Published:Updated:

` கண்முன் மனைவி தற்கொலை; தடுக்க முடியாத தலைக்கேறிய போதையில் கணவன்! - கரூரில் அதிர்ச்சிகர சம்பவம்'

தற்கொலை
தற்கொலை

ஆசித், மாலதி தூக்கில் தொங்குவதைக் கைகாட்ட, அதைக் கண்ட தனசேகரன் போதையில் தள்ளாடிப் போய் மனைவி தூக்கில் தொங்கிய சுடிதார் துணியை அறுத்து மனைவியின் உடலைத் தரையில் போட்டுவிட்டு, மீண்டும் குடிபோதையில் தூங்கியிருக்கிறார்.

கண்முன்னே மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க நினைத்தும், அளவுக்கதிகமாகக் குடித்த மதுவால் கணவர் படுத்துத் தூங்கிவிட, அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், கரூர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

தூக்கு
தூக்கு
108 ஆம்புலன்ஸில் பிரசவம்; மருத்துவ உதவியாளருக்கு குவியும் பாராட்டு!

கரூர் மாவட்டம், மாயனூர் காசா காலனியைச் சேர்ந்தவர் மாலதி. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, பெரம்பலூர் மாவட்டம், பாடலூரைச் சேர்ந்த தனசேகரன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு 4 வயதில் ஆசித் என்ற மகன் இருக்கிறார். மாலதி, மாயனூரில் தாய் தமிழரசி, மகன் ஆசித் ஆகியோருடன் வசித்துவந்தார். அவருடைய கணவர் தனசேகரன், வேலூர் மாவட்டத்திலுள்ள ஒரு போதை ஒழிப்பு மையத்தில் மேனேஜராகப் பணியாற்றிவருகிறார். இந்தநிலையில், தனசேகரன் தனது மகனையும், மனைவியையும் பார்க்க மாயனூர் வந்திருக்கிறார். அளவுக்கதிகமாக மதுகுடித்த மயக்கத்தோடு அங்கு வந்திருக்கிறார். அதனால், கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், வெறுப்படைந்த மாலதி தனது வீட்டிலுள்ள மின்விசிறியில், சுடிதார் துணியில் தூக்குப் போட்டுக்கொண்டு தற்கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. அதைப் பார்த்த மாலதியின் மகன் ஆசித், தாய் தற்கொலை செய்ய முயல்வதைக் கண்டு கதறி அழுதிருக்கிறான். இதனால், முழுபோதையில் இருந்த தனசேகரன் தனது மகன் அழுவதைப் பார்த்து, 'அழாதே' என்று அதட்டியிருக்கிறார்.

மதுபோதையில் படுத்துறங்கும் தனசேகரன்
மதுபோதையில் படுத்துறங்கும் தனசேகரன்

ஆசித், மாலதி தூக்கில் தொங்குவதைக் கைகாட்ட, அதைக் கண்ட தனசேகரன் போதையோடு தள்ளாடிப் போய் மனைவி தூக்கில் தொங்கிய சுடிதார் துணியை அறுத்து மனைவியின் உடலைத் தரையில் போட்டுவிட்டு, மீண்டும் குடிபோதையில் தூங்கியிருக்கிறார். பின்னர், அவர்களின் மகன் ஆசித் அருகில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவிக்க, பொதுமக்கள் அங்கே குவிந்தனர். மாலதி இறந்து கீழே கிடக்க, அவர் அருகிலேயே தனசேகரும் முழுபோதையில் தூங்கியதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால், உடனடியாக அங்கிருந்தவர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த மாயனூர் காவல் நிலைய போலீஸார், தற்கொலை செய்துகொண்டு இறந்த மாலதியின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, இது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். முழு போதையில் இருந்ததால், மனைவி தற்கொலை செய்வதைக் கண்முன் பார்த்தும் கணவனால் தடுக்க முடியாமல் போன சம்பவம், அந்தப் பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு