Published:Updated:

புதுக்கோட்டை: காய்கறி வியாபாரி வீட்டில் 80 பவுன் நகை, 2 லட்சம் பணம் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை!

கொள்ளை

காய்கறி வியாபாரி வீட்டில் நகை, பணத்தைக் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

புதுக்கோட்டை: காய்கறி வியாபாரி வீட்டில் 80 பவுன் நகை, 2 லட்சம் பணம் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை!

காய்கறி வியாபாரி வீட்டில் நகை, பணத்தைக் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

Published:Updated:
கொள்ளை

புதுக்கோட்டை போஸ் நகரைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் மனைவி ராஜலட்சுமி. இவர் புதுக்கோட்டை கீழ மூன்றாம் வீதியிலுள்ள பெருமாள் கோயில் மார்க்கெட்டில் தக்காளி மொத்த வியாபாரம் செய்துவருகிறார். இவர் மகன் செந்தில்குமார் (35). இவரும் தன் தாயுடன் சேர்ந்து தக்காளி வியாபாரத்தைக் கவனித்துவருகிறார். அதோடு செந்தில்குமாரின் மனைவி அனுவும் வியாபாரத்தில் உதவியாக இருந்துவருகிறார். 

இந்த நிலையில் வழக்கம்போல், வீட்டைப் பூட்டிவிட்டு மூன்று பேரும் காய்கறி வியாபாரத்துக்குச் சென்றனர். அடுத்த சில மணி நேரத்தில் வீட்டுக்கு வந்து பார்த்த செந்தில்குமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் ஒவ்வோர் அறையிலும் வைத்திருந்த மூன்று பீரோக்களும் உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருள்களெல்லாம் சிதறிக் கிடந்தன. 

உடனே, கணேஷ்நகர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, காய்கறிக் கடைக்குச் சென்ற செந்தில்குமார், தன் தாயையும் மனைவியையும் வீட்டுக்கு அழைத்து வந்தார். பீரோக்களிலிருந்த நகைகள், பணம் கொள்ளைபோனதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். 

புதுக்கோட்டை: காய்கறி வியாபாரி வீட்டில் 80 பவுன் நகை, 2 லட்சம் பணம் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை!

இதையடுத்து, புகாரின்பேரில் நகர் டி.எஸ்.பி ராகவி, இன்ஸ்பெக்டர்கள் குருநாதன், முகமது ஜாபர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களைச் சேகரித்தனர். இதில், வீட்டின் பீரோக்களிலிருந்த 82 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் கொள்ளைபோனது தெரியவந்திருக்கிறது. தடயங்கள் எதுவும் சிக்காமல் இருக்கவும், மோப்ப நாய் கண்டுபிடிக்காமல் இருக்கவும் அறை முழுவதும் ஆங்காங்கே மிளகாய்ப்பொடியை மர்ம நபர்கள் தூவிச்சென்றிருந்ததும் தெரியவந்தது. முதலில்  செந்தில்குமாரின் தாய் ராஜலெட்சுமி, மனைவி அனு ஆகியோரிடம் போலீஸார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். தொடர்ந்து, இது குறித்து வழக்கு பதிவுசெய்த போலீஸார், மர்மநபர்களைத் தேடிவருகின்றனர். காய்கறி வியாபாரி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.