Published:Updated:

`ஐந்து நிமிடங்களுக்குள் திருடப்படும் கார்கள்' - 1,000 கார்களை அபேஸ் செய்த திருடன் பிடிபட்டது எப்படி?

அவரை போலீஸார் மடக்கிப்பிடித்து கைதுசெய்தனர். அவரிடமிருந்து ஐந்து கார்கள், கார் சாவிகள், கார் லாக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டெல்லி, உத்தரப்பிரதேசத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக கார்கள் திருடு போய்க்கொண்டிருந்தன. இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக தீவிரவாத தடுப்புப் படை விசாரித்துவந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தீவிரவாத தடுப்புப் படை போலீஸார் கார் திருட்டு தொடர்பாக ராம்ஜித் என்பவரைக் கைதுசெய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் திருட்டு கார்களை உத்தரப்பிரதேசத்திலுள்ள மீரட்டில் விற்பனை செய்வதாகத் தெரிவித்திருக்கிறார். அதோடு கார் திருட்டுக்கு தீபக் ராணா என்பவரின் ஆட்கள் தனக்கு உதவி செய்ததாகவும் விசாரணையில் தெரிவித்தார். உடனே தீபக் ராணாவைக் கைது செய்ய, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட தீபக் ராணா
கைதுசெய்யப்பட்ட தீபக் ராணா
கார் திருட்டு; சேஸிங்; `சைலேந்திரபாபு சார் 3 முறை போனில் பாராட்டிப் பேசினார்!’ - நெகிழ்ந்த காவலர்

தீபக் ஒரு இடத்தில் கார் திருடும்போது பதிவான கண்காணிப்பு கேமரா பதிவிலிருந்து தீபக்கின் புகைப்படம் கிடைத்தது. அதை அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் அனுப்பித் தேட ஆரம்பித்தனர். அதோடு தீபக்கின் போன் நம்பர்கள் மூலம் அவரின் நடமாட்டத்தையும் கண்கானித்தனர். தீபக்கும், அவருடைய மனைவியும் காரில் சிம்லா நோக்கிச் செல்வதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் தீபக் காரைப் பின்தொடர்ந்து சென்றனர். தீபக்கும் அவர் மனைவியும் சிம்லாவிலுள்ள ஒரு ஹோட்டலுக்குள் சென்றனர். உடனே அவரை போலீஸார் மடக்கிப்பிடித்து கைதுசெய்தனர். அவரிடமிருந்து ஐந்து கார்கள், கார் சாவிகள், கார் லாக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், தீபக் 3-5 நிமிடங்களுக்குள் கார்களைத் திருடிவிடுவார். திருடிய கார்களை உடனே மீரட்டடுக்குக் கொண்டு சென்று சோயப் மாலிக் என்பவரிடம் கொடுத்து அதன் அடையாளத்தையும், இன்ஜின் நம்பரிஅயும் மாற்றி, வேறு ஒருவருக்கு விற்பனை செய்துவிடுவது தீபக்கின் வழக்கம். கடந்த மூன்று ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்களைத் திருடி விற்பனை செய்திருக்கிறார். நன்றாகப் படித்தும் வேலையில்லாத காரணத்தால் இது போன்ற கார் திருட்டில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு