Published:Updated:

பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் தலை துண்டித்துக் கொலை! - திண்டுக்கல்லில் அதிர்ச்சி

9 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைக்குப் பழியாக பட்டப்பகலில் தெருவில் நின்றுகொண்டிருந்த பெண் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் திண்டுக்கல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன். இவர் 2012, ஜனவரி 10-ம் தேதி திண்டுக்கல் அருகே நத்தவனப்பட்டியில் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில், தூத்துக்குடி மாவட்டம், மூலக்கரைப் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உட்பட 18 பேர் மீது தாடிக்கொம்பு போலீஸார் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டனர். இந்த 18 பேரில் முத்துபாண்டி, புறா மாடசாமி உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துவிட்டனர். மீதமுள்ள 14 பேர் மீது திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.

நிர்மலாதேவி
நிர்மலாதேவி

இந்தநிலையில் இந்த வழக்கில் 5-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி இ.பி காலனியைச் சேர்ந்த நிர்மலாதேவி என்பவர் மர்ம நபர்களால் இன்று காலை 10 மணிக்கு தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டார்.

கொலை
கொலை

திண்டுக்கல் இ.பி காலனி பகுதியிலுள்ள தண்ணீர்த் தொட்டி அருகே நின்றுகொண்டிருந்த நிர்மலாதேவியை, மர்ம நபர்கள் தலையைத் துண்டித்து எடுத்து நந்தவனப்பட்டி பகுதியிலுள்ள பசுபதி பாண்டியனின் வீட்டின் முன்பு வீசிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

தாடிக்கொம்பு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று நிர்மலாவின் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்துவருகின்றனர். மாவட்ட எஸ்.பி சீனிவாசன் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தார்.

விசாரணை
விசாரணை

இவர் பசுபதி பாண்டியனைக் கொலை செய்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது, பசுபதி பாண்டியனிடம் செல்போனில் பேசி வீட்டைவிட்டு வெளியே வரவழைத்தது எனக் கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைக்குப் பழியாக பட்டப்பகலில் தெருவில் நின்றுகொண்டிருந்த பெண் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், திண்டுக்கல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு