Published:Updated:

திசையன்விளை: ‘நைட்டி அணிந்து 5 கடைகளில் திருடிய திருடன்' - பரபரப்பான சிசிடிவி காட்சிகள்!

நைட்டி அணிந்து கொள்ளையில் ஈடுபட்ட திருடன்
நைட்டி அணிந்து கொள்ளையில் ஈடுபட்ட திருடன்

பூட்டிய கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த திருடன் பொருள்களைத் தேடும் காட்சிகள் சிசிடிவி-யில் பதிவாகியுள்ளன. அடையாளம் தெரியாமலிருக்க பெண்கள் அணியும் நைட்டியை அணிந்து திருட்டில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்திருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நெல்லை மாவட்டம், திசையன்விளை பஜாரில் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார். அங்குள்ள மூன்று பலசரக்குக் கடைகள், ஒரு பெட்டிக் கடை, ஒரு நகைக்கடை ஆகியவற்றின் பூட்டை உடைத்து இந்தத் துணிகரத் திருட்டு நடந்துள்ளது.

சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி காட்சிகள்
மும்பை: காவல் நிலையத்தில் பழைய வாகனங்களின் பாகங்கள் திருட்டு; ரூ.26 லட்சத்துக்கு விற்ற பெண் காவலர்!

கடைகளில் பணம் இல்லாததால் மொத்தம் ரூ.50,000 மதிப்பிலான ரொக்கப் பணத்தை மட்டுமே திருடனால் எடுக்க முடிந்திருக்கிறது. நகைக் கடையின் முன்பக்க ஷட்டரை உடைத்த திருடனால் அடுத்து இருந்த ஷட்டரை உடைக்க முடியவில்லை. அதனால் உள்ளே வைக்கப்பட்டிருந்த நகைகள் அதிர்ஷ்டவசமாகத் தப்பின.

இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து போலீஸாரிடம் கேட்டதற்கு, ``திசையன்விளைப் பகுதியில் இரவு 12 மணி முதல் 2:30 மணிக்குள் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. இதில் ஈடுபட்ட திருடன் கண்கள் மட்டுமே தெரியும் அளவுக்கு முகத்தை மூடியிருப்பதுடன், பெண்கள் அணியும் நைட்டியை அணிந்தபடி திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

கொள்ளை நடந்த கடை
கொள்ளை நடந்த கடை

கடைகளின் உள்ளேயிருக்கும் சிசிடிவி-களை, பிளாஸ்டிக் பந்தை அறுத்து அதன் மூலம் காட்சிகள் பதிவாக முடியாதபடி அடைத்திருக்கிறான். கைரேகை தெரிந்துவிடக் கூடாது, சத்தம் வந்துவிடக் கூடாது என்பதற்காகப் பூட்டை உடைக்கும்போது துணியால் சுற்றி அடித்து உடைத்திருக்கிறான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனியாகத் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் திருடனுக்கு 35 வயது இருக்கும் எனக் கணிக்க முடிகிறது. அவனது அங்க அடையாளங்களைவைத்து அந்த மர்ம நபரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்தனர்.

சிசிடிவி பதிவை ஆய்வு செய்யும் போலீஸார்
சிசிடிவி பதிவை ஆய்வு செய்யும் போலீஸார்

திசையன்விளை பகுதியில் ஒரே நாளில் ஐந்து கடைகளின் ஷட்டரை உடைத்து, கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது தொடர்பாக வணிகர்களிடம் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இந்தத் துணிகரத் திருட்டில் ஈட்டுபட்ட திருடன் யார் என்பதைக் கண்டுபிடித்து விரைவாகக் கைதுசெய்ய வேண்டும் என வணிகர் சங்கத்தினர் போலீஸருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு