Published:Updated:

ஈரோடு: இரவில் வீடு புகுந்த முகமூடிக் கும்பல்; அரிவாளைக் காட்டி மிரட்டி நகை, பணம் கொள்ளை!

நகை, பணம் கொள்ளை

நேற்று இரவு 8:20 மணியளவில் இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர் முகத்தைத் துணியால் மூடியபடி வீட்டுக்குள் புகுந்து அங்கு பேசிக்கொண்டிருந்த யசோதா உள்ளிட்ட வீட்டில் இருந்தவர்களை அரிவாளையும் கத்தியையும் காட்டி மிரட்டியிருக்கின்றனர்.

ஈரோடு: இரவில் வீடு புகுந்த முகமூடிக் கும்பல்; அரிவாளைக் காட்டி மிரட்டி நகை, பணம் கொள்ளை!

நேற்று இரவு 8:20 மணியளவில் இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர் முகத்தைத் துணியால் மூடியபடி வீட்டுக்குள் புகுந்து அங்கு பேசிக்கொண்டிருந்த யசோதா உள்ளிட்ட வீட்டில் இருந்தவர்களை அரிவாளையும் கத்தியையும் காட்டி மிரட்டியிருக்கின்றனர்.

Published:Updated:
நகை, பணம் கொள்ளை

ஈரோடு மாவட்டம், சித்தோடு, செல்லப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (59). இவர் ஈரோடு மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராகப் பணிபுரிந்துவருகிறார். இவருக்கு யசோதா (49) என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். மகளுக்குத் திருமணமாகிச் சென்றுவிட்ட நிலையில் மகனுடன், தம்பதி வசித்துவந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு 8:20 மணியளவில் இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் முகத்தைத் துணியால் மூடியபடி வீட்டுக்குள் புகுந்து அங்கு பேசிக்கொண்டிருந்த யசோதா உள்ளிட்ட வீட்டில் இருந்தவர்களை அரிவாளையும் கத்தியையும் காட்டி மிரட்டியிருக்கின்றனர். யசோதா கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடி, வளையல், கம்மல், மூக்குத்தி மற்றும் வீட்டு பீரோவிலிருந்த 22 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டதுடன், பணம் ரூ.1.8 லட்சத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர். சித்தோடு காவல் ஆய்வாளர் முருகையன் வழக்கு பதிவுசெய்து இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவருகிறார்.

கொள்ளை நடந்த வீடு.
கொள்ளை நடந்த வீடு.

தொடர்ந்து மோப்பநாய் ராக்கி, கொள்ளை நடந்த வீட்டுக்கு அழைத்துவரப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.
கொள்ளை நடந்த வீடு சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையையொட்டி இருப்பதால் எப்போதும் பரபரப்பாக இயங்கிவரும் பகுதியாகும். அந்தப் பகுதியில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவிலும், வீடு, கடைகளில் பதிவாகியிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோவையும் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். கொள்ளைச் சம்பவத்தில் முன்னாள் கொள்ளையர்களுக்குத் தொடர்பிருக்கிறதா, அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்களின் உதவியுடன் கொள்ளை நடந்திருக்கிறதா, கொள்ளைச் சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்களுக்குத் தொடர்பிருக்கிறதா எனப் பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.