Published:Updated:

குஜராத்: திருமணம் தாண்டிய உறவு... எச்சரித்த கணவனை கொலை செய்த மனைவி, ஆண் நண்பருடன் கைது!

திருமணம் தாண்டிய உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்த பெண், ஆண் நண்பருடன் கைது செய்யப்பட்டார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிபின் சந்திரா பட்டேல் என்பவர் கடந்த மாதம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார். வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவமனையில் பிபின் சந்திராவின் மனைவி தனது கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்தார். டாக்டர்கள் சோதித்து பார்த்துவிட்டு, அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பிபின் சந்திரா இறந்து பல நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பிபின் சந்திராவின் மனைவி தீப்தியும் அவரது ஆண் நண்பர் சவுரப் சுதார் என்பவரும் சேர்ந்து இக்கொலையை செய்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

சித்தரிப்பு படம்
சித்தரிப்பு படம்

உடனே போலீஸார் இரண்டு பேரையும் பிடித்து சென்று விசாரித்த போது இருவரும் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இது குறித்து இவ்வழக்கை விசாரிக்கும் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``இருவருக்குமான திருமண உறவு தாண்டிய உறவு குறித்து பிபின் சந்திராவிற்கு தெரிய வந்தவுடன், அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. எனவே பிபின் சந்திராவை கொலை செய்ய தீப்தியும் அவரது ஆண் நண்பரும் சேர்ந்து முடிவு செய்தனர். சுதார் தனது நண்பர் ஜடின் என்பவரிடமிருந்து தூக்க மாத்திரை வாங்கியுள்ளார். ஜடின் மனைவி மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக பணியாற்றுகிறார். அவரிடம் சொல்லி ஜடின் தூக்க மாத்திரை வாங்கி சுதாரிடம் கொடுத்துள்ளார்.

திருமணம் தாண்டிய உறவு; சிக்கன் கிரேவியில் விஷம்! - குழந்தையுடன் தற்கொலை செய்த தாய்

சுதார் அவற்றை தீப்தியிடம் கொடுத்துள்ளார். இரவில் தீப்தி தூக்க மாத்திரையை பாலில் கலந்து பிபினுக்கு கொடுத்துள்ளார். பிபின் உறங்கியவுடன் தலையனையை எடுத்து முகத்தில் அமுக்கி கொலை செய்துள்ளார். காலையில் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி 108 ஆம்புலன்ஸை வரவழைத்து பிபினை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். உறவினர்கள், போலீஸாரிடமும் தனது கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி நம்ப வைத்துவிட்டதாக” அவர் தெரிவித்தார். இருவரும் கைது செய்யப்பட்டு மேற்கொண்டு விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு