விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரில், அண்மையில் அமைக்கப்பட்ட ஆவின் பாலகம் ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த ஆவின் பாலகத்தை சுந்தர் என்பவர் நடத்திவருகிறார். நேற்று (03.05.2022) அதிகாலை தனது நண்பர்களுடன் அந்தக் கடைக்குச் சென்றிருக்கிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 42-வது வார்டு விழுப்புரம் நகரமன்ற உறுப்பினர் சுரேஷ்ராம். அப்போது, வீரகுமார் எனும் ஊழியர் பாலகத்தில் பணியில் இருந்திருக்கிறார். அவரிடம், சுரேஷ்ராமும் அவருடன் வந்தவர்களும் சிகரெட் கேட்டதாகக் கூறப்படுகிறது.
'ஆவின் பாலகம் என்பதால் இங்கு சிகரெட் இல்லை' என்று அந்தப் பணியாளர் கூறினாராம். மது அருந்தியிருந்ததாகக் கூறப்படும் சுரேஷ்ராமும், அவருடன் வந்தவர்களும், 'சிகரெட் விற்காதது ஏன்?' எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. பிறகு, பணியில் இருந்த வீரகுமாரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, சட்டையைப் பிடித்து இழுத்து அடித்துள்ளனர். இது குறித்து ஆவின் பாலகத்தின் உரிமையாளர் சுந்தர், விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, சுரேஷ்ராம் தரப்பு தகராறில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர் ஒருவரே, சிகரெட் கேட்டு தகராறில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.