பெண்கள் 100 பேரின் புகைப்படங்களை வெளியிட்டு, `ஏலம்விடப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு அந்தப் பெண்கள் குறித்து மோசமான தகவல்களையும் பதிவிட்டிருந்தனர். இது குறித்து மும்பை, டெல்லியில் பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவந்தனர்.

இது குறித்து விசாரித்த மும்பை சைபர் பிரிவு போலீஸார், இரண்டு நாள்களுக்கு முன்பு பெங்களூரில் பொறியியல் படித்துவந்த பீகாரைச் சேர்ந்த விஷால் குமார் ஷா (21) என்பவரைக் கைதுசெய்தனர். அவரை மும்பைக்குக் கொண்டுவந்து விசாரணை நடத்தியதில், புல்லிபாய் மொபைல் ஆப்பை உருவாக்கியதில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. உடனே இது குறித்து மும்பை போலீஸார் உத்தரகாண்ட் போலீஸாருக்குத் தகவல் கொடுத்து உத்ராப்பூரைச் சேர்ந்த ஸ்வேதா சிங் (18) என்ற இளம்பெண்ணைக் கைதுசெய்தனர்.

சைபர் க்ரைம்
சைபர் க்ரைம்
சித்தரிப்புப் படம்

அவரிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில், கடந்த சில மாதங்களாக, தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் ஆட்சேபகரமான தகவல்களைப் பதிவிட்டு வந்திருக்கிறார் என்பது தெரியவந்தது. அதோடு ஒத்த கருத்துடைய சமூக வலைதள நண்பர்களுடன் அடிக்கடி சாட்டிங் செய்திருக்கிறார். விஷால் சிங்கும் ஸ்வேதாவுக்கு சமூக வலைதளம் மூலமே அறிமுகமாகி நண்பர்களாகியுள்ளனர். இருவரும் அடிக்கடி தொடர்பில் இருந்துள்ளனர். விஷால் குமார் புல்லிபாய் ஆப்பில், குறிப்பிட்ட மதப் பெண்களின் புகைப்படங்களைத் தனது மொபைல், லேப்டாப் மூலம் பதிவேற்றம் செய்ததாகவும், ஆப்பை அவர் உருவாக்கவில்லை என்றும் இவ்வழக்கை விசாரித்துவரும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதேசமயம் ஸ்வேதா சிங் இந்த மொபைல் ஆப்பை உருவாக்கியதாகத் தெரிகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அவரிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில், தனது நேபாள நண்பர் கேட்டுக்கொண்டதால் இந்த மொபைல் ஆப்பை உருவாக்கியதாகப் பொறியியல் படிப்புக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்த ஸ்வேதா சிங் தெரிவித்திருக்கிறார். இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கும் என்று கருதப்படுகிறது.

விஷால் குமார் புல்லிபாய் மொபைல் ஆப்புடன் மூன்று இமெயில் ஐடி-யை இணைத்துள்ளார். அதில் ஒன்று `கல்சா’ என்ற பெயரில் இருக்கிறது. எனவே விஷால் குமாருக்கு காலிஸ்தான் அமைப்புடன் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும், அல்லது விசாரணையை திசைதிருப்ப கல்சா பெயரில் இமெயில் ஐடி-யை திறந்தனரா என்பது குறித்தும் விசாரித்துவருவதாக மும்பை குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விஷால் குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, தங்களது காவலில் எடுத்து இது குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

சைபர் க்ரைம்
சைபர் க்ரைம்

அதேசமயம் விஷால் குமார் தவறான குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டிருப்பதாக அவரின் வழக்கறிஞர் பிரஜாபதி தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள ஸ்வேதாவை மும்பைக்கு அழைத்து வர போலீஸார் உத்தரகாண்ட் சென்றுள்ளனர். அவரை மும்பைக்கு அழைத்து வந்து ஸ்வேதாவையும், விஷால் குமாரையும் நேருக்கு நேர் வைத்து விசாரித்தால் இதில் மேலும் பல உண்மைகள் வெளியில் வரும் என்று போலீஸார் எதிர்பார்க்கின்றனர்.

மும்பை போலீஸார் இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்த 24 மணி நேரத்தில் துப்பு துலக்கி குற்றவாளிகளைக் கைதுசெய்துள்ளனர். ஸ்வேதா, தன்னுடைய தந்தையை கடந்த ஆண்டு கொரோனாவுக்குப் பறிகொடுத்துவிட்டார். தற்போது ஸ்வேதாவும் அவரின் சகோதரிகளும் மாநில அரசு கொடுக்கும் 3,000 ரூபாயில்தான் வாழ்ந்துவருகின்றனர்.