Published:Updated:

பழநி: 12 சென்ட் இடம்… வேலி அமைக்கச் சென்ற இருவர்மீது துப்பாக்கிச்சூடு! - திரையரங்க உரிமையாளர் கைது

காயமடைந்தவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
காயமடைந்தவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நிலப்பிரச்னை காரணமாக, இருவரைத் தனது கைத்துப்பாக்கியால் சுட்ட திரையரங்க உரிமையாளர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகேயுள்ளது அக்கரைப்பட்டி கிராமம். இங்கு வசித்துவருபவர் இளங்கோவன். இவருக்கு, பழநி நகர் அப்பர் தெருவில் சொந்தமாக 12 சென்ட் இடம் இருக்கிறது. அதனருகே, பழநியில் திரையரங்கம் வைத்திருக்கும் பிரபல தொழிலதிபர் நடராஜ் வசித்துவருகிறார். இந்தநிலையில், தனது வீட்டருகேயுள்ள 12 சென்ட் இடத்தில் தனக்குச் சொந்தமான இடம் இருப்பதாக நடராஜ் கூறியிருக்கிறார். அதை இளங்கோவன் ஏற்க மறுத்திருக்கிறார். இந்த விவகாரம் கடந்த சில மாதங்களாகவே நீடித்துவந்திருக்கிறது.

`தலைதூக்கும் நாட்டுத் துப்பாக்கி கலாசாரம்!' - போலீஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த அடுத்தடுத்த வழக்குகள்
படுகாயமடைந்தவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
படுகாயமடைந்தவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தநிலையில், இன்று காலை, தனது உறவினர்களான பழனிசாமி, சுப்பிரமணி இருவரையும் அழைத்துக்கொண்டு வந்த இளங்கோவன், 12 சென்ட் இடத்தில் வேலி அமைக்க முயன்றிருக்கிறார். இதை அறிந்த நடராஜ், வேலி அமைக்க எதிர்ப்பு தெரித்ததோடு, அவர்களை தடுத்திருக்கிறார். அப்போது நடராஜுக்கும், இளங்கோவன் தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் விசாரணை செய்யும் போலீஸார்.
மருத்துவமனையில் விசாரணை செய்யும் போலீஸார்.

அப்போது, தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்த நடராஜ், இளங்கோவன் தரப்பினர் மீது சரமாரியாகச் சுட்டிருக்கிறார். இதில், இளங்கோவன் தப்பியோடவே, சுப்பிரமணியின் வயிற்றிலும், பழனிசாமியின் காலிலும் குண்டு பாய்ந்து சம்ப இடத்திலேயே இருவ்ரும் சுருண்டு விழுந்தனர். அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டு, பழநி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இந்தநிலையில் நடராஜ் தலைமறைவானார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பழனி காவல்துறையினர், விசாரணை செய்து, சிகிச்சையிலிருந்த இருவரிடமும் வாக்குமூலம் பெற்று நடராஜைத் தேடினர். பின்னர், நடராஜ் கைதுசெய்யப்பட்டார். இது தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறும்போது, ``நடராஜ் வைத்திருந்த துப்பாக்கிக்கு அவர் முறையான உரிமம் வைத்திருக்கிறார். இருந்தபோதும், அவர் மீது வழக்கு பதிவு செய்து கைதுசெய்திருக்கிறோம்” என்றனர்.

திண்டுக்கல்: போலி பட்டா மூலம் நில அபகரிப்பு! - முன்ஜாமீன் பெற்ற சார்பதிவாளர்கள்

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை வட்டாரத்தில் தொடர்ச்சியாக நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுவரும் சூழலில், தற்போது பழநியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்திருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு